செய்திகள் - 19-01-2013
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 11:59 PM]
| பௌத்த பிக்குமார் குழு ஒன்று புடவைக்கடை ஒன்றுக்குள் புக முயற்சித்த சம்பவத்தை பொலிஸார் தடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை கொழும்பின் புறநகர் மஹரகமவில் இடம்பெற்றுள்ளது. |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 11:50 PM]
| கோடி கோடியாகக் கொண்டுவந்து கொட்டினாலும் மாடி வீடுகளைக் கட்டித்தந்தாலும் எங்கள் மகள் ரிசானாவுக்கு அது ஈடாகுமா? அன்பு மகள் ரிசானா இனிமேல் எங்களுக்கு கிடைப்பாளா? ரிசானாவின் வீட்டுக்கு அனுதாபம் தெரிவிக்கச் செல்லும் மக்களிடம் அழுதழுது புலம்புகின்றனர் அவரின் பெற்றோர். |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 10:52 PM]
| தமிழ்த் தேசியக் கூட்டமப்பின் அசைக்க முடியாத பலத்தைக் கண்டு அஞ்சும் அரசு கூட்டமைப்பை அரசியலிலிருந்து ஓரங்கட்ட எடுக்கும் பகீரதப் பிரயத்தனத்தின் ஒரு அங்கமே எனது அலுவலகத்தில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட செய்தி ஆகும். |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 09:19 PM]
| மன்னாரில் இன உறவைச் சீரழிக்கும் செயற்பாடுகளை மீண்டும் அரங்கேற்ற தொடங்கியுள்ளதாகவும் இன, மத பேதமின்றி, மனச்சாட்சிக்கு விரோதமின்றி செயற்படும் தன்னைக் குறிவைத்து பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 03:48 PM]
| தேசிய உணவு உற்பத்திக்காக ஜனாதிபதி தங்க விருதை வென்ற வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்றிரவிலிருந்து காணாமல் போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 03:37 PM]
| தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்பது அரசாங்கத்திற்கு அவசரமாக தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது. என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 02:58 PM]
| இலங்கையிலிருந்து பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதை நிறுத்துமாறு கோரி மூதூர் பிரதேசத்தில் கையெழுத்து வேட்டை இடம்பெற்றுள்ளது. |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 02:29 PM]
| விடுதலைப் புலிகள் உருவாகுவதற்கோ அல்லது அவர்களின் நிகழ்வுகளை நடத்துவதற்கோ இராணுவத்தினர் ஒரு போதும் இடமாளிக்கமாட்டார்கள். பொதுமக்களிடம் பிரச்சனைகளைத் தோற்றுவித்து கிளர்ச்சிகளை உருவாக்க சில அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர் என்று யாழ்.மாவட்ட 51வது படைப்பிரிவின் தளபதி சந்தன குணவர்த்தன தெரிவித்துள்ளார். |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 01:50 PM] [  ]
| இலங்கை அரசு தமிழ் மக்களின் உரிமைக்குரலை திட்டவட்டமாக நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் தமிழ் ஊடகங்கள் மீதும் தமிழ் அரசியல் தலைமைத்துவம் மீதும், நடாத்தப்படும் அழுத்தங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 01:06 PM] [  ]
| கிளிநொச்சியில் கடந்த யுத்தகாலத்தில் முற்றாக அழிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட அஞ்சல் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 12:30 PM]
| இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பலவந்தமாக கொண்டுசெல்லப்பட்டு காணாமல்போன செய்தியாளர் ஏக்னலிகொட சம்பந்தமான வழக்கு விசாரணைகளில் நியாயம் கிடைக்குமா என்ற சந்தேகம் தனக்கு ஏற்பட்டுள்ளதாக ஏக்னலிகொடவின் மனைவி சந்தியா தெரிவித்துள்ளார். |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 11:23 AM]
| மொரட்டுவ பல்கலைகழக பொறியியல் பீட மற்றும் தேசிய தொழினுட்ப பயிற்சி நெறி நிறுவன மாணவ குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலுடன் தமது கட்சிக்கு தொடர்பில்லை என சோசலிச சமத்துவ கட்சி தெரிவித்துள்ளது. |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 10:54 AM]
| ஹொங்கொங்கில் பணியாற்றும் இலங்கை உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள், திருகோணமலை மூதூர் பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 10:16 AM]
| சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல தயார் நிலையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 10:16 AM]
| இலங்கை மீனவர்கள் 21 பேர் இந்திய கரையோர பாதுகாப்பு படைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 09:57 AM]
| சட்டவிரோதமாக ஒரு தொகை தங்க பிஸ்கட்களை இலங்கையிலிருந்து கொண்டு செல்ல முயற்சித்த இருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்துள்ளனர். |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 09:14 AM]
| பொதுநலவாய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் இலங்கையை இடைநிறுத்துவதற்கான சரியான நேரம் இதுவென சேர் ரொனால்ட் சன்டர்ஸ் தெரிவித்துள்ளார். |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 07:44 AM]
| லண்டனில் ஏல விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள சந்திர வட்டக்கல்லை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. |
(2ம் இணைப்பு)
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 06:23 AM]
| இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 05:58 AM]
| இலங்கையின் அடுத்த பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் சமால் ராஜபக்சவே என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 05:44 AM]
