செய்திகள் - 04-02-2013
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 11:47 PM]
இலங்கை பணிப்பெண்களுக்கு சவூதியில் வேலைவாய்ப்பு வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது என வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 10:24 PM]
பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை தடுப்பது தொடர்பான சட்டமூலம் நாளை மறுநாள் 6ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 06:14 PM] []
நேற்று முன்தினம் லண்டன் ஹறோ பகுதியில் ஹறோ தமிழ் கொமினிட்டி அமைப்பினால் நடாத்தப்பட்ட உழவர் திருநாள் தைப்பொங்கல் விழாவில் பல்லின மக்கள் கலந்துகொண்டு மிகவும் சிறப்புற நடைபெற்றுள்ளது.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 04:14 PM]
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பொலிஸாரினால் பலவந்தமான முறையில் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்படுவதாக மேற்படி வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 03:51 PM]
ஈ.பி.டி.பி கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரினின் வாகனம் ஏ - 9 வீதியில் தடம்புரண்டதில், பாராளுமன்ற உறுப்பினர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 03:39 PM] []
மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை விஜயம் செய்யவுள்ளதையிட்டு கோலாகல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 03:25 PM]
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளின் எல்லைகள் மாற்றப்படுதல் தொடர்பான அறிவித்தல் வந்ததையடுத்து, ஏற்பட்ட குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் திட்டம் ஒன்றைத் தயாரிக்கும் வேலைகளில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 03:19 PM]
இலங்கை தமிழர்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. அதனால் இன்று சுதந்திரதினம் கொண்டாட முடியாத நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 03:18 PM]
மொரட்டுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், ஆளும்கட்சி அரசியல்வாதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 02:57 PM] []
திமுக தலைவர், கலைஞர் கருணாநிதி தலைமையில் சென்னையில் இன்று இடம்பெற்ற டெசோ மாநாட்டில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 02:42 PM]
போலி நாணயத்தாள் அச்சிட்ட பல்கலைக்கழக மாணவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 02:38 PM]
முஸ்லிம் சனத்தொகை அதிகரிப்பதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 02:14 PM] []
இலங்கையின் 65வது சுதந்திரதினம் இன்று. ஆனால் சிறிலங்காவினால் வன்பறிப்புச் செய்யப்படுள்ள தமிழீழத் தமிழர்களாகிய எமக்கு துக்க தினமாகும் என யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 01:34 PM] []
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்  சாண் தம்பிமுத்துக்குச் சொந்தம் எனக் கூறப்பட்ட சுமார் 100 ஏக்கர் கொண்ட தோட்டக் கணியினை  காணி உறுதிப்பத்திரம் உடைய பொதுமக்கள் தமக்கு பிரித்துத் தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 01:16 PM] []
பல உலக சார் நிகழ்வுகளுக்கு டுடில்ஸ் செய்து வரும் பிரபல தேடல் தளமான கூகிள், இன்று இலங்கை சுதந்திர தினத்துக்கும் வாளேந்திய சிங்கத்துடன் கூடிய கூகிள் பக்கத்தை உருவாக்கியுள்ளது.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 01:01 PM] []
சுவிஸ் நாட்டின் துர்க்கா மாநில தமிழ் உறவுகளின் தாயக உறவுகளுக்கான உதவித்திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஒழுங்குபடுத்தல் மூலம் கிளிநொச்சி மலையாளபுரத்தில் உள்ள மாணவச்சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 12:53 PM] []
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2011ம் ஆண்டு 600 மில்லியன் ரூபா செலவில் படுவான்கரையில் அமைந்துள்ள உன்னிச்சைக் குளத்திலிருந்து நீரை சுத்திகரித்து, மாவட்டம் முழுவதும் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தினை இலங்கை அரசு ஆரம்பித்தது.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 12:44 PM]
வவுனியா ஆலடி பகுதியில் இன்று நண்பகல் புகையிரதத்தில் மோதுண்டு 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலியானதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 12:42 PM]
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு பின்னர் பல நிலைகளிலும் சீர்குலைந்து தமிழீழ மக்களில் பெரும்பான்மையானோர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.  ஏறக்குறைய 65 வருடகால அரசியல் பிரச்சினை, இலங்கை சுதந்திரமடைந்தது முதல் பல பேச்சுவார்த்தைகள், பல போராட்டங்கள், உடன்படிக்கைகள், பல ஏமற்றங்கள்.....
