செய்திகள் - 16-01-2013
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 11:54 PM]
| கிளிநொச்சி கல்வி வலயத்தில் 331 ஆசிரியர்களுக்கு வெற்றிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 11:49 PM]
| இரத்மலானையில் தமது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொலை செய்தவர் தமது உண்மையான மகன் அல்ல என்று அவரின் தாயார் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 11:31 PM]
| இந்தியாவில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் போலியான கடவுச்சீட்டு மற்றும் ஆவணங்களுடன் பயணம் செய்தபோது இலங்கையர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 11:30 PM]
| ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக முன்னாள் பிரதமநீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுடன் இணைந்து செயற்பட தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 11:27 PM]
| நிறைவேற்று அதிகாரம் மற்றும் அரசியலமைப்பு தொடர்பில் இருக்கின்ற பிரச்சினைகளை சபாநாயகர் ச்சமல் ராஜபக்ச உணர்ந்துள்ளதால் நடைமுறை அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 06:09 PM]
| மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் மூவருக்கு 'சியாத் இயக்கம்' என்ற பெயரில் விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டலுக்கும், அமைச்சர் றிஸாட் பதீயூதினுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என குறித்த மூன்று ஊடகவியலாளர்களும் தெரிவித்துள்ளனர். |
(2ம் இணைப்பு)
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 06:04 PM] [  ]
| தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களுக்கு எதிராக இலங்கைப் புலனாய்வாளர்களுடன் ஈபிடிபி கட்சியினரும் சேர்ந்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 05:41 PM] [  ]
| ஈழத்தமிழினத்தின் சுய நிர்ணயத்திற்கான நீண்ட விடுதலைப் போராட்ட வரலாற்றில்; ஓய்வில்லாது வீசிய பெரும் புயல் கேணல் கிட்டு. தமிழீழப்போராட்டக்களத்தில் தனிமனித சரித்திரமாய் திகழ்ந்த மூத்த தளபதி கேணல் கிட்டு ஒரு காலத்தின் பதிவு. |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 04:23 PM]
| கஹாவத்தை பெண்கள் கொலைகளுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 04:20 PM]
| கோல்டன் கீ வைப்பாளர்களுக்கு நியாயம் வழங்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 03:56 PM]
| தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை தோற்கடித்து விட்டோம் என்று புளகாங்கிதம் கொள்கின்ற சிங்கள மக்களும், அவர்களின் தலைமைகளும் நிச்சயம் ஒரு விடயத்தை விரைவில் உணர்ந்து கொள்வார்கள். அது, தமிழர்களுக்கு நாங்கள் பிழை செய்து விட்டோம் என்பதாக இருக்கும். |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 03:33 PM]
| அரசாங்கம் பிடிவாதமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் தான்தோன்றித்தனமாகவும் செயற்பட்டுள்ளதென்பது அனைவருக்கும் விளங்கியுள்ளதாக ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 03:04 PM]
| மன்னாரில் உள்ள உள்ளுர் செய்தியாளர்கள் மூவருக்கு கடிதம் மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது குறித்து, அமைச்சர் ரிசாத் பதியுதீனை தொடர்புபடுத்தி இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்துக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் மறுத்துள்ளார். |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 02:07 PM] [  ]
| “தை பிறந்தால் வழி பிறக்கும்” எனும் தமிழர்களின் வாழ்வியலின் நம்பிக்கைச் சொல்வழிக்கமைய தமிழர் மரபுத் திங்களென தை மாதத்தினை தமிழினத்தின் பாராம்பரிய மாதமாக கனடாவிலுள்ள மாநகர சபைகள் பல அங்கீகரித்துள்ளமையானது பெருமைக்குரிய விடயமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 01:29 PM] [  ]
| அரச படைகளினால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி, இணையவழி மகஜர் கையெழுத்திடும் போராட்டத்தினை நடாத்த சமஉரிமை இயக்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 12:55 PM] [  ]
| யுத்தத்தால் அழிந்து போயுள்ள முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் ஒரு கோடியே 66 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 12:49 PM]
| புதுக்குடியிருப்பு - பரந்தன் வீதியில், புதுக்குடியிருப்புப் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிலையத்தை விரைவில் திறக்குமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 11:55 AM]
| மட்டக்களப்பில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 10:42 AM]
| தமிழகத்தில் உள்ள சித்திரவதை முகாம்களான செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி சிறப்பு முகாம்களை உடனடியாக மூடி, அங்கே இருக்கும் ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக தங்கள் குடும்பத்தினருடன் வாழ திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பி வைத்திட மாநில அரசு ஆவன செய்திட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 10:18 AM] [  ]
| இரு நாட்டு மீனவர் பிரச்சனைகளும் விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்பதே எமது விருப்பம். இதற்காக இருநாட்டு மீனவர்களும் கூடி கதைத்து ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும்” என்று யாழ் இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார். |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 09:08 AM]
| ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளார் நாயகத்தின் அண்மைக்கால அறிக்கைகள் எமக்கு இலங்கையின் விடயத்தில் பல உண்மையான தகவல்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கின்றன. |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 08:48 AM] [  ]
| வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரின் நகர்வுகள் குறித்த விளக்க வரைபடக் கண்காட்சி தகவல் நிலையம் என்ற பெயரில் புதுக்குடியிருப்பில் படையினரால் அமைக்கப்பட்டுள்ளது. |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 08:41 AM]
| இலங்கையில் இந்தியா மேற்கொண்டு வரும் வேலைத் திட்டங்கள் தொடர்பில் மீளாய்வுகள் மேற்கொள்வதற்காக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் எதிர்வரும் வாரத்தில் இந்தியாவுக்கு பயணம் செய்யவுள்ளார். |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 06:56 AM]
| கடந்த 2012ம் வருடம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய தமிழ்மொழி மூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியை பாடசாலைகள் ரீதியாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 06:48 AM]
| கிளிநொச்சியில் இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 06:22 AM]
| இலங்கை மிகவும் கீழ்மட்டத்தில் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 06:17 AM]
| புதிய பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டமை, இலங்கையின் நீதித்துறையை கேள்குறியாக்கி இருப்பதாக, சர்வதேச நீதித்துறை ஆணைக்குழு தெரிவத்துள்ளது. |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 06:08 AM]
| இலங்கையில் அதிகமான உப்பு மற்றும் சீனியின் பாவனையால் தொற்றாத நோய்கள் அதிகரித்துள்ளதாக மருத்துவ பரிசோதனை தரவுகள் தெரிவிக்கின்றன. |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 05:24 AM]
| காலி சிறையில் உள்ள கைதி ஒருவரிடம் இருந்து ஒரு தொகை ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது. |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 04:07 AM]
| கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இரவு நேரப் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 03:51 AM]
| இலங்கை இராணுவத்திலிருந்து கடந்த வருடத்தில் 33 ஆயிரத்து 532 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 02:42 AM]
| வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக சில பிரதேசங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இலக்காகி க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்ற முடியாத மாணவர்களுக்கென விசேட பரீட்சை அடுத்த மாதம் 9ம், 10ம், 11ம் திகதிகளில் நடாத்தப்படவுள்ளன. |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 02:32 AM]
| அம்பாறை மாவட்டத்தில் நடத்தப்படவிருந்த தயட்ட கிருள எனப்படும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 02:30 AM]
| எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு அரசாங்கம் மதிப்பளிப்பதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 02:29 AM]
| இலங்கைச் சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியோனமை குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 02:29 AM]
| மக்களின் நலனுக்காக தொடர்ந்தும் பாடுபடுவேன் என முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 02:28 AM]
| ஆட்சியாளர்களின் பிழையான தீர்மானங்களினால், காலணித்துவ நாடுகளின் சூழ்ச்சித் திட்டங்களை வலுப்படுத்தும் என காலணித்துவ நாடுகளுக்கு எதிரான அமைப்பின் அழைப்பாளர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார். |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 01:21 AM]
| ரிசானா நபீக் சிரச்சேதம் செய்யப்பட்டமையும் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் வீட்டுக்கு முன்னால் பால்சோறு பரிமாறியமைiயும் ஒரேவகையான செயல்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகேசன் நிரஞ்சன் என்பவர் கொழும்பு டெலிகிராப்பில் எழுதியுள்ள கட்டுரையில் இந்த விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது. |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 01:11 AM]
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த வாரத்தில் கூடி தமது அமெரிக்க பயணம் தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரியவருகிறது. |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 12:49 AM] [  ]
| இசைப்பிரியாவின் அதிர்ச்சியில் மௌனித்து இருந்த போராளி, அடுத்த சில நிமிடங்களில் போரின் உக்கிரமானத் தருணங்களை மீண்டும் சொல்லத் தொடங்கினார். |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 12:46 AM]
| இலங்கையின் புதிய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர் பிரதம நீதியரசராக பதவியேற்ற சில மணித்தியாலங்களில் இது தொடர்பான முறைப்பாடு லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 12:35 AM]
| சிராணி பண்டாரநாயக்கவின் பதவி விலக்கலில் அரசியல் இருக்கக்கூடாது என்று குரலெழுப்பப்படடு வந்தது. எனினும் தமது அந்த கோரிக்கை பிழையானது என்று தெரிகிறது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார். |
[புதன்கிழமை, 16 சனவரி 2013, 12:21 AM] [  ]
| ஒரு சுதந்திர வீரனுக்குரிய அனைத்துச் சிறப்பியல்புகளும் அவனிடமிருந்தன. அதனால் அவன் ஒரு அற்புதமான இலட்சியவாதியாக வாழ்ந்தான். போராடினான். போர்க்களத்தில் வீரனாகவும், பொதுமக்களின் தோழனாகவும் எங்கும் எல்லாவற்றிலும் எல்லோரிடமும் அவனது ஆளுமையின் வீச்சு நிறைந்திருந்தது. |
|
[ Saturday, 25-05-2013 18:03:35 ]
| முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம். |
|