செய்திகள் - 09-02-2013
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 11:57 PM]
சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இந்தியப் பயணம் அவருக்கு பெருத்த அவமானத்தையும் சங்கடத்தையுமே அவருக்கு உருவாக்கியுள்ளது.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 11:29 PM]
தமிழக அரசியலையும், இலங்கை விவகாரத்தையும் எப்போதும் பிரிக்க முடியாது. தற்போது, ராஜபக்ச வருகையால், மீண்டும், தமிழக அரசியல் களம் பரபரப்பானது.  ராஜபக்சவின் இந்தியப் பயணம் குறித்து, முக்கிய கட்சி பிரபலங்களின் கருத்துக்கள்...
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 10:50 PM]
கொழும்பில் எலிகளை கட்டுப்படுத்தும் செயன்முறை மந்த நிலையை அடைந்துள்ளமையால் அவை தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே இருந்து வருவதாக கொழும்பு மாநகரசபை வைத்தியர் காரியவசம் தெரிவித்தார்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 08:33 PM]
இரட்டை பிரஜாவுரிமை என்ற பெயர் மாற்றப்பட்டு ‘வெளிநாட்டில் வாழும் இலங்கையர்’ என்ற பெயரில் இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 07:28 PM] []
சுவிஸ் சூரிச் மாநகரில் இன்று மாலை இடம்பெற்ற சிவராம் நினைவுப் பணிமன்றம் ஏற்பாடு செய்த 5வது நினைவுக் கருத்தரங்கில் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இனப்பிரச்சினையும் சமகால அரசியலும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 06:13 PM]
யாழ். பிறவுண் வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணை தூதுவரின் செயலாளர் வீட்டில் பெறுமதியான உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 04:20 PM] []
நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு அற்புதம்மாள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 04:17 PM]
இலங்கையில் சமய தலங்கள் நிறுவனங்கள் மீதான வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்க்கத்தக்க விடயமாகும்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 04:13 PM]
ஈழத் தமிழர்கள் மீது ’ஜெயலலிதா மிகுந்த அக்கறை கொண்டவரைப் போல தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார், இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் அவர் போடும் இரட்டை வேடம் குறித்து தமிழ் மக்கள் நன்கு அறிவர்’’ என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 04:08 PM]
இலங்கையில் பள்ளிக்கூடத் தேவைக்காக 8 தேங்காய்கள் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 13 வயதுச் சிறுமியை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது தவறு என்று நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 03:55 PM]
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக ஏழு நாடுகள் சதித் திட்டங்களை தீட்டி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 03:49 PM]
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் கறுப்பின கொள்ளைக் கூட்டங்கள் இயங்கி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 03:38 PM]
நீர்கொழும்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் இரண்டு வயதான வாடகைக் குழந்தையைக் காட்டி பிச்சையெடுத்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 03:13 PM] []
பிரித்தானிய தமிழர் பேரவையும் தமிழர் தோழமை இயக்கமும் இணைந்து கடந்த திங்கட்கிழமை இங்கிலாந்து குயின்மேரி பல்கலைகழகத்தில் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டினையும் தமிழ் தேசத்தின் இன அழிப்புக்கு நிதி வழங்கும் பல்தேசிய நிறுவனங்களையும் நிராகரிக்கும் கருத்தரங்கு ஒன்றினை நடத்தின.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 02:37 PM] []
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள படுவான்கரை மக்களின் அடிப்படைத் தேவைகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாமலுள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 02:24 PM]
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கல்வி, சுகாதாரம், சிவில் நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் திருவனந்தபுரம் வந்த, இலங்கை அரசின் பொது நிர்வாகத்துறை அமைச்சர் செனவிரத்ன, செய்தியாளர்களிடம் கூறினார்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 02:16 PM]
இந்தியாவின் மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளி அஜ்மல் கசாபுக்கும், பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகம்மது அப்சல் குருவுக்கும் ரகசியமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 01:41 PM] []
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட புதூர், திமிலைதீவு, வீச்சுக்கல்முனை போன்ற கிராமங்களுக்கு குழாய் மூலம் வழங்கப்படுக்கின்ற குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 01:01 PM] []
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மழை வெள்ளம் ஓய்ந்துள்ளபோதில் பெரும்போக வேளாண்மை செய்கை அறுவடை ஆரம்பிப்பட்டள்ளது.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 11:48 AM]
ஆன்மீக தலங்கள் மற்றும் மத சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெறுமாயின் அது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க விசேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 11:12 AM]
இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகுகளினால், வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, எம்ஜ்டர்டேமை தளமாக கொண்ட கடல்வள ஆராய்ச்சி மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 10:55 AM] []
இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது அதை தடுக்காமல் இன்று ராஜபக்சவை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக கருணாநிதி நாடகம் போடுகிறார் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 10:47 AM] []
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக வருகிற 27-ந் தேதி தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இதனை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் புதுவையில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருந்தனர். இதற்கு புதுவை பொலிஸார் அனுமதி மறுத்தனர்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 10:47 AM]
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் தொழில் செய்து வந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 10:18 AM] []
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்குள் வந்தது சரியா? இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்து பிணமாலை அணிந்துவரும் அவரை நாம் வரவேற்கத்தான் வேண்டுமா?  இலங்கைத் தமிழர்களுடைய பூர்வீக அடையாளங்கள் அழித்து துடைத்தொழிக்கப்படுகின்றனவா?
