செய்தி
(2ம் இணைப்பு)
 
இலங்கைக்கு விஜயம் செய்யும் திட்டம் உள்ளது!- நவநீதம்பிள்ளை
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 06:23.50 AM GMT ]
இலங்கைக்கு விஜயம்  மேற்கொள்ளும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலையை மதிப்பீடு செய்வதற்கு, ஜனவரி மாதம் அங்கு செல்லவுள்ளதாக முன்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.

ஜனவரி மாதம் முடிவடைவதற்கு இன்னமும் 12 நாட்களே உள்ள நிலையில், முன்னர் அறிவிக்கப்பட்டது போன்று, இலங்கைக்குச் செல்லும் திட்டம் உள்ளதா என்று இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர் நேற்று நவநீதம்பிள்ளையிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு அவர், ஆம், இலங்கைக்கு செல்லும் திட்டம் உள்ளது என்று பதிலளித்துள்ளார். எனினும், அவர் தனது பயணம் எப்போது இடம்பெறவுள்ளது என்ற தகவலை வெளியிடவில்லை.

சட்ட முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை, பதவியில் இருந்து விலக்கிய குற்றவியல் செயற்பாடு நாட்டின் சட்ட முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சார்பான பேச்சாளர் ரூபட் கொல்வின் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயற்பாடானது, நாட்டின் நீதிமன்ற சுயாதீனத்தில் தலையிடும் செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, குற்றவியல் செயற்பாட்டின் போது, பிரதம நீதியரசருக்கு ஆதரவு வழங்கிய சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை காணக்கூடியதாக உள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சார்பான பேச்சாளர் ரூபட் கொல்வின் தெரிவித்துள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 22-05-2013, 06:46.55 AM ]

யாழிலுள்ள ஆலயங்கள் தமது வருமானத்தின் ஒரு பகுதியை ஏழை மக்களின் நல்வாழ்விற்காக பயன்படுத்த வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக இரசாயனவியல் துறை விரிவுரையாளர் கலாநிதி எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

[ Wednesday, 22-05-2013, 06:35.44 AM ]
யாழ்ப்பாண குடாக்கடல் கடற்றொழிலாளர்கள் பலர், தங்கள் தொழிலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
[ Wednesday, 22-05-2013, 06:25.54 AM ]
தரம் குறைந்த ஒளடதங்கள் மற்றும் அழகுசாதன உபகரணங்களை சட்டவிரோதமாக உற்பத்தி செய்து விநியோகிக்கும் பாரிய வர்த்தக நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
[ Wednesday, 22-05-2013, 06:16.20 AM ]

வடமாகாண சபைக்கான தேர்தல் களம் யாழில் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

[ Wednesday, 22-05-2013, 06:01.54 AM ]
இலங்கை தமிழர்கள் விடயத்தில் காங்கிரஸ் கட்சியே அக்கறையுடன் செயற்படுவதாக மத்திய அரசாங்கத்தின் தொழிற்சங்க அமைச்சர் வீ.நாரயணசாமி தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 22-05-2013 07:08:21 GMT ]
கொலம்பியா நாட்டிற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டுத் தம்பதியர் கடந்த வெள்ளிக்கிழமையன்று புரட்சியாளர்களால் கடத்தப்பட்டுள்ளனர்.
[ Wednesday, 22-05-2013 06:16:51 GMT ]
மத்திய பிரதேசத்தில் 7வது சிறுமியை அவரது உடன்பிறவா அண்ணன் கடத்திச் சென்று, கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 22-05-2013 06:14:04 GMT ]
கேரளாவில் மத்திய அரசு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் இரும்பணம் என்ற ஊரில் மார்க்கெட்டிங் டிவிசன் உதவி மேலாளராக இருந்து வந்தவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.
[ Wednesday, 22-05-2013 06:32:41 GMT ]
உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் குணமடைவீர்கள்.
[ Wednesday, 22-05-2013 05:40:18 GMT ]
நடுக்கடலில கப்பலை இறங்கி தள்ள முடியுமா.. என்ற பாடலின் மூலம் பிரபலமானவர் கானா பாலா.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.