உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து உடமைகளுடன் சிராணி வெளியேற்றம்! ஆவணங்கள் பதிவாளரிடம் கையளிப்பு
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தனது உடமைகளுடன் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது சொந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு கொழும்பு றோயல் பார்க்கிலுள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
2ம் இணைப்பு
சிராணியிடமிருந்து ஆவணங்களை பெற்றுச்சென்றார் உயர்நீதிமன்ற பதிவாளர்
கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் சென்ற உயர்நீதிமன்ற பதிவாளர், அங்கிருந்த முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவிடமிருந்து ஆவணங்கள் சிலவற்றைப் பெற்றுச் சென்றுள்ளார்.
மேற்படி ஆவணங்கள், முன்னாள் பிரதம நீதியரசரினால் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டிய உத்தியோகபூர்வ ஆவணங்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

