செய்தி
 Photo
நல்லூர் ஆலய முன்றலில் புதிதாக காவலரண் அமைத்து காவலில் இருக்கும் இராணுவத்தினர்
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 05:20.18 AM GMT ]
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய முன்றலில் திடீரென இராணுவ கவலரண் ஒன்று அமைக்கப்பட்டு அங்கு இராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வருடப்பிறப்பாகையால் ஆலயத்துக்குச் சென்ற பக்தர்கள் திடீரென ஆலயச் சூழலில் இராணுவக் காவலரண் அமைக்கப்பட்டுள்ளமை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஆலய சூழலில் இவ்வாறு திடீர் படையினரின் காவலரண்  அமைக்கப்பட்டமைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பாதுகாப்புக்காகவே இராணுவக் காவலரண் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் நல்லூர் ஆலயச் சூழலில் பொலிஸாரே பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் பாதுகாப்பு என்ற பெயரில் திடீரென காவலரண் அமைக்கப்பட்டு இராணுவக் காவலரண் அமைக்கப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஆலயத்துக்குச் சென்ற பக்தர்கள் தெரிவித்தனர்.

நீண்ட காலத்துக்கு தொடர்ந்தும் நிலைகொள்ளும் வகையிலேயே இந்தக் காவலரண் அமைக்கப்பட்டுள்ளதாவெனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 04:17.00 PM ]
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று தீக்குளித்த பிக்கு, இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Saturday, 25-05-2013, 02:55.42 PM ]
செங்கலடி – பதுளை வீதயில் மணியபுரம் பிரதேசத்திலுள்ள அரசாங்க வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி லொறியில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை கரடியனாறு பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
[ Saturday, 25-05-2013, 02:48.45 PM ]
வவுனியா, நெடுங்கேணி, சேனப்பிலவு கிராமத்தில் 7 வயதுடைய பாடசாலை சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாயை காப்பாற்ற முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
[ Saturday, 25-05-2013, 02:43.42 PM ]

திருகோணமலை- கிண்ணியா பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அப்பெண்ணின்   வயிற்றுக்குள் ஊசியினை வைத்து தைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

[ Saturday, 25-05-2013, 02:35.10 PM ]
பௌத்த பிக்குவின் தற்கொலை முயற்சி குறித்து எதுவும் n;தரியாது என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
[ Saturday, 25-05-2013 13:58:45 GMT ]
சீனாவில் புயல் மழை காரணமாக 5 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிப்பதால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 12:10:52 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
[ Saturday, 25-05-2013 13:17:03 GMT ]
சர்ச்சை நாயகன் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டினுள் பொலிசார் போல நடித்து நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
[ Saturday, 25-05-2013 07:23:30 GMT ]
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 11:59:42 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 24-05-2013 12:30:12 ]
'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.