2012 இல் நடந்த சில முக்கிய நிகழ்வுகளின் மீள்பதிவுகள்

நடந்து வந்த பாதை தன்னை திரும்பிப் பாரடா என்பதற்கிணங்க, மனித சமுதாயத்தில் கடந்த காலம் என்பது மிக முக்கியமானதொன்றாகும். ஒரு நாட்டில் வரலாறு என்பது கடந்த கால  நிகழ்வுகளைக் கொண்டே பதியப்படுகிறது.

அந்தவகையில், நாம் புதியதொரு ஆண்டில் (2013) கால்பதிக்க தயாராகி விட்டாலும் கடந்த 2012ம் ஆண்டின் பல நிகழ்வுகள் எம்மனதில் ஆழமாக இடம்பிடித்து விட்டுள்ளன.

இலங்கையைப் பொறுத்தவரையில் அதுவும் தமிழர்களைப் பொறுத்தவரையில் மிக மறுக்க முடியாத பல நிகழ்வுகள் 2012ம் ஆண்டில் இடம்பெற்றுள்ளமை யாவரும் அறிந்த விடயமே.

எனவே 2012ம் ஆண்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளின் மீள்பதிவுகளை தொகுப்பாக்கி ஒரே பார்வையில் உங்களுக்காக....!

விடுதலைப் புலிகளின் முத்திரைகள் வெளியீடு
விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்த முத்திரைகளை பல புலம்பெயர்நாடுகளில் வெளியிட்டு, தமிழீழத்தை உலகெங்கும் நிலைநாட்டவும் உலகநாடுகள் அங்கீகரிக்கவேண்டும் என்பதற்காகவும் பற்பல போராட்டங்களின் மத்தியிலும் தலைவர் பிரபாகரன் அவர்களின் முகம், புலிக்கொடி, மற்றும் தமிழீழ சின்னங்கள் போன்றவற்றை முத்திரைகளாக்கி வெளீயிட்டுள்ளனர். இருப்பினும் அம்முத்திரைகள் ஒட்டி அஞ்சலிடப்படும் தபால்கள் எதுவும் விநியோகிக்கப்படமாட்டாது என இலங்கை அரசு தனது கோபத்தைக் காட்டியது.
அவை சம்பந்தமான விபரங்களை பார்வையிட..

ஐ.நாவில் அமெரிக்காவால் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட குற்றப் பிரேரணை
ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. இலங்கை அரசாங்கம் மாபெரும் இராஜதந்திரச் தோல்வியைச் சந்தித்துள்ளது.உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்புக்கு மட்டுமல்ல, இலங்கைத் தீவை மையப்படுத்திய உலக அரசியல் வெளியிலும், இப்பிரேரணை விவகாரம் முக்கிய விடயமாக மாறியிருந்தது.

சிறைச்சாலையும் கைதிகளும்
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகளை வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு அடிக்கடி மாற்றுவதும், அவர்களுக்கான உரிய தீர்ப்பு வழங்காமல் காலவரையறையின்றி தடுத்து வைத்திருப்பதனாலும் சிறைச்சாலைகளில் அவ்வவ்ப்போது கலவரங்கள் வெடித்துவந்தன. மேலும் பல அரசியல் கைதிகள் சிறைச்சாலையிலேயே உயிரிழந்துள்ள சம்பவங்களும் நடந்தன. அண்மையில் வெலிக்கடைச் சிறையில் மாபெரும் கலவரம் ஏற்பட்டு பலத்த சேதங்கள் ஏற்பட்டன.

முள்ளிவாய்க்கால் யுத்தமும் ஐ.நா. இரகசிய அறிக்கையும்
இலங்கையில் முன்றரை ஆண்டுக்கு முன் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐ.நா சபை மோசமாகத் தவறியுள்ளது என்று .ஐநாவுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஒரு இரகசிய அறிக்கை பிபிசியிடம் கசியவிடப்பட்டுள்ளது. இருப்பினும் அவ் அறிக்கையின் பல பகுதிகள் கறுப்புமையினால் அழிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அப்பக்கங்களும் வெளியாகியமை இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

முன்னாள் போராளிகளும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும்
சரணடைந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு, அவர்களுக்கு பலவழிகளில் நிவாரணங்களும் பல வசதிகளையும் வழங்கியுள்ளது அரசாங்கம். இருப்பினும் அண்மையில் யாழ், கிளிநொச்சி, முல்லத்தீவு மாவட்டங்களில் இராணுவப் புலனாய்வாளர்களால் பலர் கைதாகியுள்ளபோதிலும் அவர்களுள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளிகளும் அடங்கியுள்ளனர்.

பிரதம நீதியரசர் விவகாரம்
திவிநெமு சட்டத்தை அமுலாக்க முடியாது என பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்ததை அடுத்து அவரைப் பழிவாங்கும் முகமாக அவர் மீது குற்றப் பிரேரணையை தாக்கல் செய்தது அரசு.

