செய்தி
விடுதலைப் புலிகள் உருவாகவோ, அவர்களின் நிகழ்வுகளை நடத்தவோ அனுமதிக்க முடியாது: இராணுவம்
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 02:29.18 PM GMT ]

விடுதலைப் புலிகள் உருவாகுவதற்கோ அல்லது அவர்களின் நிகழ்வுகளை நடத்துவதற்கோ இராணுவத்தினர் ஒரு போதும் இடமாளிக்கமாட்டார்கள். பொதுமக்களிடம் பிரச்சனைகளைத் தோற்றுவித்து கிளர்ச்சிகளை உருவாக்க சில அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர் என்று யாழ்.மாவட்ட 51வது படைப்பிரிவின் தளபதி சந்தன குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று 512 வது படைப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சமூக நலத்திட்டங்கள் தொடர்பில் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

போருக்குப் பிந்திய காலத்தில் யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினர் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனை சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் விமர்சித்து வருகின்றன. இதனால் இராணுவத்தினர் என்ன செய்கின்றார்கள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இராணுவத்தினர் பொதுமக்களுக்கு என்ன சேவையாற்றுகின்றார்கள் என்பதை அரச ஊழியர்களாகிய நீங்கள் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வடக்கில் இராணுவம் தேவையில்லை என்று பல்வேறு பல்வேறு தரப்பினர் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்கள் ஐரோப்பா நாடுகளில் இருந்து வருகின்ற பணத்தினைப் பெற்றுக்கொண்டு தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர் என்றார்.

அத்துடன் தற்போது இங்குள்ள மதகுருமார்களும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் இராணுவத்தினர் வடக்கில் அதிகமாக உள்ளனர்.

இராணுவம் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றே தெரிவிக்கின்றர். தற்போது இங்கு கடமையாற்றும் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தியில் பெரும் பங்காற்றி வருகின்றனர்.

இங்குள்ள காலசாரத்திற்கு மாற்றப்பட்டவர்களாக கடமையாற்றி வருகின்றனர் என்று அவர் குறிப்பட்டார்.

இந்த விளக்க கலந்துரையாடலில் யாழ்ப்பாணம், நல்லூர், வேலணை, ஊர்காவற்துறை ஆகிய பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 11:31.57 AM ]
ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
[ Saturday, 25-05-2013, 11:20.17 AM ]
பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் காலமானார்.
[ Saturday, 25-05-2013, 11:11.42 AM ]
இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் குவைத் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Saturday, 25-05-2013, 10:13.25 AM ]
போர்க்குற்றவாளிகள் இலங்கையில் சுதந்திரப் பறவைகளாக உலாவுகின்றனர் என்று சர்வதேச மன்னிப்புச்சபை சுமத்தியுள்ள குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் அடியோடு நிராகரித்துள்ளது. அத்துடன் போர்க்குற்றம் இடம்பெற்றதற்குத் தகுந்த ஆதாரங்கள் இருப்பின் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
[ Saturday, 25-05-2013, 10:11.50 AM ]
எந்தவொரு நாடோ இனவாதிகளோ இனியும் இலங்கை நாட்டை அபகரிக்க இடமளிக்க முடியாது என பிரதமர் டி.எம். ஜயரட்ண தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013 08:17:59 GMT ]
துருக்கியில் மதுபானங்கள் விற்பனைக்கு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதோடு, தொலைக்காட்சிகளிலும் மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 10:19:13 GMT ]
பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டார்.
[ Saturday, 25-05-2013 08:06:26 GMT ]
ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள விண்டூ சிங், விசாரணையின் போது தனக்கு வீராட் கோஹ்லி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் நெருக்கமானவர்கள் என்று தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Saturday, 25-05-2013 07:23:06 GMT ]
தொலைத் தொடர்பாடல் வலையமைப்பின் மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் (3G) பயனாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ அழைப்புகள் தற்போது உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
[ Saturday, 25-05-2013 11:41:54 GMT ]
கொலிவுட்டின் நகைச்சுவை நடிகரான மயில்சாமி இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 24-05-2013 12:30:12 ]
'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.