செய்திகள் - 17-01-2013
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 11:46 PM]
இலங்கை அரசாங்கத் தரப்பினர் தமது தரப்பின் அனைத்து விடயங்களையும் அவதானித்து இறுதியில் பின்கதவால் தமது தாயை அனுப்பிவிட்டனர். இந்தக் கருத்தை முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் மகன் ஷவீன் குறிப்பிட்டுள்ளார்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 11:40 PM]
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் பதவி விலக்கல் தொடர்பில் அமெரிக்கா உட்பட்ட சர்வதேச நாடுகள் விடுத்திருந்த எச்சரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 06:15 PM]
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் கடற்கரைப் பகுதியில் நண்பர்களுடன் நீராடச்சென்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்டான்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 04:03 PM]
ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, சட்டத்தரணிகளான ஜே.சி வெலியமுன மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு அச்சுறுத்தல் கடிதங்களை கிடைத்துள்ளதாக ஜே.சி வெலியமுன தெரிவித்தார்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 03:47 PM]
இலங்கையின்  உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இலங்கை கடற்படையினால் பல வாரங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானிய சரக்குக் கப்பல் ஒன்று தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 03:25 PM]
களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவலவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எதிர்வரும் 31ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 02:43 PM]
கிளிநொச்சி மாவட்டத்தில் போர் முடிவுக்கு வந்த பின்னர் 58 ஆயிரத்து 586 தனிநபர் மிதிவெடிகளும், 148 தாங்கி எதிர்ப்பு மிதி வெடிகளும் மீட்கப்பட்டதாக வடபிராந்திய மிதிவெடி செயற்பாட்டு அலுவலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 02:23 PM]
அவுஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சனி என்ற இலங்கை தமிழ்ப் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 02:16 PM]
இலங்கை பெண்ணை கரம் பிடிக்கும் இந்திய மேஜருக்கு பயிற்சி கட்டணங்களை செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 01:53 PM] []
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி சம உரிமை இயக்கத்தினால் இணையத்தள மகஜர் கையெழுத்திடல் போராட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 01:37 PM]
படைவீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சகல கௌரவங்களும் அளிக்கப்படும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 01:21 PM]
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடிக் கண்காணிப்பில் உள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையத்தின் இணையத்தளம் முடக்கப்பட்டமை தொடர்பாக தனக்கு தெரியாது என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 01:01 PM] []
யாழ்ப்பாணத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் ஆடை அணிந்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 12:46 PM] []
மத்திய கிழக்கிலிருந்து இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட சிகரட் மற்றும் அதிவேக மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 12:36 PM]
பிரதம நீதியரசருக்கு எதிரான திருட்டு குற்றப்பிரேரணையை பாராளுமன்றில் சட்டவிரோதமாக நிறைவேற்றியதன் மூலம் இலங்கை ஏகாதிபத்திய நாடாக மாற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 12:35 PM]
மட்டக்களப்பு தொப்பிகல பிரதேசத்தில் யுத்த காலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்களை இன்று மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 12:24 PM]
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க இந்தோனேஷியா அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 11:42 AM] []
கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்திலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றிற்கு அருகில் அமைந்துள்ள கட்டிடத்தில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 11:24 AM] []
மாந்தை கிழக்கு பாலிநகர் கிராமத்தில் வெள்ள நிவாரன கையளிப்பு நிகழ்வொன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தற்போது நாடு பாரிய அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான அடக்கு முறைகளுக்கு எதிராக மூவின மக்களும் குரல் கொடுப்போம் என தெரிவித்தார்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 10:57 AM]
அம்பாறை மாவட்டம் கோமாரியில் மேச்சலுக்குச் சென்ற ஆடுகளைத் தேடிச் சென்ற பெண் ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்க்கப்பட்டார்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 10:45 AM]
பாவனைக்குப் பொருத்தமற்ற ஒருதொகுதி ரின்மீன்கள் பேலியகொட நகரில் கைப்பற்றப்பட்டுள்ளன.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 10:28 AM]
