செய்தி
கடுதாசி துண்டில் ஆட்சி செய்த காலம் மீண்டும் உருவாக கூடாது :- ஜனாதிபதி மஹிந்த
[ திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 09:40.14 PM GMT ]
கடுதாசித் துண்டொன்றில் நாட்டை ஆட்சி செய்த காலம் மீண்டும் இந் நாட்டில் உருவாக இனிமேலும் யாருக்கும் இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சட்டங்களை அலட்சியம் செய்து அரசியல் இலாபம் தேட முனையும் குழுக்களை இனங்காண்பது நாட்டை நேசிக்கும் சகலரதும் பொறுப்பாகுமெனவும் மஹிந்த தெரிவித்தார்.

இன்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் இடையிலான விசேட சந்திப்பில் உரையாற்றிய போதே மஹிந்த இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் விஜயதாச ராஜபக்ச உட்பட இலங்கை நீதித்துறையின் 14 சட்டத்தரணிகள் சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

நீதித்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் இவர்கள் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தினர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மஹிந்த ராஜபக்‌ஷ துண்டுக் கடிதமொன்றின் மூலம் நாட்டை ஆட்சி செய்த காலம் மீண்டும் உருவாக இட மளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இங்கு கருத்து வெளியிட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிகாரிகள்,  சில குழுக்கள் தமது சங்கத்தில் ஊடுருவி அரசியல் இலாபம் தேட முனைவதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் சட்டத்துறையில் இடம்பெற்ற விவகாரங்களுக்கும் தமது சங்கத்திற்கும் எத்தகைய சம்பந்தமுமில்லை எனவும் சட்டத்தரணிகள் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 22-05-2013, 05:34.40 PM ]
மட்டக்களப்பு புல்லுமலை, உறுகாமக் கிராமங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக வருகை தந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான குழுவினரிடம் துண்டுப் பிரசுரம் கையளித்த இருவரை இலங்கை புலனாய்வுத்துறையினர் கைது செய்துள்ளனர்.
[ Wednesday, 22-05-2013, 04:14.38 PM ]
பிரான்ஸின் கடற்படைக் கப்பல் 'ஜாக்குஸ் கார்டியர்"  இன்று புதன்கிழமை பிரான்ஸ் நாட்டுக்  கடற்படையினர் 53 பேருடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
[ Wednesday, 22-05-2013, 03:54.36 PM ]

போர்க் குற்றவாளியும் தற்போதைய வடமாகாண ஆளுநருமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, இணைய ஊடகவியலாளர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று மிகக் கேவலமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி திட்டியுள்ளமையானது குடாநாட்டு ஊடகவியலாளர்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

[ Wednesday, 22-05-2013, 03:39.55 PM ]

அவுஸ்திலேரலியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழ்வதாகத் தெரிவித்து  கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த  இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

[ Wednesday, 22-05-2013, 03:23.32 PM ]

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Wednesday, 22-05-2013 17:04:07 GMT ]
ஈராக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் குறைவாக உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே மத நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
[ Wednesday, 22-05-2013 11:38:24 GMT ]
சினிமா, கிரிக்கெட்டிற்கு அடுத்தபடியாக அரசியல்வாதியாகவும் வலம் வரவிருக்கிறார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.
[ Wednesday, 22-05-2013 14:42:16 GMT ]
ராஜஸ்தான் றொயல்ஸ் அணிக்கெதிரான ஆறாவது ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
[ Wednesday, 22-05-2013 07:38:03 GMT ]
கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
[ Wednesday, 22-05-2013 11:53:12 GMT ]
கமல்ஹசான் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.