செய்தி
புதிய பிரதம நீதியரசர் நியமனம்! தூக்குமரத்தை தயார்படுத்திக்கொண்டே வழக்குகள் விசாரிக்கப்படும்!
[ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி 2013, 12:29.51 AM GMT ]
அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் தொடர்பிலான பல வழக்குகள் கடந்த காலங்களில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வாபஸ் பெறப்பட்டது. அப்போது சட்டமா அதிபராக பதவி வகித்தவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டால் தூக்குமரத்தை தயார்படுத்திக்கொண்டே வழக்குகளின் விசாரிக்கப்படும்  என்று சட்டத்தரணி சந்திரபால குமாரகே தெரிவித்தார்.

அமெரிக்கா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் தூக்குமரத்தை தயார் படுத்திக்கொண்டே வழக்குகளை விசாரித்தனர். அவ்வாறதொரு நிலைமை இங்கு ஏற்படுவது வெகுதொலைவில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நிப்போன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவி விலக்க வேண்டாம் என இந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையினர், அமைப்புக்கள், சட்டத்தரணிகள், ஜனநாயகத்தை நிர்வகிக்கும் நாடுகள், சர்வதேச சட்டநிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளபோதிலும், அவற்றையெல்லாம் கணக்கில் எடுக்காமல் பிரதம நீதியரசருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றப்பிரேரணை விவகாரத்தை சட்டம் தொடர்பிலும் போதியளவான கல்வியறிவு இல்லாதவர்களுமே தெரிவுக்குழு என்ற வகையில் கையாண்டனர்.

இவ்வாறான நிலையிலேயே பிரதம நீதியரசரை பதிவியிலிருந்து நீக்குவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். அதனை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

அரசாங்கம் அரசியலமைப்பை மீறியுள்ளது. அரசியலமைப்பை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும்.

சட்டமா அதிபர் திணைக்களம் 'சூனியம்' ஆக்கப்பட்டது போல. நீதித்துறையையும் சூனியமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அரசியல் வாதிகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பல்வேறு கொலைகள் தொடர்பிலான வழக்குகள் கடந்த காலங்களில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.

அவ்வாறான காலப்பகுதியில் சட்டமா அதிபராக பதவிவகித்தவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டால் தூக்குமரத்தை தயார் படுத்திக்கொண்டே வழக்குகளின் விசாரணைகளை ஆரம்பிக்கப்படும்.

அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவது வெகுதொலைவில் இல்லை என்றார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-05-2013, 05:58.20 PM ]

முல்லைத்தீவு பனிச்சங்குளம் பாலத்திற்குள் இருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் இரண்டு படையினரின் உடலங்கள் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

[ Friday, 24-05-2013, 05:55.17 PM ]
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் வடபகுதியின் மனிதாபிமான உதவிக்கான தேவைகள் குறித்து ஐநாவின் முக்கிய அதிகாரி ஒருவர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை இன்று கிளிநொச்சியில் சந்தித்து உரையாடியிருக்கின்றார்.
[ Friday, 24-05-2013, 03:31.36 PM ]
கடந்த 18ம் நாள் காலி முகத்திடலில் நடைபெற்ற போர் வெற்றி விழா அணிவகுப்பின் போது, சிறிலங்கா கடற்படைப் படகு ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் தொடர்பாக, இலங்கை கடற்படைத் தளபதியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
[ Friday, 24-05-2013, 03:01.54 PM ]

தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

[ Friday, 24-05-2013, 02:37.52 PM ]
சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும்.
[ Friday, 24-05-2013 11:13:27 GMT ]
உலகின் மூன்றாவது உயரமான சிகரம் கஞ்சன்ஜங்கா. கடந்த திங்கட்கிழமை 8,586 மீ உயரமுடைய இந்த சிகரத்துக்கு ஒரு மழையேற்ற குழுவினர் சென்றனர்.
[ Friday, 24-05-2013 10:45:18 GMT ]
முறைகேடுகளை தடுக்க ராணுவ தளவாடங்கள் கொள்முதலை வெளிப்படையாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
[ Friday, 24-05-2013 08:34:19 GMT ]
ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள விண்டூ சிங் மொடல் அழகிகளை தரகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
[ Friday, 24-05-2013 08:46:56 GMT ]
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி தெரியாது.
[ Friday, 24-05-2013 13:33:12 GMT ]
கொலிவுட்டில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் தற்போது, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக காணப்படுகிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.