விடுதலைப் புலிகளுக்கு எதிரான பயங்கரவாதத்தை தோற்கடித்த பின்னர் ஸ்திரமடைந்த இலங்கையின் ஸ்திரநிலையை மீண்டும் சீர்குலைக்கும் மேற்குலக சதி கட்டவிழ்த்து விடப்படுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 08:11 AM] []
ஊடகவியலாளர்களுக்கான எல்லையற்ற அமைப்பு 2011 – 2012 ஆம் ஆண்டுகளை அடிப்படையாகக் வைத்து ஊடக சுதந்திரம் தொடர்பாக மேற்கொண்ட தரவரிசையில் இலங்கை 163 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 07:52 AM]
இலங்கையில் பல பாகங்களிலும் அண்மைக்காலமாக பெய்து வரும் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிற மழை வீழ்ச்சிகளுக்குத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் இராசாயனப் புகையே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
(2ம் இணைப்பு)
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 06:13 AM] []
செங்கல்பட்டு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதிகள் 9 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 06:03 AM]
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் யாழ்.மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு, அவர் நிரபராதி என இனங்காணப்பட்டு நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 05:51 AM]
இலங்கை  அரசின் முக்கிய பரப்புரை இணையங்களில் ஒன்றான, தேசிய பாதுகாப்புக்காக ஊடகத் தகவல் மையத்தின் இணையத்தளம், “கேம்ஓவர்” என்று அறியப்பட்ட ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகி முற்றாகச் செயலிழந்துள்ளது.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 05:42 AM]
மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு மஹர நீதிமன்றத்திற்கு முன்பாக மக்கள் அமைதி முறையிலான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 05:34 AM]
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணை மூலம் நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று இலங்கை அளிக்கும் விளக்கம் தமக்கு திருப்தியளிக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 03:07 AM]
கொழும்புடன் யாழ்ப்பாணத்தை இணைக்கும் யாழ்தேவி புகையிரதச் சேவையானது, இந்த வருடம் செப்டம்பர் மாதம் யாழ்ப்பாணத்திற்கு வந்தடையும் என இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் வி.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 02:33 AM]
இலங்கைக் கடற்பரப்பிற்கு வெளியே அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 02:25 AM]
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ புலனாய்வுப் பிரிவு தலையீடு செய்து வருவதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 02:22 AM]
பொலிஸ் வேடத்தில் வீடுகளில் புகுந்து கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்ட இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 02:19 AM]
நிதி மோசடியில்ழ ஈடுபட்ட அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 02:18 AM]
களனி தொகுதி அமைப்பாளர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரினால் மீளவும் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 02:16 AM]
பிரதம நீதியரசர் பதவிக்கு மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டமை எதிர்த்தரப்பை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 02:14 AM]
இலங்கையின் 44வது பிரதம நீதியரசராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸை வரவேற்கும் நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 02:11 AM]
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்கிய தமிழ் வர்த்தகர் ஒருவருக்கு ஒன்றரை ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 01:42 AM]
மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானாவை மீட்கும் பொறுப்பை என்னிடம் வழங்கியிருந்தால் சவுதியில் மிகவும் செல்வாக்குடன் இருக்கின்ற இலங்கையரான சாதிக் ஹாஜியாரைக் கொண்டு ரிசானாவை பாதுகாத்திருப்பேன். ஆனால் அதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் வழங்கவில்லை என முன்னாள பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 01:26 AM]
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விடயம் தொடர்பில் இந்திய அரசு அமைதியான முறையில் இராஜதந்திர ரீதியில் சில நடவடிக்கைளை எடுத்துள்ளதாக யாழ். இந்திய துணைத் தூதுவர் எஸ். மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 12:25 AM]
சவுதியில் இலங்கைப் பணிப்பெண் சிரச்சேதம் செய்யப்பட்டது மரண தண்டனை குறித்தும் ஷரியா சட்ட நடைமுறைகள் குறித்தும் விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 12:09 AM]
பிடியாணை இல்லாது பொலிஸாரால் கைதுசெய்யப்படும் ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன்னர் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யும் அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
[வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 12:04 AM]
புதிய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தாம் ஏற்கனவே வகித்து வந்த அரசாங்கத்தின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்.
Advertisements
[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.