இதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த அரசாங்க உறுப்பினர்களும் ஐ.தே.க. உறுப்பினர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் ரீட் மனு நாளை மேன்முறையீட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இவ்விசாரணைக்கே அரச தரப்பினரும் ஐ.தே.கவும் ஆஜராகமாட்டார்கள் என அக்கட்சிகளின் உறுப்பினர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.