செய்தி
கேட்காத புனர்வாழ்வை தரும் அரசு, தமிழர் கேட்கும் அரசியல் தீர்வை தர மறுக்கிறது!- மனோ கணேசன்
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 09:48.51 AM GMT ]
தமிழ் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து அவர்களை புனர்வாழ்வு முகாம்களில் அடைக்கிறார்கள். இது பற்றி கேட்டால், இந்த மாணவர்கள்தான் தாமாகவே இந்த புனர்வாழ்வை விரும்பி கேட்டார்கள் என்று சொல்கிறார்கள். என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பிரித்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்' என்ற தொனிப்பொருளில் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியதாவது,

இன்று நாட்டில் இருப்பது ஒரு புதுமையான அரசாங்கம் என்பதை சிங்கள மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். தமிழ் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து அவர்களை புனர்வாழ்வு முகாம்களில் அடைக்கிறார்கள்.

இது பற்றி கேட்டால், இந்த மாணவர்கள்தான் தாமாகவே இந்த புனர்வாழ்வை விரும்பி கேட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

இப்படி சொல்லும் அரசு, தமிழ் மக்கள் தொடர்ந்து கோரி வரும் அரசியல் தீர்வை தர மறுக்கிறது.

ஒரே நாட்டுக்குள் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டு வாழ்வோம் என நாம் கேட்பதை தர மறுக்கிறது.

இன்றைய அரசியல் சட்டத்தில் இருக்கின்ற 13 ம் திருத்ததையும், மாகாணசபையையும் கூட வடக்குக்கு தர மறுக்கிறது.

தமிழர்கள் தமிழ் மொழியில் தங்கள் கருமங்களை ஆற்றிக்கொள்ளும் உரிமையை தர மறுக்கிறது.

கேட்பதை கொடுக்காமல், கேட்காததை கொடுக்கும் இந்த அரசு ஒரு புதுமையான அரசாங்கம். தம்மை திருத்திக் கொள்வதற்கு இந்த அரசாங்கத்துக்கு இந்த வருடம்தான் கடைசி சந்தர்ப்பம் ஆகும்.

நமது இந்த மேடை தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாக பேசப்பட நாம் உருவாக்கியுள்ள மேடை ஆகும். நாட்டின் ஏனைய பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு இந்நாட்டில் எத்தனையோ கட்சிகளின் மேடைகள் உள்ளன.

பலதும் இங்கே பேசினாலும், அரசியல் அதிகாரத்தை பிரிப்போம், நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற செய்தியை சிங்கள மக்களுக்கு சொல்வதற்கே பிரதானமாக நாம் இந்த மேடையை பயன்படுத்துகின்றோம்.

தென்னிலங்கையில் இன்று பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்கப்படுகின்றது. இந்த அரசாங்கத்தின் மகிந்த சிந்தனையை அனுசரிக்கவேண்டும். வேறு அரசியல் சிந்தனைகளை கருத்தில் கொள்ள கூடாது.

பல்கலைக்கழக மாணவர்கள் தமது மூளைகளை பூட்டி வைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த தலைமைத்துவ பயிற்சி நடத்தப்படுகிறது.வடக்கில் புனர்வாழ்வு என்பது பெரும்பான்மை இன ஆதிக்கத்தை தமிழ் இளைஞர்கள் எதிர்ப்பில்லாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது.

தமிழர்கள், இந்த நாட்டிலே அதிகாரத்தை கோரக்கூடாது. இந்த நாடு சிங்கள இனத்துக்கு மாத்திரம் சொந்தமான நாடு என்ற சிந்தனையை தமிழ் இளைஞர்கள் தலையில் புகுத்துவதற்காக இந்த புனர்வாழ்வு பயிற்சி நடத்தப்படுகிறது.யாழ் மாணவர்கள் தாமாக விரும்பி புனர்வாழ்வை கேட்டார்கள் என இவர்கள் சொல்கிறார்கள்.

