செய்தி
இலங்கை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பொதுநலவாய நாடுகள் ஆராய்கிறது!– கமலேஸ் சர்மா
[ திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 11:50.42 PM GMT ]
இலங்கையின் பிரதம நீதியரசரை பதவி விலக்கியமையானது பொதுநலவாய நாடுகளின் அரசியல் அமைப்பையும், கொள்கைளையும்  மீறும் செயலாகும். எனவே இலங்கை தொடர்பில் இந்த விடயத்தில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளதாக அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து கமலேஸ் சர்மா தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

எனினும் இலங்கை அரசாங்கம் அதனை பொருட்படுத்தாது பிரதமநீதியரசரை பதவி நீக்கம் செய்துள்ளது.

எனவே இந்த செயல் இலங்கையின் நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் பிரச்சினையை அதிகப்படுத்தியுள்ளதுடன், பொதுநலவாய நாடுகளின் மதிப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கமலேஸ் சர்மா எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 01:49.58 PM ]
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையர்களை இழந்த சிறுவர்களின் எதிர்கால நலனிற்காக பன்னாட்டு மனித நேய நிறுவனம் ஒன்று ஐம்பது லட்சம் ரூபாய்களை வட மாகாண சபை ஊடாக கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்திற்கு வழங்கியிருந்தது. 
[ Wednesday, 19-06-2013, 12:48.51 PM ]

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமைக் கடத்திய நபர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என ஆட்டோ சாரதி ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

[ Wednesday, 19-06-2013, 12:22.48 PM ]

வெலிமடையிலிருந்து, நுவரெலியா நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா பஸ் ஒன்று சீத்தாஎலிய பகுதியில் குடைசாய்ந்துள்ளது.

[ Wednesday, 19-06-2013, 11:36.02 AM ]
கொழும்பு ஜோன் டி சில்வா ஞாபகார்த்த மண்டபம் மற்றும் தேசிய கலா பவனம் என்பன, அவை அமைந்துள்ள இடங்களில் இருந்து அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை கலைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
[ Wednesday, 19-06-2013, 11:19.18 AM ]
வடக்குத் தேர்தலுக்கு எதிராக கூக்குரல் போடும் சம்பிக்க, விமல், பொதுபல சேனா, ராவணா பலய மற்றும் ராவய போன்றோர் ஜனாதிபதியின் திட்டத்தையே முன்னெடுக்கின்றனர் என கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார்.
[ Wednesday, 19-06-2013 10:48:27 GMT ]
தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான நபர்களின் விபரங்களை அமெரிக்க கேட்டுள்ளதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 08:00:12 GMT ]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலை ஐ.சி.சி துபாயில் வெளியிட்டது.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 10:14:55 GMT ]
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நயன்தாராவின் மவுசு கூடிவிட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.