செய்திகள் - 08-02-2013
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 11:36 PM]
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற குற்றச்சாட்டின் பேரில் கைதாகி பிணையில் விடுக்கப்பட்ட சந்தேகநபர்களில் 14 பேர் மீண்டும் சட்டவிரோதமாக படகில் ஆஸி. சென்றுவிட்டனர். அவ்வாறு சென்ற சந்தேகநபர்கள் 14 பேருக்கும் நீதவான் பிடியாணை உத்தரவு பிறப்பித்தார்.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 07:17 PM] []
ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மாலை தனி விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்திறங்கி அங்கிருந்து கார் மூலம் திருப்பதி திருமலைக்கு சென்றுள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 05:41 PM] []
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேசத்தித்குட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை எனும் கிராமத்தில் வாழும் பொது மக்கள், தமக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 04:28 PM]
ஜனாதிபதி மகிந்தவின் யாழ்ப்பாண வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நிலைமைகள் பலப்படுத்தப்படுகின்றன.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 04:08 PM]
பயங்கரவாதி நிதியளிப்பு தடுப்பு சமாவாய சட்டமூலம் இலங்கையின் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும், இந்த சட்டம் குறித்து சிறுபான்மை மக்கள் மத்தியில் தெளிவின்மை காணப்படுகிறது.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 03:59 PM]
தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்தர் மீதான தாக்குதலுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 03:46 PM]
பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவதனை தடுக்கும் சட்ட மூலமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 03:14 PM]
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக் கைதியொருவர், கைத்தொலைபேசியை மலவாயிலில் மறைத்து வைத்திருந்த சந்தர்ப்பத்தில் அதன் ரிங்டோனினால் சிறை அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 02:49 PM] []
நாட்டில் எந்தவொரு முஸ்லிம் மதஸ்தலமும் இதுவரையில் தாக்குதலுக்குட்பட்டிருக்கவில்லை அவ்வாறு தாக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித்தலைவரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கரிப்பதாக அரசாங்கம் கூறுவதை எண்ணி நாட்டிலுள்ள முஸ்லிம் மக்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் என அசாத் சாலி தெரிவித்தார்.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 01:58 PM] []
இன்று (08/02/2013) காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தை கொடுங்கோலன் இராஜபக்ச இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து "தமிழர் எழுச்சி இயக்கத்தைச் சார்ந்த 70 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் முற்றுகையிட்டனர்.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 01:19 PM] []
யாழ்.நாவற்குழி பிரதேசத்திலுள்ள நிலமைகளைப் பார்வையிடச் சென்றிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் அங்கு குடியேற்றப்பட்டிருக்கும் சிங்கள மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 01:10 PM] []
இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளின் எல்லை தாண்டிய மீன்பிடியை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி வடமராட்சி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை கண்டன ஆர்பாட்டப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 01:02 PM] []
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் விடுதலைப்புலிகளினால் பயன்படுத்தப்பட்ட டோபிடோ வகை கைக்குண்டுகள் சில இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 12:56 PM] []
யாழ். புத்தூர் பகுதியில் நேற்று இனந்தெரியாதோரால் தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்தர் மோசமாக தாக்கப்பட்டமையையும், தினக்குரல் பத்திரிகைகளும், மோட்டார் சைக்கிளும் எரியூட்டப்பட்டமையையும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 12:51 PM]
சென்னையில் இலங்கை வங்கிக் கிளை மீதான தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள தமது நாட்டின் நிறுவனங்கள் மற்றும் குடிமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க இலங்கை கோரியுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 12:41 PM]
மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் புதுடில்லியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே ஜனாதிபதியின் பயண ஒழுங்கில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அச்செய்திகள் குறிப்பிடுகின்றன.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 12:10 PM] []
ராஜபக்ச திருப்பதி கோவிலுக்கு வருவதை கண்டித்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தை அதியமான் தலைமையில் தமிழர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சுமார் 40 தோழர்கள் முற்றுகை செய்தனர்.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 12:03 PM]
யாழ் தினக்குரல் பத்திரிகையின் விநியோகத்தர் மீது நேற்று வியாழக்கிழமை சிங்கள படைக் கைக்கூலிகள் நிகழ்த்திய கொலைவெறித் தாக்குதலை ஊடக இல்லம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 11:15 AM] []
இந்தியாவுக்கு இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்த கயாவை சென்றடைந்துள்ளார்