ஆகவே அவர்கள் கேட்டதை இவர்கள் கொடுத்தார்களாம். ஆகா, கேட்டதை எல்லாம் கொடுக்கும் எவ்வளவு நல்ல ஒரு அப்பாவி அரசாங்கத்தை ஆண்டவன் நமக்கு தந்துள்ளான் என்பதை பாருங்கள். ஆனால் கேட்பதை எல்லாம் கொடுக்கும் அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுள்ள ஜனநாயக பிரதிநிதிகளான நாம் கேட்பது காதில் விழவில்லை.

நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாகாணசபையை முதலில் வழங்குங்கள் என்றும், நாட்டின் அரசியல் சட்டத்தில் இன்று உள்ள 13ம் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யுங்கள் என்றும் நாம் கேட்பது இவர்கள் காதில் விழவில்லை.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடிந்தவுடன் இன்று பொருளாதார யுத்தம் நடத்தப்படுவதாக அரசு சொல்கிறது. வடக்கில் இதன்மூலம் பொருளாதார அபிவிருத்தி நடைபெறுவதாக சொல்கிறது.

யுத்தத்தால், உடைந்து நாசமாகியுள்ள பாதைகளையும், கட்டிடங்கள் சிலவற்றையும் நிர்மாணிப்பது எப்படி பொருளாதார அபிவிருத்தியாகும்? உடைந்தவைகளை செய்வது அபிவிருத்தி அல்ல. அது திருத்த வேலையாகும். இதுவும் இன்று ஒழுங்காக நடைபெறவில்லை.

உண்மையில் தமிழ் மக்கள் கோருவது கொழும்பிலிருந்து எடுக்கப்படும் முடிவுகளை அல்ல. இங்கேயிருந்து முடிவெடுத்து சென்று வடக்கில் அமுல் செய்ய நினைக்காதீர்கள். திருத்த வேலைகளைகூட இதன்மூலம் ஒழுங்காக செய்ய முடியாது.

பாலம் கட்டவும், வீதி அமைக்கவும், அவற்றை எங்கே, எப்படி, எவ்வாறு என்ற முடிவுகளை எடுக்கும் அரசியல் அதிகாரத்தை தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படையுங்கள்.

இதுதான் உண்மையான அரசியல் அதிகார பகிர்வு. இதன் மூலம்தான் உண்மையான பொருளாதார அபிவிருத்தி ஏற்படும்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 11:31.57 AM ]
ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
[ Saturday, 25-05-2013, 11:20.17 AM ]
பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் காலமானார்.
[ Saturday, 25-05-2013, 11:11.42 AM ]
இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் குவைத் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Saturday, 25-05-2013, 10:13.25 AM ]
போர்க்குற்றவாளிகள் இலங்கையில் சுதந்திரப் பறவைகளாக உலாவுகின்றனர் என்று சர்வதேச மன்னிப்புச்சபை சுமத்தியுள்ள குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் அடியோடு நிராகரித்துள்ளது. அத்துடன் போர்க்குற்றம் இடம்பெற்றதற்குத் தகுந்த ஆதாரங்கள் இருப்பின் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
[ Saturday, 25-05-2013, 10:11.50 AM ]
எந்தவொரு நாடோ இனவாதிகளோ இனியும் இலங்கை நாட்டை அபகரிக்க இடமளிக்க முடியாது என பிரதமர் டி.எம். ஜயரட்ண தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013 08:17:59 GMT ]
துருக்கியில் மதுபானங்கள் விற்பனைக்கு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதோடு, தொலைக்காட்சிகளிலும் மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 10:19:13 GMT ]
பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டார்.
[ Saturday, 25-05-2013 08:06:26 GMT ]
ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள விண்டூ சிங், விசாரணையின் போது தனக்கு வீராட் கோஹ்லி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் நெருக்கமானவர்கள் என்று தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Saturday, 25-05-2013 07:23:06 GMT ]
தொலைத் தொடர்பாடல் வலையமைப்பின் மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் (3G) பயனாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ அழைப்புகள் தற்போது உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
[ Saturday, 25-05-2013 11:30:42 GMT ]
உன்னாலே உன்னாலே பட நாயகன் வினய் படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் பிந்து மாதவி.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 24-05-2013 12:30:12 ]
'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.