![]() |
|
யாழ்ப்பாணத்தில் இந்திய வியாபாரிகள் வியாபாரம் செய்யத் தடை!
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 01:27.10 PM GMT ]
யாழ்ப்பாணத்தில் இந்திய வியாபாரிகள் தங்களது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நடைபாதை வியாபாரங்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து யாழ்.மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார். யாழ். வணிகர் கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், யாழ்.மாநகர எல்லைக்குள் நடைபாதை வியாபாரிகள் மற்றும் இந்திய வியாபாரிகளினால் யாழ்.வர்த்தகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக, யாழ். மேயருக்கும், மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கும் எழுத்து மூலம் அறிவித்தோம். இச்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு யாழ். மேயர் எழுத்து மூலம் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளார் என யாழ். வணிகர் கழக தலைவர் குறிப்பிட்டார். |
| Copyright (c) 2008-13 TamilWin.com, All rights reserved. |