| ரிசானா நபீக் சிரச்சேதம் செய்து மரணதண்டனை நிறைவேற்றப்படமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சவுதி அரேபியாவில் பணிபுரிந்த இலங்கைத் தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டார் என அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் தொடர்ந்தும் அங்கு பணிபுரிந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 05:40 AM]
| வடக்கு, கிழக்கு மாகாண மாணவர்களின் விளையாட்டுத் திறமையை மேம்படுத்துவதற்காக சீன அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க முன் வந்துள்ளது. |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 05:06 AM]
| சகல ஊடகங்களுக்குமான ஒழுக்கக் கோவை கட்டமைப்பொன்று அறிமுகப்படுத்தப்படும் என ஊடக அமைச்சு செயலாளர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார். |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 04:23 AM]
| மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் மூவருக்கு 'சியாத் இயக்கம்' என்ற பெயரில் கடந்த செவ்வாய் கிழமை கொலை மிரட்டல் கிடைக்கப் பெற்ற நிலையில், மேலும் ஒரு ஊடகவியலாளருக்கு நேற்று முன்தினம் குறித்த சியாத் இயக்கம் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 03:43 AM]
| யாழ். மாவட்ட செயலகத்தின் தகவல் திணைக்களத்துக்கு பொறுப்பதிகாரியாகப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 03:26 AM]
| பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 140 பேருக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 03:25 AM]
| அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களை நியமிப்பதற்காக அரசாங்கம் சிராணி பண்டாரநாயக்க பதவி விலக்கப்பட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். |
(2ம் இணைப்பு)
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 03:23 AM]
| அமெரிக்க விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 03:10 AM]
| ஊர்காவற்றுறையில் 15 வயது சிறுமியை ஏமாற்றி நான்கு இளைஞர்கள் மாறி மாறி பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 02:58 AM] [  ]
| வெற்று உயிர்களாக, வெந்த உடல்களாகத் தமிழர்கள் இலங்கையிலே துடிதுடிக்கின்றனர் என்று, நான்கு சுவர்களுக்குள் நாம் அழுதபோது, உடம்பிலே நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஒருவன் தெருவுக்கு வந்தான். அவன் பெயர் முத்துக்குமார். அந்தப் பெயர் ஈழத்து மண்ணில் மக்களின் மனதில் கல்வெட்டாக வாழ்கிறது. |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 02:50 AM]
| மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியின் பெரியபாலம் சந்தியில் இருந்து ஹாஃபி நகர் வரையான பாதைக்கு ரிசானா நபீக் என பெயரிடப்படவுள்ளதாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிடுகின்றார். |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 01:57 AM]
| யாழ்.வலிகாமம் வடக்கு மக்கள் தங்கியுள்ள முகாம் நிலச்சொந்தக்காரர்கள் முகாமை அங்கிருந்து அகற்றுமாறு தீவிரமான அழுத்தங்களை கொடுப்பதாக தெரிவித்துள்ள மக்கள் தாம் சொந்த இடங்களுக்கும் செல்லமுடியாமல், முகாம்களை விட்டும் வெளியேற முடியாமல் அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 01:37 AM]
| தமிழர்களின் குரல்களை திட்டமிட்ட வகையில் இலங்கை அரசாங்கம் நசுக்கி வருவதற்கு எதிராக பிரித்தானிய மகாராணி இராஜதந்திர அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 01:27 AM]
| யாழ்.மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் கடந்த வாரத்தில் நடைபெற்ற பல்வேறுபட்ட கொள்ளைச் சம்பவங்களில் சுமார் 20 லட்சத்தி 49 ஆயிரம் ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.ஈ. எரிக் பெரேரா தெரிவித்தார். |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 01:17 AM]
| கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், தனக்கும் எதிரான விமர்சனங்களின் பின்னணியில் படைப்புலனாய்வாளர்களே இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், படைப்புலனாய்வாளர்களின் கருத்துக்களும், விமர்சனங்களும் மக்களுடையவை அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 12:57 AM]
| யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 12:52 AM] [  ]
| செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 12:19 AM]
| இலங்கையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. |
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 12:10 AM] [  ]
| சர்வதேச கண்டனங்களையும் மீறி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,இலங்கையின் பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்தமையானது, தமது குடும்ப சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான மற்றும் ஒரு உறுதியான நடவடிக்கையாகும். இவ்வாறு கனடாவின் வன்கூவர் சன் பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
(2ம் இணைப்பு)
[சனிக்கிழமை, 19 சனவரி 2013, 12:03 AM]
| கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புலம்பெயர் புலி ஆதரவாளர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பது விசாரணைகளின் போது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கான புனர்வாழ்வு தொடரும். இல்லாவிட்டால் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். |
|
[ Saturday, 25-05-2013 18:03:35 ]
| முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம். |
|