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 11:10 AM]
கிளிநொச்சி, ஸ்கந்தபுரத்தில் இரு இந்திய பிரஜைகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 10:58 AM] []
மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியா வந்ததைக் கண்டித்து இன்று இடிந்தகரையில் அணு உலை போராளிகள் தங்கள் எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்துள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 10:30 AM]
யாழ் தினக்குரல் பத்திரிகை விநியோகத்தர் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதுடன்,  விநியோகிப்பதற்கான எடுத்துச் சென்ற பத்திரிகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன எரிக்கப்பட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 10:11 AM] []
இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌ஷ இன்று திருப்பதிக்கு மாலை செல்லவுள்ளார். அவரது வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள இந்நிலையில் திருப்பதி திருமலை தேவஸ்தான இணை செயல் அலுவலகத்துக்கு இன்று காலை 6 மணிக்கு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 09:25 AM] []
இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் கறுப்புடை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, "டெசோ' உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து இன்று டெசோ குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 08:34 AM] []
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய பயணத்தை கண்டித்து, மதிமுக சார்பில் டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 07:44 AM] []
இந்திய அரசின் உறுதிமிக்கத் துணையோடு, தமிழீழ மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து, இனப்படுகொலையை அரங்கேற்றிய ஜனாதிபதி ராசபக்‌சவின் இந்திய வருகையைக் கண்டித்து இன்று காலை ஓசூரில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ரயில் மறிப்புப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 07:40 AM] []
அக்கரைப்பற்று கடல் பிரதேசத்தில் நேற்று இராட்சத திருக்கை மீன் ஒன்றை மீனவர்கள் பிடித்துள்ளனர்.  
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 07:11 AM]
தமிழ்  ஊடகத்துறையை சார்ந்தவர்கள் தாக்கப்படுவதை நாம் இனியும் வேடிக்கை பார்க்க முடியாது. ஐநா மனித உரிமை குழு கூட்டத்தில் வாக்களிக்க இருக்கும் நாடுகளின் கொழும்பு தூதுவர்கள்  இந்த உண்மை நிலவரத்தை கவனத்தில் எடுக்க வேண்டும்  என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 06:49 AM]
இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் பத்திரிகைகள் மீதான தாக்குதல்கள் நெருடல்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் இலங்கையில் பத்திரிகை சுதந்திரம் இல்லை என அரசால் அறிவிக்கப்பட வேண்டும் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சி. பாஸ்க்கரா தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 06:07 AM]
உலகின் பாரிய விமானங்களைக் கையாளக் கூடிய வசதிகளை மத்தள சர்வதேச விமான நிலையம் கொண்டிருப்பதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 05:51 AM]
பத்தரமுல்லை, ஜயந்திபுர பகுதியில் வானிலிருந்து மர்மப் பொருளொன்று விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 05:19 AM]
எட்டு தேய்காய்களை திருடியமைக்காக பாடசாலை மாணவி ஒருவர் பொலிஸாரினால் கைது  செய்யப்பட்டுள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 04:31 AM] []
யாழ். குருநகர் பகுதியில் படையினரால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் குடும்பஸ்த்தரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 04:17 AM]
இலங்கையில் உள்ள தமிழர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். மத்திய அரசின் தவறான செயல்பாட்டால் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 02:48 AM]
திருகோணமலை நகரம் 85 மில்லியன் அமரிக்க டொலர்கள் நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 02:39 AM]
மூன்று தசாப்தங்கள் போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த காலம் தேவைப்படுகிறது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 02:38 AM]
பாரியளவிலான ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 02:30 AM]
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார்.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 02:24 AM]
நாட்டை மீளவும் காலணித்துவ ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்க முயற்சிக்கப்பட்டு வருவதாக காலணித்துவ ஆட்சிக்கு எதிரான அமைப்பின் அழைப்பாளர் தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 02:22 AM]
வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 02:16 AM]
நிறைவேற்று அதிகார முறைமை ஏன் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்ப வேண்டுமென கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் பீடாதிபதி மாதுலுவே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 02:14 AM]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று இந்தியாவிற்கு விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 01:51 AM]
மனித உரிமைகள் பேரவைக்காக அனுப்பப்படவுள்ள இராஜதந்திர குழு விரைவில் தீர்மானிக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
Advertisements
[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.