செய்திகள் - 28-12-2012
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 11:47 PM]
| மாணவர் விடுதலையைப் பொருட்படுத்தாமல் யாழ். பல்கலைக்கழகத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் படைத்தரப்பினருக்கு பல்கலைக்கழகச் சமூகத்தைக் காட்டிக்கொடுக்கத் துணிந்திருக்கும் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் திரைமறைவில் திட்டங்களைத் தீட்டியிருக்கின்றார். என தகவல்கள் கசிந்துள்ளன. |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 04:34 PM]
| யாழ்ப்பாணத்தில் காணாமல் போன 4 வயது சிறுமியொருவர் இன்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 04:28 PM]
| கொழும்பு சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி சந்தேகநபர்களுக்கும் புனர்வாழ்வு பயிற்சி வழங்கி அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயலத் ஜெயவர்த்தன கேட்டுக்கொண்டுள்ளார். |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 04:27 PM]
| யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 04:06 PM]
| வடக்கும் கிழக்கும் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கட்சி மாநாடு தேவைதானா? என கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயரும், முஸ்லிம் தமிழ் தேசிய கூட்டணியின் தலைவருமான அஸாத் ஸாலி கேள்வியெழுப்பியுள்ளார். |
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 03:39 PM]
| ஜனநாயக மக்கள் முன்னணியின் இடர் நிவாரண குழுவும், மொரட்டுவை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்ற மாணவர்களும் இணைந்து, வட கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக, தலைநகரில் உலர் உணவு பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். |
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 02:55 PM] [  ]
| முல்லைத்தீவில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கியமான வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 02:42 PM]
| இலங்கையில் அண்மைக்காலமாக பல இடங்களில் பெய்ததாகக் கூறப்படும் சிவப்பு மழையின் துளிகளில் அல்கா வகை உயிரினங்கள் காணப்பட்டதாக அது குறித்து ஆராய்ந்த இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை இயக்குனரான டாக்டர் அனில் சமரநாயக்கா கூறியுள்ளார். |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 02:17 PM] [  ]
| கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமழை காரணமாக இடம்பெயர்ந்துள்ள கிளிநொச்சி சாந்தபுரம் கிராம மக்களுக்கு கனடா வாழவைப்போம் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கியுள்ளது. |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 01:17 PM]
| வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்று சென்ற பாதுகாப்பு படையினர் அங்குள்ள கைதிகளிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்துப் பெற்றதாக முன்னிலை சோஷலிசக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 12:50 PM]
| யாழ். நகரப் பகுதியில் தென்னிலங்கை சிங்கள வியாபாரிகளின் வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக தமிழ் வர்த்தகர்களின் வயிற்றிலடிக்கும் செயலினை யாழ். மாநகர முதல்வர் மேற்கொண்டிருப்பதாக தமிழ் வர்த்தகர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். |
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 12:24 PM]
| யாழ். வட்டுக்கோட்டைப் பகுதியில் நபரொருவரின் சடலம் இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. |
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 12:10 PM] [  ]
| கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதையடுத்து, மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முற்றாக இடம்பெயர்ந்துள்ளனர். |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 11:54 AM]
| நிவித்திகல பிரதேசத்தில் மாணிக்கக்கல் சுரங்கத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 11:26 AM]
| கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் கட்டுமான வேலைகளை அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் பூர்த்தி செய்யவிருப்பதாக துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 10:17 AM]
| அடுத்த மாதம் முதல் யாழ் மாவட்டத்திற்கு தடையின்றி மின் விநியோகம் மேற்கொள்ள சகல நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய மின்சார சபையின் பிரதம பொறியிலாளர் அறிவித்துள்ளார். |
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 10:16 AM]
| யாழ்.போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணர் திருமாறன் மீது வாள் வெட்டு மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக யாழ் பொலீஸ் நிலைய சிரேஸ்ட அத்தியட்சகர் எம்.சி.எம். எம் ஜிவ்ரி தெரிவித்தார். |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 09:35 AM] [  ]
| இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினால் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்னாவுடன் செய்துகொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமானது, இலங்கையில், குறிப்பாக தலைநகர் கொழும்பிலும், இலங்கையின் தென் பகுதிகளிலும் பாரிய எதிர்வலைகளை உருவாக்கியிருந்தது. |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 08:29 AM]
| இலங்கையில் நாளைய தினம் நில அதிர்வு ஒன்று ஏற்படும் என்று, இலங்கையின் ஆராய்ச்சியாளரான லலித் விஜயவர்தன தெரிவித்திருந்தார். எனினும் இதனை புவிசரிதவியல் மற்றும் சுரங்கதொழில் திணைக்களத்தின் தலைவர் என்.பீ. விஜயானந்த நிராகரித்துள்ளார். |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 08:10 AM]
