செய்தி
பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் சமால் ராஜபக்சவே!- போக்குவரத்து அமைச்சர்
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 05:58.23 AM GMT ]
இலங்கையின் அடுத்த பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் சமால் ராஜபக்சவே என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய சபாநாயகர் சமால் ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களின் விருப்பமாக அமைந்துள்ளது எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

பிரதமர் டி.எம். ஜயரட்ன அரசியலிலிருந்து ஒய்வு பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளதனால், அந்த வெற்றிடத்திற்கு சபாநாயகர் சமால் ராஜபக்ச நியமிக்கப்பட வேண்டும்.

தாம் யாருக்கும் சார்பாக பேசவில்லை. அடுத்த பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் சமால் ராஜபக்சவே என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதிப் பதவிக்கு மஹிந்த ராஜபக்ச மிகவும் பொருத்தமானவர் என தாம் குறிப்பிட்டதாகவும், தமது கருத்து நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானது என அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

மத்துகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-05-2013, 02:21.28 PM ]

பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக ஆட்களைக் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

[ Friday, 24-05-2013, 12:48.40 PM ]

இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமல், திருகோணமலையில் அமெரிக்கன் நிலையத்தை அமைப்பதற்கு திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கத் தூதரகம் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொண்ட விவகாரம், அரசாங்கத்திற்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

[ Friday, 24-05-2013, 12:30.12 PM ]
'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.
[ Friday, 24-05-2013, 12:14.11 PM ]
கிழக்கு மாகாணத்தில் இன்று ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கையில் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது என அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
[ Friday, 24-05-2013, 12:08.25 PM ]
தங்காலை வீடொன்றில் இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவத்தில் ஒரு வயதும் நான்கு மாதமுமான குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
[ Friday, 24-05-2013 11:13:27 GMT ]
உலகின் மூன்றாவது உயரமான சிகரம் கஞ்சன்ஜங்கா. கடந்த திங்கட்கிழமை 8,586 மீ உயரமுடைய இந்த சிகரத்துக்கு ஒரு மழையேற்ற குழுவினர் சென்றனர்.
[ Friday, 24-05-2013 06:31:17 GMT ]
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
[ Friday, 24-05-2013 05:20:54 GMT ]
சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விண்டூ தாரா சிங் அருகில் டோனியின் மனைவி இருக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் வெளியாகி உள்ளன.
[ Friday, 24-05-2013 08:46:56 GMT ]
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி தெரியாது.
[ Friday, 24-05-2013 13:33:12 GMT ]
கொலிவுட்டில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் தற்போது, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக காணப்படுகிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.