இலங்கையின் 44வது பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் சத்தியப்பிரமாணம்! கடமைகளை பொறுப்பேற்றார்
அலரி மாளிகையில், ஜனாதிபதியின் முன்னிலையில் அவர் சத்தியப் பிரமாணத்தை மேற்கொண்டார்.
ஏற்கனவே இன்று பகல் அவரை பிரதம நீதியரசர் நிலைக்கு நியமிக்க நாடாளுமன்ற சபை அங்கீகாரம் வழங்கியது.
2ம் இணைப்பு
புதிய பிரதம நீதியரசர் கடமைகளை பொறுப்பேற்பு
புதிய பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட மொஹான் பீரிஸ், தனது கடமைகளை உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.






