செய்தி
 Photo
யாழில் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்ட சமவுரிமை இயக்கத்தினர் மீது கழிவு எண்ணெய் தாக்குதல்
[ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி 2013, 07:14.28 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அநீதிகளுக்கு எதிராக சமவுரிமை இயக்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் கையெழுத்துப் போராட்டத்தில் இனந்தெரியாத நபர்களினால் கழிவு எண்ணெய் வீச்சப்பட்டுள்ளது.

இன்றுகாலை யாழ்.பேருந்து நிலையத்தில் அரசிற்கு எதிராக பல்வேறு கோசங்களை பதாதைகளில் எழுதி அதற்கு வலுச்சேர்க்கும் விதத்தில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

இவ்வாறு கையெழுத்துக்கள் பெற்றுகொண்டிருந்த இடத்திற்கு அருகில் இனந்தெரியாத நபர்களினால் கழிவு எண்ணெய் வீச்சப்பட்டுள்ளது.

யாழ். பல்கலை மாணவர்களை விடுதலை செய்யுமாறும், கடத்தல், காணாமல் போவதை நிறுத்துமாறும், நில ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனைக் குழப்பும் வகையில் புலனாய்வாளர்களினால் கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது. அத்துடன் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் பயணித்த வாகனத்தின் மீதும் கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு-

சமவுரிமை இயக்கதின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்.நகரில் இடம்பெற்ற கையெழுத்து போராட்டத்திற்கு படையினரும், படைத்துறைப் புலனாய்வாளர்களும் கடுமையான அச்சுறுத்தல்களை கொடுத்துள்ளதுடன், ஊடகவியலாளர்கள் மீது கழிவு ஒயிலை ஊற்றியும் அட்டகாசம் புரிந்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும், கடத்தல், கைதுகள், உடனடியாக நிறுத்தப்படவேண்டும். வடகிழக்கிலுள்ள இராணுவ ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும், என்பன போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்தப்போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்காக தெற்கிலிருந்து வந்திருந்த சமவுரிமை இயக்கத்தின் உறுப்பினர்கள் மூம்மொழிகளிலும் எழுதிய பதாகைகளில் மக்களிடம் கையெழுத்துப் பெற்றனர். இந்நிலையில் போராட்டத்தை குழுப்பும் வகையில் படையினரும், படைப் புலனாய்வாளர்களும் போராட்டக்காரர்களை தொடர்ந்து அச்சுறுத்தியுள்ளனர்.

இதனோடு அங்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்த தினக்குரல், உதயன், வலம்புரி பத்திரிகைகளின் செய்தியாளர்களை இலக்கு வைத்து கழிவு ஒயில்களையும் ஊற்றியிருக்கின்றனர். இதில் அவர்கள் எந்த ஆபத்துமின்றி தப்பியுள்ளனர்.

இந்நிலையில் கடுமையான அழுத்தங்கள், அச்சுறுத்தல்களையும் தாண்டி சமவுரிமை இயக்கத்தின் போராட்டம் வெற்றிகரமான நடைபெற்று முடிந்துள்ளது. இதேபோல் ஊடகவியலாளர்கள் மீது கழிவு ஒயிலை ஊற்றிய படைப்புலனாய்வாளர்கள் கடற்படையின் வாகனமொன்றில் ஏறி தப்பிச் சென்றிருக்கின்றனர்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 22-05-2013, 06:35.44 AM ]
யாழ்ப்பாண குடாக்கடல் கடற்றொழிலாளர்கள் பலர், தங்கள் தொழிலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
[ Wednesday, 22-05-2013, 06:25.54 AM ]
தரம் குறைந்த ஒளடதங்கள் மற்றும் அழகுசாதன உபகரணங்களை சட்டவிரோதமாக உற்பத்தி செய்து விநியோகிக்கும் பாரிய வர்த்தக நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
[ Wednesday, 22-05-2013, 06:16.20 AM ]

வடமாகாண சபைக்கான தேர்தல் களம் யாழில் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

[ Wednesday, 22-05-2013, 06:01.54 AM ]
இலங்கை தமிழர்கள் விடயத்தில் காங்கிரஸ் கட்சியே அக்கறையுடன் செயற்படுவதாக மத்திய அரசாங்கத்தின் தொழிற்சங்க அமைச்சர் வீ.நாரயணசாமி தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 22-05-2013, 05:53.40 AM ]
 நாட்டை விடுதலை பெறச் செய்தது, தீவிரவாதிகளிடமிருந்து மாத்திரமேயன்றி, வேறு இன  மக்களிடமிருந்து அல்லவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
[ Wednesday, 22-05-2013 06:37:59 GMT ]
சமீபகாலமாக இஸ்ரேலுக்கும், சிரியாவுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகின்ற நிலையில் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு, சிரியா ஆயுதங்கள் கொடுத்து உதவுவதாக இஸ்ரேல் தற்பொழுது குற்றம் சாட்டியுள்ளது.
[ Wednesday, 22-05-2013 04:13:28 GMT ]
வரும் ஜூன் மாதத்தில் இந்தியாவுக்கு புதிய இன்டர்நெட் முகவரி கிடைக்க உள்ளது.
[ Wednesday, 22-05-2013 06:14:04 GMT ]
கேரளாவில் மத்திய அரசு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் இரும்பணம் என்ற ஊரில் மார்க்கெட்டிங் டிவிசன் உதவி மேலாளராக இருந்து வந்தவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.
[ Wednesday, 22-05-2013 02:52:32 GMT ]
இணையப்பாவனையில் உலாவிகளின் பங்கு அளப்பரியதாகும். இவ்வாறான உலாவிகளில் முன்னணியில் திகழும் உலாவிகளுள் ஒன்றான Opera தற்போது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் சாதனங்களுக்காக Opera Webkit எனும் பெயரில் அறிமுகமாகவிருக்கின்றது.
[ Wednesday, 22-05-2013 05:40:18 GMT ]
நடுக்கடலில கப்பலை இறங்கி தள்ள முடியுமா.. என்ற பாடலின் மூலம் பிரபலமானவர் கானா பாலா.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.