செய்தி
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியம்! அதிகாரம் எம் கைகளுக்கு வரவேண்டும்!- இரா.சம்பந்தன்
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 03:37.30 PM GMT ]

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்பது அரசாங்கத்திற்கு அவசரமாக தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது. என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை காலை அவரது இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் சமகால நிலவரவம் பற்றி சம்பந்தன் உரையாற்றினார்.

 அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தாவது:-

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுவது தொடர்பான தற்போதைய இழுபறி நிலை தொடரமுடியாது. விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என்பது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.

தமிழரைப் பலவீனப்படுத்தி தமிழ் இனத்தின் இருப்பை அடையாளத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் தான இலங்கை அரசாங்கம் காலத்தை கழித்து வருகின்றது.

மனித உரிமை மீறல் தொடருகின்றது. அனைத்துலக சமூகம் எமது நிலை தொடர்பாக தமது முயற்சிகளை கைவிட முடியாது. தொடர்ந்து செயற்பட்டு மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்துலக சமூகம் தீவிரமாக செயற்பட வேண்டும்.

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்பது அரசாங்கத்திற்கு அவசரமாக தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது.

நாட்டின் இறைமையில் தமிழ் மக்களும் பங்காளிகளாக வேண்டும். தற்போதைய அரசமைப்பு முறைமையின் கீழ் அது சாத்தியமற்றதாகும்.

சாதகமான நிலை விரைவில் ஏற்பட்டு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

அடுத்த வாரம் அமெரிக்க அரச உயர்மட்டக்குழு ஒன்று கொழும்பு வரவிருக்கின்றது.

தற்போதைய இலங்கை நிலைவரத்தை அறிந்து 2013 மார்ச்சில் நடைபெறவிருக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இக்குழு சமர்ப்பிக்கும் என்று நம்புகின்றோம்.

அமெரிக்காவும் வேறு நாடுகளும் அறிக்கைகளை சமர்ப்பிக்கவிருப்பதாக அறிகின்றோம்.

அமெரிக்கா, இந்தியா மற்றும் அனைத்துலக சமூகமும் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியே அரசியல் தீர்வு காணும்படி இலங்கை அரசாங்கத்தை இன்றும் வலியுறுத்தி வருகின்றது.

இது விடயத்தில் அனைத்துலக அரசுகள் தெளிவாக இருக்கினறன. இதனை உள்வாங்கும் நிலையில் கொழும்பு அரசாங்கம் இல்லை.

சிங்கள மக்களுக்கு எதிராக நாம் செயற்பட முடியாவிட்டாலும் தமிழ் மக்களின் பிறப்புரிமையை எவரும் பறிக்க விடமுடியாது.

அதிகாரம் எம் கைகளுக்கு வரவேண்டும். அதிகாரம் நம் கைகளில் இல்லாதபடியால் நாம் இப்போதும் சமமான மக்களாக வாழமுடியாத நிலையில் உள்ளோம்.

நாம் தெளிவாக இருக்க வேண்டும். எதிர்வரும் மாதங்களில் தற்போதைய நிலவரங்களில் மாற்றம் ஏற்படலாம் என்றார் இரா. சம்பந்தன். 


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-05-2013, 08:47.27 AM ]

'சிவசக்தி ஆனந்தனை நேற்று விசாரணை செய்தீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா? ஏன் நீங்கள் இப்படி தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றீர்கள்? இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இன்று வியாழக்கிழமை அமைச்சர்கள் முன்னிலையில் கேள்வி எழுப்பினார்.

[ Thursday, 23-05-2013, 08:29.39 AM ]

களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கிரிபத்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.

[ Thursday, 23-05-2013, 08:20.47 AM ]
யாழ்ப்பாணத்தில் வெசாக் தினக் கொண்டாத்திற்காக இராணுவத்தினரால் தற்போது வீதிகள் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.
[ Thursday, 23-05-2013, 08:11.48 AM ]

உலக மலேரியா தினமான இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் மலேரியா விழிப்புணர்வு நடைபவனி ஒன்று இடம்பெற்றுள்ளது.

[ Thursday, 23-05-2013, 07:46.45 AM ]

யாழ். குடாநாட்டின் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் அந்தோனியார் ஆயர் இல்லம் உட்பட ஐந்து இடங்கள் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக மாற்றுவதற்கு தேசிய மரபுரிமைகள் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

[ Thursday, 23-05-2013 07:38:31 GMT ]
ஜப்பானைச் சேர்ந்த யுசிரோ மியுரா என்ற 80 வயது முதியவர் உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
[ Thursday, 23-05-2013 01:44:57 GMT ]
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 06:57:07 GMT ]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரியான குருநாத் மெய்யப்பன் சூதாட்ட புகாரில் சிக்கியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில போட்டிகள் மீதும் சந்தேகப் பார்வை வலுவாக படிந்துள்ளது.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 08:03:07 GMT ]
கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி சிறைக்கு சென்றுள்ள ஸ்ரீசாந்த், மலையாளப் திரைப்படம் ஒன்றில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.