செய்திகள் - 05-02-2013
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 06:41 PM]
| தென் ஆபிரிக்கா, தமிழர்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளை சிறிலங்காவுடன் இணைந்து எடுத்து வருகின்றது என ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 04:25 PM]
| பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை பெப்ரவரி மாதம் 19ம் திகதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 04:00 PM] [  ]
| அவுஸ்திரேலியா, மெல்பேர்ண் நகரிலிருந்து நூறு கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் பிரசித்தமான ஜீலோங் (Geelong) நகரிலுள்ள தொழிற்சங்கக் கட்டடத்தின் கொடிக் கம்பத்திலேயே தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 03:36 PM] [  ]
| மட்டக்களப்பில் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட செங்கலடி மாவடியோடை கிராம மக்களுக்கு சுவிஸ்லாந்து நவசக்தி விநாயகர் ஆலயம் உலர் உணவுப் பொதிகளை வழங்கியுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 02:50 PM]
| தமது வீட்டில் இடம்பெற்ற சிறு விபத்தால் தனது இடக்கையை இழந்த கொழும்பு சட்ட பீட மாணவி அச்சலா பிரியதர்ஷனி கை இழந்த சம்பவம் குறித்து மூவர் அடங்கிய விசேட குழுவொன்று விசாரணை நடாத்தி வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயதிலக தெரிவித்தார். |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 02:36 PM]
| பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் மாணவர்கள் பூரணமான பட்டதாரிகளாக உயர்த்தப்படுவதையே அரசாங்கம் நோக்கமாக கொண்டு செயற்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 02:31 PM]
| மண்டைதீவில் பாரிய கடற்படை முகாம் ஒன்று கடற்படையினரால் அமைக்கப்பட்டு வருகின்றது. |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 01:37 PM] [  ]
| திருகோணமலையில் இன்று இலங்கையின் 65ஆவது சுதந்திரதின பிரதான நிகழ்வுக்கு திருமலை நகரசபை முதல்வர் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வினால் நிர்மாணிக்கப்பட்ட வெலிக்கடை தியாகிகள் நினைவு மண்டபத்தின் பெயர்ப் பலகை கறுப்பு மை பூசி அழிக்கப்பட்டுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 01:34 PM]
| யாழ். நகரத்திலுள்ள மற்றொரு பிரபல ஆரம்பப் பாடசாலையிலும் மாணவிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் குறித்து முறைப்பாடுகள் வெளிவந்துள்ளன. |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 01:11 PM] [  ]
| கிழக்கில் ஆதிகாலத்தில் தமிழினம் வாழ்ந்த தடயங்கள், சான்றுகள் மற்றும் கல்வெட்டுக்கள தற்போதும் காணப்பட்டு வருகின்றன. |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 01:10 PM] [  ]
| தமிழீழ மக்களுக்கு மட்டுமின்றி, உலகத் தமிழர்கள் அனைவருக்குமான எதிரியாக உள்ள இந்திய அரசை, பகை சக்தியாக, எதிரியாக நாம் வரையறுத்துக் கொண்டால் மட்டும் தான், அதற்குப் புரிய வைக்க முடியாது, அதைப் பணிய வைக்கத்தான் முடியும். இவ்வாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தெரிவித்தார். |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 12:51 PM] [  ]
| எம் இனத்தின் அழிவை தடுத்து நிறுத்தத் தவறிய உலகமே, உங்களுடைய மனச்சாட்சியை தட்டி எழுப்ப என் இனிய உயிரை வழங்குகின்றேன் என ஐ.நா மன்றத்தின் முன் முருகதாசன் தீக்குளித்த பெப்ரவரி 12ல் ஐ.நா அலுவலகங்களை முற்றுகையிடுவோம். தமிழின உணர்வாளர்களே சென்னையில் திரளுங்கள். |
(2ம் இணைப்பு)
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 12:39 PM]
| மாத்தளை மருத்துவமனைக்கு அருகில் மனித மண்டையோடுகளும், எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டமை தொடர்பிலான கொலைக்கு முழு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தற்போதைய அரசாங்கத்தில் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 10:14 AM]
| திருகோணமலையில் நடந்த இலங்கையின் 65வது சுதந்திதின விழாவில் பேசிய அதிபர் மகிந்த ராஜபக்ச, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திமிராக கூறியிருக்கிறார். இவ்வாறு பாமக நிறுவுனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 09:31 AM] [  ]
| வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞானபீடத்தின் விலங்கியல்துறை கட்டிடத் தொகுதியையும் நல்லையா மண்டபத்தையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று செவ்வாய்க்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 09:16 AM]
| எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தில் இடம்பெறும் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு இடையிலான உடன்பாடுகள் மற்றும் புரிந்துணர்வுகளை நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை 11ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெறும். |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 08:59 AM]
| வலி. வடக்குப் பகுதியில் இராணுவத்தினரால் பொது மக்களின் வீடுகள் இடிக்கப்படுவது நிறுத்தப்பட்டடுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 08:35 AM] [  ]
| யுத்தப் பாதிப்புக்களை பெரிதும் எதிர்நோக்கி 12 வருடங்களின் பின் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்ட முகமாலை மக்களை பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன், அம்மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 08:23 AM] [  ]
| இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 08:22 AM] [  ]
| மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மூலம் பெறப்பட்ட உதவியைக் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை இன்று உலர் உணவு பொதிகளை வழங்கியது. |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 08:08 AM]
| இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்கள் மூவரும் இந்தியா சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக தகவல்க்ள் வெளியாகியுள்ளன. |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 07:56 AM]
| வீட்டுக் கூரையிலிருந்து கீழே தவறி விழுந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். |
(2ம் இணைப்பு)
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 07:32 AM]
| போகம்பர சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மூவர், தமக்கு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு கோரி இன்று காலை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 07:00 AM]
| இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ்ப் பெண்களுக்கு வீடமைத்துக் கொடுக்கும் திட்டமொன்று கிளிநொச்சியில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 06:27 AM] [  ]
| இலங்கை அதிபர் ராஜபக்ச வருகிற பெப்ரவரி 8ம் திகதி பீகாரில் உள்ள புத்தகயாவிற்கும், ஆந்திராவில் உள்ள திருப்பதி கோயிலுக்கும் வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஈழத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்று குவித்த போர்க்குற்றவாளி ராஜபக்சவை இந்தியாவிற்குள் அனுமதிப்பது கோடிக்கணக்கான தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். |
(2ம் இணைப்பு)
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 05:07 AM] [  ]
| ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வருகின்ற 08-02-2013 அன்று பிரதமர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக டெல்லி செல்லும் தோழர்களை இன்று காலை 9-00 மணிக்கு சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் தலைவர்கள் வழியனுப்பி வைத்தனர். |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 04:50 AM]
| அமெரிக்கா எவ்வித கோரிக்கைகளையும் விடுக்கவில்லை என ஜனாதிபதி பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 03:58 AM]
| மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி காட்டுப்பகுதியில் இளைஞர் ஒருவரின் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 03:05 AM]
| இராஜதந்திரச் சமர் என வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க வல்லரசு கொண்டுவரவுள்ள பிரேரணையை இந்தியா இம்முறை ஆதரிக்குமென அறிய முடிகின்றது. |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 02:49 AM]
| இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருகையை தடுக்க முடியாவிட்டால் மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா என்று திமுகவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 02:15 AM]
| அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று அங்குரார்ப்பணம் செயது வைக்க உள்ளார். |
(2ம் இணைப்பு)
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 02:09 AM]
| அமெரிக்காவின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 02:08 AM]
| சர்வதேச போர்க் குற்ற விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 02:06 AM]
| விசேட சாதாரண தரப்பரீட்சைகள் எதிர்வரும் 9ம், 10ம் மற்றும் 11ம் திகதிகளில் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 01:45 AM]
| தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என லண்டனில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 01:33 AM]
| இலங்கை தமிழர் பிரச்சினையில், திராவிட முன்னேற்றக்கழகம் கொண்டுள்ள கரிசனையை தாமும் பகிர்ந்துக் கொள்வதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 01:14 AM]
| மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுவினால் இலங்கைக்கு எதிராக, சுதந்திர ஈழம் – பொது வாக்கெடுப்பு மற்றும் தமிழக மீனவர்களைக் காக்கத் தவறும் மத்திய அரசுக்குக் கண்டனம் ஆகிய இரண்டு தீர்மானங்கள் நேற்று திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டன. |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 01:12 AM]
| தமிழர்களுக்கான சுயாட்சியை இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார் என த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 12:44 AM]
| இடையே எந்த அசம்பாவித முடிவுகளும் எடுக்கப்படாதவிடத்து, இந்திய நாட்டின் ஆட்சி பீடத்திற்கான தேர்தலுக்கு இன்னமும் 16 மாதங்களே இருக்கின்றன. பெரும்பாலும் அடுத்த ஆட்சி காங்கிரஸ் அல்லாத கட்சிகளாலேயே அமைக்கப்படும் என்றே கருத்துக்கள் தெரிவிக்கின்றன. |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 12:37 AM]
| அவுஸ்திரேலிய கடற்பரப்புக்கு வரும் எந்த ஒரு அகதிகள் படகையும் அகதிக் கோரிக்கைக்கான முதல் பரீட்சிப்பை நடத்தாமல் தடுப்பதற்காக இலங்கையுடன் அவுஸ்திரேலியா செய்து கொண்டுள்ள உடன்படிக்கை, சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 12:24 AM] [  ]
| தமிழர்களை முற்றுமுழுதாக அழித்தொழித்து அவர்கள் நிலங்களை ஆக்கிரமித்து தமிழர்கள் மீது இனவழிப்பை நடத்திவரும் சிங்கள இனவாத அரசைக் கண்டித்தும், பொது நலவாய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சிறிலங்காவை நீக்கக் கோரியும் நேற்று பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. |
[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 12:10 AM]
| ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவை மாநாட்டின் போது இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு 9 நாடுகள் மட்டும் தமது எதிர்ப்பை வெளியிடும் நிலைமை உருவாகியுள்ளதால் நாம் பாரிய சர்வதேச நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் வசந்த பண்டார தெரிவித்தார். |
|
[ Thursday, 23-05-2013 09:05:45 ] [   ]
| திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா. |
|