செய்திகள் - 13-01-2013
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 04:34 PM]
| முல்லைத்தீவு கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் அரச அடிவருடியாக செயற்பட்டுவரும் நிலையில் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபரிகள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாக குற்றம்சாட்டப்படுகின்றது. |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 04:26 PM]
| பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை பதவி விலக்கும் அதிகாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 04:25 PM] [  ]
| இறுதி யுத்தத்தின் பின்னரும், நலன்புரி நிலையத்தில் இருந்த போதும் இராணுவத்தினரிடம் சரணடைந்து ஒரு வருட புனர்வாழ்வுப் பயற்சியளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 313 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 03:32 PM]
| தமிழ்ப் பிரதேசங்களை முஸ்லிம் பிரதேச செயலகத்துடன் இணைக்கும் அரசின் சதி எம் இனத்தின் மௌனத்தை சீண்டிப் பார்ப்பதாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
(2ம் இணைப்பு)
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 03:24 PM]
| இலங்கையின் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து சிராணி பண்டாரநாயக்கா அவர்கள் இலங்கை ஜனாதிபதியால் நீக்கப்பட்டதாக் அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அவருக்கு நீதி கிடைக்கும் வரை தமது போராட்டத்தை இலங்கை சட்டத்தரணிகள் தொடருவார்கள் என்று அவர்களுக்கான அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி K.S. ரட்ணவேல் கூறியுள்ளார். |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 02:44 PM]
| வவுனியாவில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 02:35 PM]
| பலத்த எதிர்ப்புகள் இருந்தாலும் அரசாங்கம் தான் நினைத்தது போன்றே திவிநெகும சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் திவிநெகும சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது மூன்றில் இரண்டுக்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 02:14 PM]
| அனைத்து மக்களுக்கும் தமிழ்ப் பொங்கல் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். தங்கள் உறவுதனில் புத்தாண்டு பொங்கி பொங்கலாய் புத்தெழில் கொண்டு உயர்வுறும் நாள் இது. ஐரோப்பா வாழ் எம் தமிழ் உறவுகளுக்கு காலத்தால் அழியாத எம் வரலாற்றுப் பணியினை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் இவ் ஆண்டில் அறிமுகப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 01:17 PM]
| இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக் சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், சவூதியுடனான இராஜதந்திர உறவுகள் பிரிவினைகளின்றி முன்னெடுக்கப்படுவதாக, வெளியுறவுகள் துறை அமைச்சின் தொடர்பு பணிப்பாளர் சரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 12:03 PM] [  ]
| தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகம் முற்றுகையிடப்பட்டு வெடிபொருட்கள், மற்றும் பல பொருட்கள் மீட்கப்பட்டதாக பரபரப்பான செய்திகள் அரசாங்கத்தினதும், ஈ.பி.டி.பி யினரதும் ஊடகங்களில் தொடர்ச்சியாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 11:31 AM]
| குற்றவியல் பிரேரணை குறித்த போராட்டத்தில், அரசாங்கமும், நீதித்துறையும் தோல்வி அடைந்திருப்பதாகவும், ஆளும் கட்சியில் உள்ள அனைவரும் ஜனாதிபதியின் பொம்மலாட்ட பாவைகளாக செயற்பட்டு வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 11:23 AM]
| நிரந்தர நியமனத்தைப் பெறுவதற்காக தமது சொந்த செலவில் கொழும்பு சென்று மஹிந்தவின் ஆட்சி மகிமை நிறைந்த ஆவணப்படத்தை பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர் வடக்கு கிழக்கை சேர்ந்த 15,000 பட்டதாரி பயிலுனர்கள். |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 10:28 AM]
| வவுனியா, சுந்தரபுரம் பொடுங்கன்பிலவு குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 10:13 AM]
| யாழ்ப்பாணம் உசன் சந்திப்பகுதியில் உள்ள ரயர் கடை ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 09:32 AM]
| கிளிநொச்சியில் இருக்கும் தமது அலுவலகத்தில் இருந்து பயங்கரவாதத் தடுப்பு பொலிசார் கைப்பற்றியதாக தெரிவித்துள்ள பொருட்கள் எதுவும் தமது அலுவலகத்தில் இருந்து மீட்டிருக்க முடியாது, இது அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு சதிச் செயல் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 09:18 AM]
| சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர் ராஹீத் 10 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளார். |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 08:26 AM]
| யாழ். மாவட்டத்தில் கீரிமலை, சேந்தாங்குளம் கடலில் குளிக்கச் சென்று காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவனின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 06:49 AM]
| மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிட நிர்மாணப் பணிகளின் போது வெட்டப்பட்ட மண் குழியிலிருந்து, இதுவரை 74 எலும்புக் கூடுகளும் 60 மண்டையோடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். |
(3ம் இணைப்பு)
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 06:31 AM] [  ]
| இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 05:59 AM] [  ]
| மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து சமுர்த்தி பயனாளிகளையும், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
|
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 05:34 AM]
| இந்த ஆண்டில் இலங்கை அரசாங்கம் இரண்டு முக்கியமான வெளியகச் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. இந்த இரண்டு சவால்களுக்குமே அடிப்படைக் காரணமாக இருப்பது ஒன்றுதான். மனித உரிமைகள் தான் அந்தக் காரணம். |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 05:24 AM]
| இலங்கையில் முதல் தடவையாக கழிப்பறை வசதிகளுடனான அதிசொகுசு பஸ் சேவையினை அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 05:13 AM]
| ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் அங்கத்துவம் பெறும் நாடுகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்புகளைக் கொண்டுள்ளதாகவும் இலங்கையின் நிலைவரங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கமளித்து வருவதாகவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 04:48 AM]
| சமையல் எரிவாயு விலையேற்றத்தால் தமது தொழிற்துறையினை முன்னெடுத்து செல்வதில் பெரும் இக்கட்டான நிலை தோன்றியுள்ளதாக அகில இலங்கை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 04:38 AM]
| தமிழ்நாட்டில் கோவையில் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் பங்கேற்ற இலங்கையைச் சோ்ந்த பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட இரண்டு பேர் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 04:23 AM]
| பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணை சபையில் விவாதத்துக்கு வந்த போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹஸன் அலி சமுகமளிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 03:47 AM]
| பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் எனவும்,அது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அரசியல் வட்டாரங்களிலிருந்து நம்பகரமாகத் தெரியவருகின்றது. |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 02:24 AM]
| அரசாங்கத்துடன் தான் இணைந்து செயற்படப் போவதாக வெளியான தகவலை முன்னாள் பிரதம நீதியரசர் சரன் என் சில்வா மறுத்துள்ளார். |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 02:16 AM]
| வன்னி மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் அந்தரங்க செயலாளரும், குறித்த அமைச்சரின் உடன் பிறந்த சகோதரர் முறையிலான ஒருவர் மன்னார் தலைமன்னார் பகுதியில் உள்ள மக்களின் காணிகளை, போலி உறுதிகளை வைத்து அபகரித்து வருவதாக தலைமன்னார் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 02:09 AM]
| பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டமையை ஆட்சேபித்து சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லப் போவதாக சட்டத்தரணிகள் எச்சரித்துள்ளனர். சட்டத்தரணிகள் கூட்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 01:47 AM]
| இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் அமைப்பு தொடர்பான பிரச்சினைக்கு மத்தியி;ல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த வாரத்தில் பதில் பிரதம நீதியரசர் ஒருவரை நியமிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 01:36 AM]
| இலங்கையின் சுயாதீன நீதித்துறைக்காக தொடர்ந்தும் போராடப்போவதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 01:28 AM]
| அவுஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்கக் கோரி போராட்டம் நடத்தியவர்களை இலங்கை அதிகாரிகளுடன் தொடர்புடைய புலனாய்வாளர்கள் படம்பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 01:21 AM]
| நாட்டின் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 01:18 AM]
| பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 01:14 AM]
| இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி முருகன், தனது மனைவி நளினியைச் சந்திப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 01:11 AM]
| இலங்கையில் பிரதம நீதியரசர் பதவிக்காக எட்டு பேர் போட்டியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 12:29 AM]
| இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவருக்கு கட்டாரில் உள்ள நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. |
[ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 12:14 AM]
| ஜனாதிபதி என்ற உயர்பதவி வகிக்கும் எனது அதிகாரத்திற்கும் வரம்புகள் இருக்கின்றன. எனக்கு எதிராக பாராளுமன்றத்தில் குற்றப் பிரேரணை ஒன்றை தாக்கல் செய்து அதனை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால் அதற்குப் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்துவிடும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருந்து பறிக்கப்படும். |
|
[ Friday, 17-05-2013 16:12:03 ]
| எல்லோருக்கும் வணக்கம். எனது ஆய்வுத்துறை சார்ந்து பார்வையாளனாக பேசுவதற்கான எந்த முன்குறிப்புக்களும் ஆயத்தங்களும் இல்லாமல் வந்த ஒருவன் தற்போது உங்கள் முன்னால் பேசுவதற்காக நிற்கிறேன். ஆனால் பேசுவதற்கு – உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன. |
|