செய்திகள் - 03-02-2013
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 11:40 PM]
உலகில் மிகப் பெரிய பயணிகள் கப்பல்களில் ஒன்றான ‘குயின் எலிசபெத் – 2’ கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 11:30 PM] []
யாழ்ப்பாண நகர்ப் பகுதிக்கு அண்மையில் உள்ள நாவற்குழியில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் அமைக்கப்பட்டு வருவதாக உள்ளுர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 06:54 PM] []
புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு கிராமத்திற்கு 1000 தென்னங்கன்றுகள் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 06:40 PM]
இலங்கையில் மிகக் குறைந்த அளவில் வாழ்ந்து வரும் கஃபீர் சமூகத்தில் ஆண்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பது அச்சமூகத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
(2ம் இணைப்பு)
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 04:16 PM]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 04:16 PM]
கொழும்பு-15, மட்டக்குளி சென்மேரிஸ் தேவாலயத்திற்கு அண்மையிலுள்ள மரமொன்றின் மீது திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி பரபரப்படைந்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 04:08 PM]
இலங்கை அதிபர் ராஜபக்சவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழக ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் அறிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 03:16 PM]
அரசாங்கத்தின் அழுத்தங்கள் காரணமாக ஊடகங்கள் உண்மைகளை வெளியிடுவதி;ல்லை என காலணித்துவத்திற்கு எதிரான மக்கள் அமைப்பின் அழைப்பாளர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 02:48 PM]
ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு அஞ்சப் போவதில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 02:24 PM]
இலங்கையின் 65வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நாளை முற்பகல் திருகோணமலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 02:19 PM]
ஜெனிவாவில் இந்த மாத இறுதியில் தொடங்கும் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், புதுடில்லி இப்போது இராஜதந்திர கேந்திர மையமாக மாறியுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 01:44 PM]
இலங்கையில் சுதந்திரதினம் தமிழர்களுக்கும் உரித்தாக வேண்டுமென கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 12:56 PM]
தலிபான் மற்றும் அல்கைதா அமைப்புக்களை தடை செய்வது என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் தெரிவித்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 12:46 PM]
கல்வியமைச்சினால் செயற்படுத்தப்படுகின்ற புதிய வேலைத்திட்டங்களுக்கு அமைய  பிரிவேனாக்களில் அறநெறிக் கல்வியை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 11:23 AM] []
இலங்கையின் சுதந்திர தினம் நாளை அனுஸ்ட்டிக்கப்படவுள்ள நிலையில் இலங்கையின் பல பாகங்களிலும் இலங்கையின் தேசியக்கொடி விற்பனையாகிக் கொண்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 11:12 AM]
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுமுந்தன்வெளி கிராமத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் வேளாண்மை அறுவடை இயந்திரம் ஒன்று தீக்கிரையாக்கப் பட்டள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 10:56 AM]
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில், டில்லி சென்ற குழுவினர், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படக் கூடிய ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் தூதர்களை சந்திக்கவில்லை. இதனால், இந்த குழுவின் பயணத்தால், எவ்வித பலனும் ஏற்படவில்லை என, உலக தமிழர் அமைப்புகள் கருதுகின்றன.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 10:44 AM]
சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றபட்ட இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின், மூதூரிலுள்ள வீட்டிற்கு ஜனாதிபதியின்  துணைவியார் ஷிராந்தி ராஜபக்ச இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் விஜயம் செய்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 10:18 AM]
கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 10:00 AM]
பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை விருந்தினர்களாக அழைக்க முடியாத இக்கட்டான நிலையில் முல்லைத்தீவுப் பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 08:38 AM]
டெசோ - என்றே ஆகிவிட்டது பெருமைக்குரிய அந்த அமைப்பின் பெயர். 1985ல் ஆரம்பிக்கப்பட்டபோது, 'தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு' என்கிற முழுமையான பெயர் அதற்கு. அந்தப் பெயரே அதன் நோக்கம் என்ன என்பதை அழுத்தந்திருத்தமாகப் பறைசாற்றியது. இப்போது, அதன் பெயரைச் சுருக்கிவிட்டவர்களின் நோக்கம் என்ன என்பது வரலாற்றின் பக்கங்களில் அழுத்தந்திருத்தமாகப் பதிவாகிவருகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 07:44 AM]
