செய்திகள் - 14-01-2013
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 11:50 PM]
இலங்கையின் பிரதம நீதியரசரை பதவி விலக்கியமையானது பொதுநலவாய நாடுகளின் அரசியல் அமைப்பையும், கொள்கைளையும்  மீறும் செயலாகும். எனவே இலங்கை தொடர்பில் இந்த விடயத்தில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளதாக அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 11:41 PM]
வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மாபெரும் பதாகை கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் 15-01-2012 அன்று யாழ் நகரில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 11:30 PM]
இலங்கை அரசாங்கம் அந்த நாட்டின் நீதித்துறையையும் அதன் சுயாதீனத்தையும் மதித்து நடக்கவேண்டும் என்று கனடா கோரிக்கை விடுத்துள்ளது.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 09:40 PM]
கடுதாசித் துண்டொன்றில் நாட்டை ஆட்சி செய்த காலம் மீண்டும் இந் நாட்டில் உருவாக இனிமேலும் யாருக்கும் இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 05:49 PM]
இலங்கை சட்டக் கல்லூரிக்கு தெரிவான புதிய மாணவர்களைப் பதியும் நடவடிக்கைகள் ஒருவார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சட்டக்கல்லூரி அதிபர் டப்ளியு.டி.ருத்ரிகு தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 04:11 PM]
இலங்கையின் பிரதம நீதியரசர் பொறுப்புக்கு வரக்கூடியவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பரிந்துரை செய்கின்றவரின் பெயர் நாடாளுமன்ற கவுன்சிலால் செவ்வாயன்று பரிசீலிக்கப்படவுள்ளது என்று இக்கவுன்சிலின் உறுப்பினரான ஏ.ஹெச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 03:23 PM]
வவுனியா சமணங்குளப் பகுதியில் இன்று மதியம் உணவு சமைப்பதற்காக சமையல் எரிவாயு சிலிண்டரை இயக்கியவேளை, அது வெடித்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 03:22 PM]
இராணுவத்தை விட்டு கடந்த ஆண்டில் 71 ஆயிரத்து 458 பேர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 02:54 PM]
மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய காலம் மலர்ந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 11:58 AM]
மேர்வின் சில்வாவை களனி தொகுதியின் அமைப்பாளராக மீண்டும் நியமிக்கும்படி ஜனாதிபதிக்கு வலியுறுத்தி கையெழுத்து வேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 11:26 AM]
இலங்கையின் தலைமை நீதிபதி பொறுப்பில் வேறு ஒருவரை ஜனாதிபதி நியமித்தால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறுகிறது.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 10:52 AM]
காலநிலை மாற்றத்தினால் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாட்டின் பல பிரதேசங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 10:38 AM]
தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுகளைத் துண்டாட முயலும் செயற்பாட்டிற்கு தமிழ் தே. கூட்டமைப்பின் மட். மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் முழு எதிர்ப்பைத் தெரிவிப்பதுடன் இது குறித்து எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளையும் நடத்தி வருகிறது என த.தே,கூ இன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார். 