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 10:17 AM]
இந்தியாவிற்கான ஆன்மீக விஜயத்தை நிறைவு செய்து கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை மீண்டும் தாயகம் திரும்பினார்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 09:49 AM]
'செயற்பாட்டு மூலோபாயம்' என்கிற சொல்லாடல், மேற்குலக புவிசார் அரசியல் நோக்கர்களால் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படுவதனை அவதானிக்கலாம்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 09:49 AM]
உள்ளூராட்சி சபைகளில் நிலவும் வெற்றிடங்களை பழைய முறைப்படி நிரப்ப முடியும் என்று சட்ட மா அதிபர் அறிவித்துயுள்ளார்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 09:34 AM]
கச்சத்தீவு ஆலய விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் போர்வையில், தீவிரவாதிகள் ஊடுருவல் இடம்பெறலாம், என்ற சந்தேகத்தினால், எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 09:02 AM]
கொழும்பு நவலோக வைத்தியசாலையில் ஸ்கேன் செய்யும் போது இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புத்தினி கெளசல்யா என்ற 5 வயதான சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 08:52 AM] []
ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களை, ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கண்டித்துள்ளார்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 08:25 AM]
சவூதி அரேபியாவில் தனது நண்பருடன் இணைந்து மாந்திரீக வேலைகளில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம், 100 கசையடிகளையும் ஒருவருட சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 08:08 AM]
யாழ்.தினக்குரல் செய்தித்தாள் விநியோகஸ்தர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு சில நாட்களேயாகும் நிலையில், தொடர்ந்தும் பத்திரிகை விநியோகஸ்தர்களை படைப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 08:06 AM]
தூக்குதண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப்படுவது தொடர்பாக பல சர்ச்சைகள் இன்று அடிபடுகின்றன. சில கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 07:35 AM] []
தமக்கு பல நாடுகளிலும் எதிர்ப்பு இருப்பதாகவும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டேன் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 07:22 AM]
யாழ். திருநெல்வேலி பகுதியில் இலங்கையின் தேசியக் கொடியினை காலால் மிதித்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 07:07 AM]
தமிழக தலைவர்களை திட்டி தீர்க்காமல், அரசாங்கம் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில் ஜனாதிபதி மகிந்தவிற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களின்  கொந்தளிப்பு நிலைமைகள் தொடர்பாக கருத்து வெளியிடும் போது மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 03:31 AM]
கண்டி பேராதனை வீதி கட்டுக்கலை பகுதியில் தந்தையொருவர் தனது இரு மகன்களுக்கும் விஷம் அருந்தக் கொடுத்து, தானும் அருந்தித் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 03:25 AM]
அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் நபரொருவரைக் கொலை செய்த மூவர் குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட நிலையில், கல்முனை நீதிமன்றம் அந்த மூவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 02:08 AM]
ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிராகத் தமிழகம் தகிக்கிறது! ராஜபக்சவுக்கு எதிராக முதன்முத​லாக தமிழக எல்லையைத் தாண்டி ம.தி.மு.க. சார்பில் மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி சாஞ்சியில் போராட்டம் நடந்தது.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 01:50 AM]
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் அது தொடர்பில் தமிழகத்தில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பிலும்; இந்திய மத்திய அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய மத்திய தகவல்துறை அமைச்சர் மனீஸ் திவாரி தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 01:44 AM] []
சிங்கள ஆண் தமிழ் பெண் திருமணங்கள். இதுவே, மிச்சம் மீதி ஈழத் தமிழ் சமூகத்தின் அடையாளங்களையும் அழிப்பதற்கான புதிய ஆயுதம் என்பதை பயணத்தில் அறிய முடிந்தது.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 01:39 AM]
சிங்கள பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு விசேட அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பௌத்த மஹாநாயக்க தேரர்களை உள்ளடக்கிய வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 01:36 AM]
தேவையின்றி மாணவர்களிடம், பணம் அறவீடு செய்யும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 01:34 AM]
கனடாவுக்கு 492 இலங்கை அகதிகளை அழைத்து வந்த எம் வீ சன் சீ கப்பலின் உரிமையாளருக்கு பிணை வழங்க,கனேடிய நீதிமன்றம் மறுத்துள்ளது.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 01:29 AM]
பிரபல கிரிக்கட் வீரர் திலகரட்ன டில்சானின் வீட்டு பாதுகாப்பு கமரா அயல் வீட்டு நீச்சல் தடாகத்தை நோக்கிப் பொருத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 01:26 AM]
இலங்கை தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் அரசாங்கம் கோரியுள்ளது.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 01:23 AM]
தமது வீட்டை இலங்கைப் பொலிஸார் மூன்று தடவைகள் சோதனையிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 12:58 AM] []
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பாக தன் உடலில் தீயிட்டு இலங்கைத் தீவில் இனப்படுகொலை செய்யப்படும் தமிழர்களின் உயிரைக் காக்கக்கோரி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 'ஈகப்பேரொளி" முருகதாசனின் நான்காம் ஆண்டு நினைவு நாளில் லண்டனில் நினைவுவணக்க நிகழ்வும், நினைவுக்கல் நடுகையும் நடைபெறவுள்ளது.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 12:52 AM]
அமைச்சரவையில் இருக்கும் விமல் வீரவன்ச அமெரிக்காவிற்கு எதிராக கூறிவரும் கருத்துகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதுவித தொடர்பும் கிடையாது. விமல் வீரவன்ச கூறிவரும் கருத்துக்கள் தொடர்பில் தாம் விசாரிக்கவுள்ளோம் இவ்வாறு ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 12:32 AM]
தோ்தல்களில் வெற்றிபெற முடியாத தமிழக அரசியல்வாதிகளினால் தமது அரசியல் இருப்பை நீடித்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் காரணமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கீர்த்திக்கு எந்த இழுக்கும் ஏற்படப் போவதில்லை என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 12:00 AM]
இந்தியா ஏனைய நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
Advertisements
[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.