செய்தி
 Photo
கிளிநொச்சி மாவட்ட அஞ்சல் அலுவலகம் இன்று திறப்பு!
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 01:06.54 PM GMT ]

கிளிநொச்சியில் கடந்த யுத்தகாலத்தில் முற்றாக அழிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட அஞ்சல் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

அமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வடமாகாண ஆளுனர் ஜி.ஏ சந்திரசிறீ ஆகியோர் இணைந்து இக்கட்டத்தினை திறந்து வைத்து செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைத்தனர்.

யுத்தத்தின்போது முற்றாக அழிவடைந்திருந்த இந்தத் தபால் நிலையம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் சுமார் ஐநூறு இலட்சம் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் தலைமை அஞ்சல் அலுவலகம் இதுவாகும்.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள்எழுச்சித்திட்டம் மற்றும் துரித மீட்சித்திட்டம் ஆகியவற்றின் திட்டப்பணிப்பாளர் லியனகே ஆகியோரும் தபால் திணைக்கள உயர் அதிகாரிகளும் தாபால் திணைக்கள ஊழியர்களும் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பெரும்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 22-05-2013, 02:09.02 PM ]

முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் பாடசாலை சென்ற சிறுமியை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கோடு பற்றைக்குள் இழுத்துச் சென்ற படைச் சிப்பாய் மீது எங்கும் முறைப்பாடு செய்யக்கூடாதென புலனாய்வுப் பிரிவினர் என்று அடையாளப்படுத்திய நபர்கள் அச்சுறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

[ Wednesday, 22-05-2013, 01:53.02 PM ]

மட்டக்களப்பு- செங்கலடி நகரில் நள்ளிரவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 29ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

[ Wednesday, 22-05-2013, 12:42.54 PM ]
இரவு ரயில் பிரயாணம் செய்து கொண்டிருந்த இ.போ.ச. உத்தியோகத்தருக்கு குளிர்பானத்துடன் மயக்க மருந்தினைக் கலந்து அருந்தக் கொடுத்து பணம, நகை மற்றும் கைத் தொலைபேசி ஆகியனவற்றை திருடிச் சென்ற சம்பவமொன்று கொழும்பு-பதுளை இரவு தபால் ரயிலில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
[ Wednesday, 22-05-2013, 12:35.09 PM ]

கொழும்பு, கொம்பனி வீதி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் நான்கு பொலிஸாரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

[ Wednesday, 22-05-2013, 11:18.19 AM ]
கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடனான வீடமைப்பு திட்ட வேலைகள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் வீட்டுத் திட்டங்களுக்கான வேலைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
[ Wednesday, 22-05-2013 07:15:23 GMT ]
எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் கடந்த 16-ம் தேதி 6 காவல் துறையினரும், ஒரு எல்லைக்காவல் படை வீரரும், பேருந்துகளில்  பயணம் செய்துகொண்டிருந்தபோது கடத்தப்பட்டனர்.
[ Wednesday, 22-05-2013 11:38:24 GMT ]
சினிமா, கிரிக்கெட்டிற்கு அடுத்தபடியாக அரசியல்வாதியாகவும் வலம் வரவிருக்கிறார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.
[ Wednesday, 22-05-2013 12:24:42 GMT ]
மொகாலியில் கடந்த 9ம் திகதி நடைபெற்ற ஐ.பி.எல் பந்தயத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்ட தரகர்களுக்காக ஒரு ஓவர் பந்து வீசினார்.
[ Wednesday, 22-05-2013 07:38:03 GMT ]
கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
[ Wednesday, 22-05-2013 11:53:12 GMT ]
கமல்ஹசான் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.