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 10:37 AM]
அரசியலமைப்புக்கு அமைவாக பிரதம நீதியரசர் பதவி வெற்றிடமாக காணப்படுகிறதென ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயதிஸ்ஸ டீ கொஸ்தா தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 09:59 AM]
பரந்தன் சந்திக்கும் கரடிப்போக்கு சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று நடைபெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 09:44 AM]
இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக் சிரச்சேதம் செய்யப்பட்டமை தொடர்பில் நோர்வே தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்பன் பார்த் எயிட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 08:32 AM]
பதினெட்டாவது திருத்தத்தால் பிரதம நீதியரசரை அப்பதவியிலிருந்து ஜனாதிபதியால் வெளியேற்ற முடியும். அதனை சட்டம் தடுக்க முடியாது. சட்டத்தின் ஆணைக்கு அப்பாற்பட்டவர் ஜனாதிபதி என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 08:10 AM]
மீள்குடியேற்றம் செய்யப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ளபோதும், அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றிக் கொடுக்கப்படாத நிலையில், கிராமத்தை விட்டே வெளியேறும் மனோநிலையுடன் தாம் இருப்பதாக முல்லைத்தீவு புத்துவெட்டுவான் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 08:00 AM]
வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் தற்போது புனர்வாழ்வு பெற்றுவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரும் புனர்வாழ்வுக் காலம் முடிந்த பின்னர் பல்கலைக்கழகத்தில் அவர்களது கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 07:51 AM]
இலங்கையின் 44ஆவது பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபரான மொஹான் பீரிஸ், நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 07:32 AM]
தை மாதமானது தமிழர்களின் மரபிற்குரிய மாதம். எனவே நமது தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலெல்லாம் தொடக்க நாள். இவ்வாண்டு முதல் தமிழ் ஆண்டு தொடக்க நாளான முதல்நாளை தமிழ் மரபுத் திங்களாக உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் பிரகடனப்படுத்துகின்றது.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 06:57 AM]
கடந்த 2008ம் ஆண்டு யூன் மாதம் 18ம் திகதி கனடிய அரசால் தடை செய்யப்பட்ட உலகத் தமிழர் இயக்கத்தின் மீதான தடை இரண்டு வருடங்களிற்கு ஒருமுறை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு வந்தது.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 06:51 AM]
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, தனது பதவி விலகல் கடிதம் கிடைக்கப் பெற்ற போதும், அப்பதவியிலிருந்து விலகுவதற்குத் தயாரில்லை என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 04:16 AM]
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா முதற்தடவையாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்து தனது நிலைப்பாட்டை விளக்கத் தீர்மானித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 03:52 AM]
விளையாட்டு உபகரணங்கள் தருவதாகக் கூறி இளைஞர்களையும், விளையாட்டுக் கழகங்களையும் ஏமாற்றி வருகின்றது ஜனாதிபதியின் புதல்வன் நாமல் ராஜபக்ஷவின் இளைஞர்களுக்கான நாளைய அமைப்பு என குற்றஞ்சாட்டப்படுகின்றது.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 03:07 AM]
தமிழர்களின் திருநாளாம் இந்த இனிய பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இன்றைய நாளில் சந்தோசம் பொங்கிட எமது வாசகப் பெருமக்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும் மற்றும் அனைத்து உலகத் தமிழ் மக்களுக்கும்  தமிழ்வின் இணையம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 02:40 AM]
சர்வதேசத்தின்  இலங்கை மீதான கடினமான பார்வையும், ஈழப்போரின் போதான ஐக்கிய நாடுகளவையின் தவறுகளை அதன் உள்ளகக் குழுவே சுட்டிக்காட்டிய ஆண்டாக 2012ம் ஆண்டு மனிதவுரிமைக்கான நம்பிக்கை தரும் ஆண்டாக அடையாளம் காட்டிச் செல்லும் அதேவேளை,
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 02:14 AM]
இலங்கை அரசின் பலதரப்பட்ட வேண்டுகோள்களையும் மீறி சவூதி அரேபியாவில் பணிப்பெண் ரிசான நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து அந்நாட்டுக்கான தூதுவர் அஹமட் ஜவாத் உடனடியாக திருப்பியழைக்கப்பட்டிருந்தார்.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 02:03 AM]
அரசியலமைப்பின் குறைபாடுகள் காரணமாக அழுத்தங்களை எதிர்நோக்க நேரிட்டது என சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 02:03 AM]
இலங்கையில் 1987ம் ஆண்டின் பின்னர் கடந்த ஆண்டு அதி கூடிய எயிட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 02:01 AM]
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 02:00 AM]
மனச்சாட்சியின் அடிப்படையில் தீர்மானம் எடுத்தேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 01:59 AM]
நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 01:56 AM]
புதிய பிரதம நீதியரசரை நியமிக்கும் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.  நாடாளுமன்ற வளாகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 01:52 AM]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதியின் முன்னாள் அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மேர்வின் சில்வாவுக்கு வெளிநாட்டு உயர்ஸ்தானிகர் பதவியொன்று வழங்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 01:25 AM]
ரிசானா நபீக்குக்கு தமது நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்காக உலக நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளமை தொடர்பில் சவூதி அரேபியா தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 01:21 AM]
அடுத்து வரும் நாட்களில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைச்சரவையை மாற்றியமைக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Advertisements
[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.