வேலூர் மாவட்டத்தில் பரமத்தி, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் கடாபி என்று அழைக்கப்படும் ராஜூ, (வயது2) என்பவர் மீது பல்வேறு கொள்ளை, திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம், முகாமில் உள்ள வீட்டுக்கு ராஜூ வந்ததை அறிந்த பரமத்தி பொலிஸார் விரைந்து சென்று, அவரை கைது செய்து, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட ராஜூவை, பொலிஸ் நிலையத்தில் உட்கார வைத்துவிட்டு, ஏனைய வழக்குகள் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.
இதன்போது, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட இலங்கை அகதியான ராஜூ அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பி ஓடிய சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். பொலிஸ் நிலையத்தில் இருந்து கைதி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.