செய்தி
ஜனாதிபதி தங்க விருது வென்ற வர்த்தகர் ஒருவர் காணாமல்போயுள்ளார்
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 03:48.20 PM GMT ]
தேசிய உணவு உற்பத்திக்காக ஜனாதிபதி தங்க விருதை வென்ற வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்றிரவிலிருந்து காணாமல் போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹவ -பலல்ல பிரதேசத்தைச் சேர்ந்த அஜித் திசாநாயக்க என்ற பெயருடை வர்த்தகரே இவ்வாறு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரக்கன், விதை வகைகள், பலாப்பழ உற்பத்திகள் என்பவற்றை உபயோகித்து அவர், பிஸ்கட், கேக் உள்ளிட்ட பல உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்யும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த 8 ம் திகதி இடம்பெற்ற வடமேல் மாகாண வர்த்தகர்களுக்கு இடையிலான விருது வழங்கல் நிகழ்வின் போது, சில மூலிகை பொருட்களை பயன்படுத்தி நீரிழிவு நோயாளர்களுக்காக தயாரிக்கப்பட்ட மருத்துவ குணமுள்ள பிஸ்கட்டை உற்பத்தி செய்தமைக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமது உற்பத்திகள் மிக துரிதமாக மக்களிடத்தில் பிரபல்யம் அடைந்தமையையிட்டு சில தரப்பினர் இவ்வாறான உற்பத்திகளை நிறுத்துமாறு தமது கணவருக்கு அச்சுறுத்தல்களை விடுத்து வந்ததாக காணாமல் போன வர்த்தகரின் மனைவி தெரிவித்துள்ளார்.

அவர் குருநாகலை வர்த்தக தொழில்துறையினரின் சங்கத்தின் அழைப்பின் பேரில் நேற்று காலை 9.30 க்கு மஹவ நகரத்திலிருந்து குருணாகலை நோக்கி சென்ற பஸ்ஸில் ஏறிய அவர் இதுவரை வீடுதிரும்பவில்லை.

இதுகுறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடியிடம் வினவியபோது, காணாமல் போயுள்ள வர்த்தகர் தொடர்பில் மஹவ மற்றும் குருணாகலை பொலிஸ் நிலையத்தின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-05-2013, 05:34.28 AM ]
அம்பாறை, திருக்கோவில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை பிரசாதமாக வழங்கப்பட்ட கடலையை சாப்பிட்ட 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[ Friday, 24-05-2013, 05:16.24 AM ]
மன்னார், எமிழ் நகர் பகுதியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள காணிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு மன்னார் பிரதேசச் செயலாளர் டி.தயானந்தா உரிய தரப்பினரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
[ Friday, 24-05-2013, 03:59.52 AM ]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேர் இன்று காலை காரைக்கால் திரும்பினர்.
[ Friday, 24-05-2013, 03:39.39 AM ]

அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

[ Friday, 24-05-2013, 03:34.22 AM ]

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொதுநலவாய நாடுகளின் வர்த்தக பேரவையின் தலைவர் பீற்றர் கலகானை நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.

[ Thursday, 23-05-2013 18:20:27 GMT ]
ஈக்குவடார் நாட்டின் முதல் செயற்கைக் கோளான பெகாசஸ், சென்ற மாதம் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது.
[ Friday, 24-05-2013 05:44:12 GMT ]
சூதாட்டம் விளையாட்டு உலகத்திற்கே கெட்டப் பெயரை தந்துள்ளது என பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.
[ Friday, 24-05-2013 05:08:13 GMT ]
ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக மும்பை மற்றும் டெல்லி பொலிசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
[ Friday, 24-05-2013 05:53:43 GMT ]
இணைய தேடுபொறிகளில் முதன்மை வகிக்கும் கூகுள் நிறுவனமானது கடந்த வருடம் Voice Search வசதியினை அறிமுகப்படுத்தியிருந்தது.
[ Friday, 24-05-2013 05:04:28 GMT ]
சமீபகாலமாக இயக்குனர்கள் புது வித டெக்னிக்கை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.