தற்சமயம் சட்டமூலமாக்கப்பட்டுள்ள ஒழுக்கக் கோவைக் கட்டமைப்பு சகல ஊடகங்களுக்கும் வழங்கப்பட்டு, கிடைக்கும் பதிலுக்கு அமைய சகலரதும் அங்கீகாரத்தின் பின்னர் ஒழுக்கக் கோவைக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
தேசிய அபிவிருத்தி, தேசிய ஒற்றுமை என்பனவற்றை உறுதிப்படுத்துவதற்கு சகல ஊடகங்களினதும் பங்கேற்பு அவசியம் என அவர் கூறினார்.
மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் அரசாங்கம் அபிவிருத்தி பயணத்தை முன்னோக்கியுள்ளது. வளர்ச்சியடைந்த ஊடக முறைமையை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு, ஊடக நிறுவனங்களுக்குக் காணப்படுகிறது.
செய்தி அறிக்கையின் போது, செய்திப் பிரிவுகளுக்குக் காணப்படும் பொறுப்பு, செய்தியின் மூலம் ஏற்படும் சமூகத் தாக்கம் என்பன தொடர்பில் ஊடகங்கள் விளக்கத்துடன் செயலாற்ற வேண்டுமென ஊடக அமைச்சின் செயலாளர் கேட்டுக் கொண்டார்.