செய்திகள் - 06-02-2013
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 11:15 PM]
| ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் மற்றுமொரு பிரதிநிதிகள் குழு இலங்கை வருவது தொடர்பில் இதுவரை வெளிவிவகார அமைச்சுக்கு எந்தவிதமான அறிவித்தல்களும் வரவில்லை என வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி தெரிவித்துள்ளார். |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 09:54 PM]
| எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலண்டனில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி நிரலில் இலங்கையும் ஒரு விடயமாக உள்ளடக்கப்பட்டுள்ளது. |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 06:09 PM]
| புத்தளம் - கல்பிட்டி பிரதேசத்தில் 14 வயது மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார். |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 05:37 PM]
| அமைச்சர் மேர்வின் சில்வா, தான் இழந்த களனி தொகுதி அமைப்பாளர் பதவியை மீண்டும் பெறும் நோக்கில் உத்பலவர்ண விஸ்ணு கோவிலில் இன்று விசேட பிராத்தனையில் ஈடுபட்டுள்ளார். |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 05:27 PM]
| சிங்கள - முஸ்லிம் இனங்களுக்கு இடையில் முறுகல் மற்றும் மோதல் நிலைமை ஏற்படுவதற்கான காரணிகளை கண்டறிந்து அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 05:02 PM] [   ]
| தலைவர் பிரபாகரன் ஒரு தீர்க்கதரிசி: ஈழ மண்ணில் இந்தியப் படைகளால் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்களின் மிக மோசமான அத்தியாயங்கள் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னதாக, இந்தியா தொடர்பாக அக்காலத்தில் விடுதலைப் புலிகள் கொண்டிருந்த நிலைப்பாடு பற்றி ஓரளவு மேலோட்டமாகப் பார்த்துவிடுவது நல்லது என்றே நினைக்கின்றேன். |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 04:46 PM]
| யாழ். மண்டைத்தீவு, தெற்கில் தொடரும் முறையற்ற மணல் அகழ்வு குறித்து அதிகாரிகள் பொறுப்பற்றிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள மக்கள், தங்களுடைய தேவைகளுக்காக சொந்தக் காணிகளிலிருந்தே மணல் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டருக்கும்போது கடற்படை எவ்வாறு பெருமளவு மணலை அகழ்தெடுக்க முடியும் என கேள்வியெழுப்பியுள்ளனர். |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 04:35 PM]
| மீள்குடியேற்றம் செய்யப்பட்டு 2 வருடங்களுக்குமேலாகியும் அடிப்படை வசதிகள் கூட இன்றி, யாழ். நகரத்திற்கு அருகில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மைப்பற்றி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை என கூறும் உதயபுரம் கிராமத்து மக்கள், தமக்கான அடிப்படை வசதிகளையாவது விரைவுபடுத்தி பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 03:23 PM]
| மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்ஸ, அகிம்சை போதித்த மண்ணில் கால் வைக்கக் கூடாது என இந்தியாவின் பீகார் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 03:18 PM]
| பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவதனை தடுக்கும் சட்டம் தொடர்பான விவாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 02:23 PM]
| இலங்கையின் அரசியலில் கொழும்பு வாழ் தமிழர்களின் செயற்பாடுகள் முக்கியமானவையாக அமைந்துள்ளன. இலங்கையின் சனத்தொகை பரம்பலில் கொழும்பில் தமிழர்களின் பங்கு அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது. |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 02:23 PM]
| கண்டியிலுள்ள தேசிய சேமிப்பு வங்கிக் கிளையில் விளையாட்டு துப்பாக்கி மற்றும் கத்தியுடன் கொள்ளையடிக்க முற்பட்ட இராணுவ உயர் அதிகாரி ஒருவரை இன்று பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 02:13 PM]
| யாழ் குருநகர் பகுதியைச் சேர்ந்த எட்வேட் நியூட்டன் என்பவர் வீட்டில் தனியாக இருந்தவேளை படையினர் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 12:53 PM] [  ]
| அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சீரற்ற வைத்திய சேவையை கண்டித்தும் வைத்தியசாலை அத்தியட்சரை இடமாற்ற வலியுறுத்தியும் கல்முனை வடக்கு வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 12:19 PM]
| விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சினிமா இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் படமாக இயக்குகிறார். |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 11:47 AM] [  ]
| கிளிநொச்சி காந்தி நிலையம் சிறுவர் இல்லத்திற்கு நேற்று மாலை சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இல்லச்சிறுவர்களுக்கு கனடா வாழவைப்போம் அமைப்பின் நிதிப்பங்களிப்பின் மூலம் கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்திருந்தார். |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 11:24 AM]
| இலங்கை சுதந்திர தினக் கொண்டாட்டம் வலுக்கட்டாயமாக கொண்டாடும்படி வடக்கு, கிழக்கில் இலங்கை தேசிய கொடிகள் வீடு, கடை தொகுதியில் கட்டும்படி பலவந்தப்படுத்தியது யாரை திருப்தி செய்ய? என்ன தேவைக்காக? |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 09:02 AM]
| மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிவுக்குட்பட்ட கிராமங்களில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றக்கூடாது என அம்முகாம்களிலுள்ள இராணுவத்தினர், அப்பகுதி பொதுமக்களிடம் பலவந்தமாக கையெழுத்து பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 08:48 AM]
| இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதாக 2009லும், மனித உரிமை மீறல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக 2012 லும், ஐநா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு வழங்கிய இரண்டு உறுதி மொழிகளையும் இன்று மீறிவிட்டது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 08:02 AM]
| திருகோணமலையில் இடம்பெற்ற இலங்கையின் 65வது சுதந்திரதின விழாவில்,தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் தர முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றியமைக்கு தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 07:25 AM] [  ]
| மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பொதுச்சந்தை மற்றும் உணவு விடுதிகள், நடமாடும் உணவு வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பெருமளவான பாவனைக்குதவாத மரக்கறிகள், உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 06:04 AM]