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 12:35 PM]
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பட்டதாரி பயலுனர்களாக இணைக்கப்பட்டுள்ளவர்கள் தமது நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்கப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 11:34 AM]
வெலிகம, பெலனே கடற்பரப்பில் காணாமற் போன சிறுவர்கள் இருவரும் இன்று சடலங்களாக மீட்கப்பட்டனர்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 11:15 AM]
யாழ். மாவட்டம், வடமராட்சி பிரதேசத்தில் உள்ள நெல்லியடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 10:55 AM]
திருகோணமலை மூதூரைச் சேர்ந்த இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் 25 வது பிறந்த தினம் இன்று நினைவு கூரப்படுகிறது.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 10:55 AM]
83 கடவுச்சீட்டுகளுடன் தமிழக - கேரள எல்லையில் சுற்றித் திரிந்த இலங்கை பிரஜை ஒருவரைத் தமிழக பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 10:26 AM]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 12ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 10:19 AM] []
வீட்டு படிக்கட்டில் தடுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்ட கொழும்பு சட்டக்கல்லூரி மாணவி பிரியதர்ஷினிக்கு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் தமது பகல், இரவு உணவினை தவிர்த்து 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபா பணத்தை உதவியாக வழங்கியுள்ளனர்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 10:05 AM]
இலங்கையின் 65 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடற்படை இன்று துப்பாக்கி வேட்டுகளை தீர்த்து  மரியாதை செலுத்தியது.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 09:58 AM]
அக்கரைப்பற்று கடற்படையினரால் மீட்கப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் 138 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 09:54 AM]
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் சில்லுகளுக்குள் சிக்குண்டு சிலாபம் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 09:24 AM]
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அதிகாலை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 08:52 AM] []
கல்விச் சமூகங்களை உருவாக்குவதன் மூலம் நமது எதிர்கால சமூகங்களை பலமுள்ளதாக ஆக்குவதுடன், எமது பிள்ளைகள் கடந்த கால கொடுமைகள் தெரியாதவர்களாகவும் வளர்த்தாக வேண்டும் என மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார்.
(2ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 08:40 AM] []
தேசத்தின் இறைமையை உறுதி செய்வதற்காக மிகப்பெரும் தியாகங்களைச் செய்த இலங்கையர்களான நாம் 65வது தேசிய சுதந்திர தினத்தை மிகுந்த பெருமையுடன் கொண்டாடுகிறோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 08:37 AM]
வவுனியா மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்ட ஒதுக்கீட்டில் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நேற்றையதினம் இந்திய தூதரக உயரதிகாரிகளை இந்திய தூதரகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 08:21 AM] []
மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர தேசிய பாடசாலையின் மாணவி விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதல் இடத்தைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 08:05 AM]
இந்திய கோடீஸ்வரர் ஒருவர் அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை நாணயங்களுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 08:04 AM] []
இலங்கை மீது பன்னாட்டு விசாரணை நடத்த உலக நாடுகளே முடிவெடுங்கள். இனப்படுகொலை குற்றவாளிக் கூண்டில் இலங்கை அரசை நிறுத்த வேண்டும். இது கண்டிப்பாக நடக்கும் நடக்காது என்று நினைத்திருந்தால் உலகில் எந்த விடுதலை இயக்கங்களும் தேசிய இன விடுதலையை பெற்றிருக்காது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது உரையில் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 07:53 AM]
இந்த  அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் கூட இன்னமும் அமுல் செய்யப்படவில்லை.   நல்லிணக்கத்திற்கான எல்லா கதவுகளும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. இதுதான் இன்றைய சுதந்திர நாட்டின் யதார்த்தம். 
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 07:46 AM] []
இலங்கையின் 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 07:42 AM]
திருகோணமலையில் இன்று இலங்கையின் 65ஆவது சுதந்திரதின பிரதான நிகழ்வுக்கு திருமலை நகரசபை முதல்வர் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள தியாகிகள் நினைவு மண்டபத்தின் பெயர்ப் பலகை கறுப்பு மை பூசி அழிக்கப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 03:30 AM]
நாட்டின் 30 வீதமான சிறார்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போசாக்கு நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 03:21 AM]
திவிநெகும அபிவிருத்தித் திணைக்களம் மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் ஜீ.பி. திலகசிறி தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 03:17 AM]
போரைக்காட்டி நாடு சுரண்டப்படுவதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 03:14 AM]
காணிப் பிரச்சினை காரணமாக பௌத்த பிக்கு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 02:21 AM]
கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி, 2 கோடி ரூபாவிற்கு மேல் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 02:20 AM]
கோடியக்கரைக்கு அருகே கடல் பரப்பில் மீன்பிடித்துவிட்டு திரும்பிய தமிழக மீனவர்கள் 7 பேரை ஞாயிற்றுக்கிழமை வழிமறித்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் உடைமைகளை பறித்துக்கொண்டு விரட்டியடித்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 01:49 AM]
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளை கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கி செயற்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பபட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சி இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 01:41 AM]
சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்களை அனுப்பும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இலங்கையின், வெளிநாட்டு தொழில்வாய்ப்பு முகவரகம் இதனை அறிவித்துள்ளது.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 01:16 AM]
கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள சுமார் 300 பாதைகளின் பெயர்களில் மாற்றம் செய்யப்படவுள்ளன. இலங்கையின் கலாசார அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 12:50 AM]
இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே இலங்கை அரசாங்கம் இருதரப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. நாம் மத்திய அரசுடனேயே இராஜதந்திர நகர்வுகளில் ஈடுபடுகின்றோம். எனவே தமிழ்நாடு மாநிலம் இலங்கை தொடர்பில் கூறுகின்ற விடயங்கள் குறித்து நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை என்று இலங்கையின் ஊடகத்துறை அமைசர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 12:09 AM]
சிங்கள அதிரடிப் படையினர் பேசாலைப் பகுதியில் வாழும் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இது போன்ற புகார்கள் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது,
(2ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 12:00 AM] []
இலங்கையின் 65வது தேசிய சுதந்திர தினம் இன்று திருகோணமலை நகரில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
Advertisements
[ Friday, 24-05-2013 12:30:12 ]
'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.