செய்தி
(2ம் இணைப்பு)
 
புதிய பிரதம நீதியரசராக இன்று மதியம் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளேன்: மொஹான் பீரிஸ் அறிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி 2013, 02:01.30 AM GMT ]
இலங்கையின் 44வது பிரதம நீதியரசராக இன்று மதியம் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளதாக முன்னாள் சட்டமா அதிபரும் அமைச்சரவையின் ஆலோசகருமான மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே, மொஹான் பீரிஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, வழமை போன்றே நீதிமன்றத்திற்கு பிரதம நீதியரசர் சிராணி பண்டாராநாயக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக பொலிஸார் பெரும் குழப்பம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ம் இணைப்பு

மதியம் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப் போவதாக மொஹான் பீரிஸ் அறிவிப்பு

இன்று மதியம் பிரதம நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப் போவதாக முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் இன்று பிற்பகல் 12.30 அளவில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற பேரவை இன்று முற்பகல் 10.00 மணி அளவில் கூடி ஜனாதிபதியின் பரிந்துரைகள் குறித்து ஆராய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றப் பேரவையின் பரிந்துரைக்கு அமைய முன்னாள் சட்ட மா அதிபர் இலங்கையின் 44ம் பிரதம நீதியரசராக இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 05:38.36 PM ]
மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் யுத்தகளத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவேந்தும் நாளாகவே உணரப்படுவதாகவும், விடுதலைப்புலிகளை நினைவு கூர்ந்ததாக கூறப்படுவதில் எந்தவொரு உண்மையும் இல்லையெனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
[ Tuesday, 21-05-2013, 04:21.00 PM ]
புனர்வாழ்வு பெற்றுவருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எஞ்சியுள்ள 340 முன்னாள் போராளிகளையும் இந்த வருட இறுதிக்குள் விடுவிக்க எதிர்பார்க்கப்படுவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு குறிப்பிடுகின்றது.
[ Tuesday, 21-05-2013, 04:09.15 PM ]

இலங்கையில் இவ்வருடத்தின் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான காலத்தில் 34 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

[ Tuesday, 21-05-2013, 02:57.53 PM ]

அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டம் கிடையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 02:46.37 PM ]

வவுனியா கனகராயன்குளத்தில் மாற்றுத் திறனாளியான 18 வயது யுவதியொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Tuesday, 21-05-2013 18:09:36 GMT ]
மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் எனும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 12:20:54 GMT ]
தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 18:25:02 GMT ]
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொண்டு 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Tuesday, 21-05-2013 18:36:02 GMT ]
புதுடெல்லியின் ஸ்பிரிங் டேல்ஸ் என்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பினருக்கான சுற்றுச்சூழல் பாடத்திட்டத்தில், நடிகையும், பாடகியும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கையையொத்த பாடம் இடம்பெற்றுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.