தமிழீழ மாவீரர் நாள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் மாவீரர் நாள் என்பது ஒரு புனிதநாள். ஈழ விடுதலை வானில் விண்மீன்களாய், நித்தமும் நீங்காதொளிரும் புனிதர்களாம் மாவீரர்களை, தம்முயிரை அர்ப்பணித்துத் தரணியிலே தமிழினத்தைத் தலைநிமிர வைத்த மானமறவர்களை, இவ்வுலகெங்கும் பரந்துள்ள தமிழரெல்லோரும் தம் நெஞ்சம் நெகிழக் கண்கள் பனிக்க மலர்தூவிச் சுடரேற்றி வழிபடும் திருநாள். இத்திருநாளை புலம்பெயர் நாட்டில் வசிக்கும் அனைத்து தமிழ் மக்களும் உணர்வுபூர்வமாக இம்மாவீரச் செல்வங்களுக்காக அஞ்சலி செலுத்தி வந்தனர்.

மாவீரர்நாளும் பல்கலைக்கழக மாணவர்களும்
2012ம் ஆண்டு திருக்கார்த்திகை விளக்கீட்டு நாளும் மாவீரர் நாளும் ஒரேதினம் வந்ததனால், யாழில் மக்கள் மாவீரர்தினத்தை விளக்கேற்றி அனுஸ்டித்துவிடுவார்கள் என்ற அச்சத்தினால் படையினர் பலத்த பாதுகாப்பை மேற்கொண்டிருந்த போதிலும், மாவீரர் நாள் தொடர்பான சுவாரொட்டிகள் ஒட்டப்பட்டு, சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தினர் என்ற குற்றச்சாட்டில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கைதான போதிலும் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மாயன் கலண்டரும் உலக அழிவும்
மாயன் நாள்காட்டி 21.12.2012 ஆம் திகதி காலை 11:11 மணியளவில் முடிவுக்கு வருவதை மேற்கோள் காட்டி உலகம் அழிவை நெருங்குகின்றது என்று செய்திகள் வேகமாக பரவி வந்ததோடு, இலங்கையில் பல பாகங்களில் அதிசயிக்கத்தக்க சில இயற்கைக்கு மாறான செயற்பாடுகளும் நிகழ்ந்தன.

மேலும், 2012ம் ஆண்டில் நாட்டில் பல கைதுகளும், கொலைகளும், ஆலயங்களிலும் வீடுகளிலும் கொள்ளைகளும், பல அரசியல் கட்சிகள் பிரச்சினைகளும், தீர்க்கப்படாத அரசியல் செயற்பாடுகளும், பல்வேறான ஆர்ப்பாட்டங்களும், சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு பயணித்தவர்கள், நாடுகடத்தப்பட்ட தமிழர்கள் என இன்னும் பல நிகழ்வுகள் நடந்துள்ளன.

மேலும் 2012ம் ஆண்டு பதியப்பட்ட செய்திகள் அனைத்தையும், திகதி, மாத ரீதியாக பார்வையிட CLICK HERE

பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 05:38.36 PM ]
மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் யுத்தகளத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவேந்தும் நாளாகவே உணரப்படுவதாகவும், விடுதலைப்புலிகளை நினைவு கூர்ந்ததாக கூறப்படுவதில் எந்தவொரு உண்மையும் இல்லையெனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
[ Tuesday, 21-05-2013, 04:21.00 PM ]
புனர்வாழ்வு பெற்றுவருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எஞ்சியுள்ள 340 முன்னாள் போராளிகளையும் இந்த வருட இறுதிக்குள் விடுவிக்க எதிர்பார்க்கப்படுவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு குறிப்பிடுகின்றது.
[ Tuesday, 21-05-2013, 04:09.15 PM ]

இலங்கையில் இவ்வருடத்தின் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான காலத்தில் 34 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

[ Tuesday, 21-05-2013, 02:57.53 PM ]

அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டம் கிடையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 02:46.37 PM ]

வவுனியா கனகராயன்குளத்தில் மாற்றுத் திறனாளியான 18 வயது யுவதியொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Tuesday, 21-05-2013 12:20:54 GMT ]
தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 18:25:02 GMT ]
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொண்டு 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Tuesday, 21-05-2013 14:42:14 GMT ]
சுவிட்சர்லாந்திலுள்ள லாசேன் நகரில் சிறைக்கைதியால் கடத்தப்பட்டுக் கொலைச் செய்த இளம் பெண்ணுக்காக சுமார் 250 பேர் திரண்டு வெள்ளை உடை அணிந்து நீதி கேட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Tuesday, 21-05-2013 18:09:36 GMT ]
மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் என்னும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.
Advertisements
[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.