செய்தி
(2ம் இணைப்பு)
 
பாப்பரசர் 16வது பெனடிக்ட் அவர்களை ரணில் விக்ரமசிங்க வத்திக்கானில் சந்தித்து ஆசி பெற்றார்!
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 03:29.59 AM GMT ]
இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் இருவரும், இன்று புதன்கிழமை பாப்பரசர் 16வது பெனடிக்ட் அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.

வத்திக்கான் தேவாலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையில் தற்போது இடம்பெறும் செயற்பாடுகள், அரசியல் முன்னெடுப்புகள் என்பன குறித்தும், அவர் பாப்பரசருக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

தொடர்ந்து பாப்பரசரால் ஓப்பு கொடுக்கப்படவுள்ள விசேட திருப்பலி பூஜையிலும் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொள்ளவுள்ளதாக அவரது காரியாலய பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகளில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும், இத்தாலிக்கான இலங்கை தூதுவர் அசித்த பெரேரா உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

2ம் இணைப்பு

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பரிசுத்த பாப்பரசரை சந்தித்தார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தனது பாரியாரான மைத்ரி விக்கிரமசிங்க அவர்களுடன் இத்தாலியிலுள்ள வத்திக்கான் நகரில் அதி வணக்கத்திற்குரிய பாப்பரசர் 16ஆவது  பெனடிக்ட் அவர்களை இன்று புதன்கிழமைசந்தித்துள்ளனர்.

இந்த வருடத்தில் பரிசுத்த பாப்பரசரை சந்தித்த முதலாவது நபர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்பது குறிப்பிடத்தக்கது.

ரணில் விக்கிரமசிங்க அவர்களை பாப்பரசரை சந்திப்பதற்கான வழிகாட்டல் மற்றும் ஆயத்தத்தை இலங்கைக்கான வத்திக்கான் தூதர் அதி வணக்கத்திற்குரிய ஜோசப் ஸ்பெட்டரி தந்தை மற்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பினை இத்தாலியிலுள்ள இலங்கையர்களின் ஒன்றிணைப்பாளர் கலாநிதி நெவில் ஜோ தந்தை மற்றும் ஐ.தே.கவின் பிரதிப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன ஆகியோர் ஆயத்தத்தை செய்திருந்தனர்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 20-06-2013, 03:02.46 AM ]
நாவல திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பாரிய வெட்டுக்காயங்களுக்கு உள்ளான விரிவுரையாளர் யசோதரா கதிர்காமதம்பி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
[ Thursday, 20-06-2013, 02:53.42 AM ]

திருகோணமலை சீனக்குடா மீன்பிடி துறைமுகத்திற்கு முன்னால் வீதியில் நடந்து சென்ற நபர் மீது பேருந்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

[ Thursday, 20-06-2013, 02:43.36 AM ]

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை தம்மால் எந்த அளவு மீற முடியும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஏற்கனவே இந்தியாவிடம் காட்டிவிட்டதாக உள்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

[ Thursday, 20-06-2013, 02:38.27 AM ]
13ம் திருத்தச் சட்டம் பலவந்தமான முறையில் இலங்கை மீது திணிக்கப்பட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
[ Thursday, 20-06-2013, 02:36.07 AM ]

13ம் திருத்தச்சட்டம் என்பது வெள்ளை யானையை போன்றது என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

[ Wednesday, 19-06-2013 18:43:29 GMT ]
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 20:09:19 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளோம் என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 20:27:33 GMT ]
தனுஷ் நடித்துள்ள ராஞ்சனா என்ற இந்திப் படமும், மரியான் படமும் இம்மாதம் 21ம் திகதி வெளியிடலாமென அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:35:13 ]
மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது.