சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த 600 கிராம் எடையுடைய 5 தங்க பிஸ்கட்டுகளும் 45 லட்ச ரூபாவிற்கு அதிக பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்கப் பணிப்பாளர் வெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரும் தங்க பிஸ்கட்களை பாதணியில் வைத்து மிக சூட்சுமமான முறையில் கொண்டுச் செல்ல முயற்சித்தபோதே கைது செய்யப்பபட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இந்தியாவின் மும்பை நகருக்கு செல்ல தயார் நிலையில் இருந்ததாகவும், இவர்கள் இருவரும் கொழும்பைச் சோ்ந்தவர்கள் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் ஒருவரிடமிருந்து 50 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறிவிடப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடமிருந்து தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.