| இலங்கையின் சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை சர்வதேச சமூகத்தில் மேலும் விஸ்தரிக்கும் முயற்சிகளை அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதரகம் ஆரம்பித்துள்ளது. |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 05:59 AM]
| ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கான நியமனம் மேலும் தாமதமாகி இருக்கிறது. |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 05:22 AM]
| மட்டக்களப்பிலிருந்து கல்லோயா வரையும் இடம்பெறும் ரயில் பஸ் புகையிரத சேவையின் பயண நேரம் இன்று புதன்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிகாரி ஏ.சி. பௌசுல் அமீன் தெரிவித்தார். |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 04:47 AM]
| கடந்த 60 ஆண்டுகளாகத் தன்னுடைய இனவாத முகத்தை மறைக்க இலங்கைக்குத் தேவையான முகமூடியாக அதனுடைய வெளிநாட்டுக் கொள்கையே இருந்து வந்துள்ளது. |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 04:35 AM] [  ]
| வந்தடைந்தோம், ஈழத்துக்காக உயிர் கொடுத்தவர்களைப் புதைத்த மண்ணுக்கு! மாவீரர்கள் புதைக்கப்பட்ட அந்த இடங்களில் இன்று எருக்கஞ் செடிகள் புதராக முளைத்திருந்தன. |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 03:15 AM]
| யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் 5 ஆயிரம் ரூபா பணத்தை லஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டில் நிக்கம்பிட்டிய லஞ்ச ஊழல் ஆணைக்குழவினால் கைது செய்யப்பட்டுள்ளார். |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 03:05 AM]
| மொரட்டுவை பிரதேசத்தில் பிரதான விகாரையொன்றின் காணி பிரச்சினை தொடர்பாக இடம்பெற்றதாக கூறப்படும் மொரட்டுவை பௌத்த பிக்கு கொலை குறித்து மேலும் 7 சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 02:24 AM] [  ]
| சிங்கள பௌத்த பேரினவாத அரசின் 65 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யேர்மனி பெர்லின் நகரில் கண்டன கவனயீர்ப்பு தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டது . |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 01:54 AM]
| ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 01:50 AM]
| தேசிய கீதம் இரண்டு மொழிகளிலும் பாடப்படுவது சாதகமான நிலைமையை ஏற்படுத்தும் என தேசிய சமாதான சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளா ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார். |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 01:42 AM]
| பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்களை தடுக்கும் நோக்கில் நாடாளுமன்றில் விசேட சட்ட மூலமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 01:40 AM]
| தமிழ் பேசும் பெண் பொலிஸ் உத்தியோகத்தாகள் கடமையில் ஈடுபடுத்தப்படாமையினால் வடக்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 01:38 AM]
| தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட பணம் மற்றும் ஆபரணங்களுக்கு என்னவாயிற்று என ஜே.வி.பி கேள்வி எழுப்பியுள்ளது. |
(2ம் இணைப்பு)
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 01:25 AM]
| இந்திய மீனவர்கள் கச்சத்தீவுக்;கு அருகில் வைத்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 01:20 AM]
| பழங்கால சிங்கள மன்னர்களுக்கும் தற்போதைய அரசியல் தலைவர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார் |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 01:13 AM]
| அவுஸ்திரேலிய மானஸ் மற்றும் நௌவுரு தீவு தடுப்பு முகாம்களில் இடம்பெறும், தொடர் தற்கொலை முயற்சிகள் மற்றும் பாலியல் துஸ்பிரயோகங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. குடிவரவுத்துறை அமைச்சர் பிரன்டன் ஓ கோனர் இதனை அறிவித்துள்ளார். |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 01:07 AM]
| இலங்கையின் கொழும்பு உலகில் குறைந்தளவு செலவுகளை கொண்ட நகரம் என்று தரப்படுத்தப்பட்டுள்ளது. |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 01:02 AM]
| தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 12:58 AM]
| இந்திய பிரதம மந்திரி மன்மோகன்சிங்குடன் இலங்;கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் நடத்திய பேச்சுக்கள் குறித்த விடயத்தை வெளியிடவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது. |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 12:54 AM]
| நடைமுறைகளை பார்க்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுவிக்கப்படுவார் என்று தெரிவதாக கொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லச்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிக்கா தெரிவித்துள்ளார். |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 12:48 AM]
| இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வை நோக்கி நகருமாறு தமது நாடு தொடர்ந்தும் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய தரப்புக்களை வலியுறுத்தும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது. |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 12:26 AM] [  ]
| வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில், நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றவுள்ளது. இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 12:14 AM]
| தமிழ்நாடு, புதுவையில் பிரெஞ்சு தூதரகத்தில் பொய்யான பாஸ்போர்ட்டை அளித்து இலங்கையைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல வீசா அனுமதி கேட்பதாக தூதரக அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் நேற்று கைது செய்யப்பட்டனர். |
[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 12:02 AM] [  ]
| பொது மக்களின் நன்கொடைகளைப் பெற்று மிகவும் சிறப்பான முறையில் இயங்கி வந்த மட்டக்களப்பு, நொச்சிமுனையில் அமைந்துள்ள தரிசனம் விழிப்புலனற்றோர் பயிற்சிப் பாடசாலையானது தற்போது அதை நிருவகிக்கும் பதவி வெறியுடைய சுயநலவாதிகளின் மனிதநேயமற்ற செயற்பாடுகளினால் மிகவும் இழிவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் |
|
[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
| கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது. |
|