| ரத்தோட்டை தமிழ் குடும்பஸ்தர் ஒருவரை பெரும்பான்மை இன இளைஞர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் சம்பந்தமாக பொலிஸ்மா அதிபர் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 06:33 AM]
| உட்சந்தை மோசடி தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமெரிக்க கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம், தம்மீது சுமத்தப்பட்டிருந்த குடியியல் வழக்கில் நட்ட ஈட்டு தொகையை செலுத்தியுள்ளார். |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 06:27 AM]
| இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய தமிழ் பிரஜைகளை பிரித்தானிய சிறைகளுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கோரியுள்ளது. |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 05:40 AM]
| ஆயிரம் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் இராணுவப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 05:21 AM]
| அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை கொன்சோல் பந்துல ஜயசேகரவின் கருத்து ஒரு பக்கச்சார்பானது என முன்னாள் இலங்கைக்கான அவுஸ்திரேலிய இராஜதந்திரி புருஸ் ஹெ தெரிவித்துள்ளார். |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 04:00 AM]
| தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பபட்டுள்ளார். |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 03:47 AM]
| அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 03:28 AM]
| கடன் தொல்லையிலிருந்து மீள கொள்ளையிட முயற்சித்த படைவீரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 03:22 AM]
| சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை கடத்திய நபரிடமிருந்து ஒன்றரை கோடி ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது. |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 03:14 AM]
| நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்பட்டு வருவதாக சட்டக்கல்லூரி அனுமதிக்கான மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ரம்சீ பாச்சா தெரிவித்துள்ளார். |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 03:11 AM]
| இங்கிலாந்தில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகத் தெரிவித்து பாரியளவில் நிதி மோசடியில் ஈடுபட்ட இரண்டு நைஜீரிய நாட்டு பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 03:09 AM]
| தூதரக அதிகாரிகளின் சேவைகளை வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் வழங்கி வருவதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 02:54 AM] [  ]
| மலேசியா கோலாலம்பூரில் இன்று நடைபெறவிருக்கும் 2வது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 02:07 AM]
| நாடாளுமன்றத்தை கலைப்பதன் மூலம் தற்போது நாட்டில் எழுந்துள்ள நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையிலான முறுகலை தவிர்க்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 01:42 AM]
| நோர்வே தூதரகத்தினால் விடுதலைப்புலிகளுக்கு வானொலி உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டமையை சிங்கள கடும்போக்காளர்களும் சமாதானத்துக்கு எதிரானவர்களும் எதிர்ப்பதாக அமெரிக்க தூதரகம் இராஜாங்கத் திணைக்களத்துக்கு அறிவித்திருந்தது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 01:33 AM]
| வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு;ள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தன தலைமையிலான குழுவினர் இன்று சந்திக்கவுள்ளனர். |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 01:15 AM]
| இலங்கையின் நடைமுறை சீரற்ற காலநிலையின் போது மாத்தளையில் நூறுக்கும் மேற்பட்ட இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 01:10 AM]
| பரீட்சைகளில் குளறுபடி ஏற்படும் பட்சத்தில் நாட்டிலும் குளறுபடிகள் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் பெறுமதியானது. எனவே பரீட்சை வினாத்தாள் மோசடிக்காரர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும். இவ்வாறு மகா சங்கத்தினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 12:55 AM]
| மன்னார் ஆயர் வண. பிதா. ராயப்பு ஜோசப் மீது குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. |
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 12:44 AM]
| கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்ட இரு இளைஞர்களிற்குமான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க மத்திய விசாரணைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 12:27 AM]
| சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட பிறகு, அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த அந்த பத்திரிகை அவர் வகுத்த பாதையில் இருந்து விலகுவதாக விமர்சகர்கள் குறை கூறுகின்றனர். |
[வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 12:00 AM]
| மாணவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை வைத்திருந்ததுடன், அந்த அமைப்பை மீண்டும் உருவாக்கும் வகையில் செயற்பட்டதாகவும் யாழ். இராணுவ தளபதி ஹத்துருசிங்க பீடாதிபதிகளிடம் கூறியிருந்த குற்றச்சாட்டை கைதாகியுள்ள மாணவர்கள் மறுத்துள்ளனர். |
|
[ Sunday, 16-06-2013 04:00:13 ]
| இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான். |
|