வடமாகாணத்திலிருந்து இரண்டு மாணவர்கள், ஆசியமட்ட பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பற்றுவதற்காக இந்தோனேஷியாவுக்கு பயணமாகவுள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 07:26 AM]
திருகோணமலையில் நாளை நடைபெறப்போகும் இலங்கையின் சுதந்திரதின நிகழ்வில் பிரமாண்டமான படை அணிவகுப்பு இடம்பெறும். அதில் இராணுவப் படைப்பிரிவுகள் ஒவ்வொன்றாக அணிவகுத்துச் செல்லும். ஆனால் அவை எதுவும் இலங்கை இராணுவத்தின் பலம் வீழ்ச்சியடைந்து வருவதை வெளிப்படுத்துவதாக அமையப் போவதில்லை.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 07:02 AM] []
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாகவும், குளங்கள் திறக்கட்டமையாலும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாவடியோடை பாலம் இருபக்கமும் முற்றாக உடைந்துள்ளது. இதனால் எவ்வாகனமும் இதனூடாக செல்ல முடியாது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 06:39 AM]
அமெரிக்காவின் ஐ.நா பிரேரணை தொடர்பாக இந்தியா என்ன செய்யும்? என்பதே இன்றைய தமிழ் நெஞ்சங்களின் கேள்வியாக உள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 06:00 AM]
மட்டக்களப்பில் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற மீனவரொருவர் கடலில் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 05:52 AM]
பௌத்த தேரர்கள் நடைமுறை அரசியலில் ஈடுபடுவது இன்றைய காலத்திற்குப் பொருந்தாது என்று அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் தெரிவித்தார்.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 05:33 AM]
திருகோணமலையில் அமைந்துள்ள பழைய ஒல்லாந்தர் கடற்படை ஆணையாளர் உல்லாச விடுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைக்கவுள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 05:14 AM]
யாழ், குருநகர் கடற்கரை வீதியைச் சேர்ந்த இளைஞனரை காணவில்லை என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 04:42 AM]
பண்டாரவலயில்  கொள்ளையிட முற்பட்ட குழு ஒன்று, பண்டாரவல பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக தப்பிச் சென்றுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 03:07 AM]
அரசாங்க ஊழியர்களுக்கு அரச வங்கிகளில் வழங்கப்பட்டு வந்த கடன்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 03:00 AM]
திருகோணமலையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தினத்தில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 02:57 AM]
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 6ம் திகதி கொழும்பில் இந்த பாரிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 02:54 AM]
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(2ம் இணைப்பு)
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 02:04 AM] []
அம்பாறை, ஒலுவில் கடல் பிரதேசத்தில் நேற்று தத்தளித்துக்கொண்டிருந்த பங்களதேஷ், மியான்மார் நாடுகளைச் சேர்ந்த 138 பேரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 01:59 AM]
ஜெனீவாவில் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிராக 209 யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 01:46 AM]
சர்வதேச  சமூகத்தினால் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்துப் பார்வையிட, ஐ.நாவின் அறிக்கையளிக்கும் சிறப்பு நிபுணர்களுக்கு இலங்கை அரசு  அழைப்பு விடுக்க வேண்டும் என்று பிரித்தானியா கோரியுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 01:40 AM]
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்மொழியப்படவுள்ள பிரேரணையின் போது செயற்படும் விதம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் தீர்மானிக்கவில்லை.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 01:35 AM]
சீன தூதரகத்துக்காக கொழும்பு 7 இல் உள்ள 122 பேர்ச்சஸ் நிலம் ஒன்று எவ்வித வரிகளும் இன்றி வழங்கப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 12:54 AM]
இலங்கைக்கு தற்போது வருவதற்கான 'தகைமைகள்' இல்லை என்ற காரணத்தினாலேயே சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனப் பிரதிநிதிகளுக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 12:15 AM]
இலங்கையின் 65வது சுதந்திர தினத்தை இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 12:07 AM]
ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகளைக் கொண்டுவர அமெரிக்காவும் அதன் பங்காளிகளும் முயற்சித்தால் இலங்கை அதனைத் தடுத்து நிறுத்தும். இலங்கை இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்தார்.
Advertisements
[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.