யாழ். பல்கலை. மாணவர்களின் விடுதலையை வேண்டி கொழும்பில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்
கடந்த ஆண்டு நவம்பர் 27, 28 ம் திகதிகளில் பல்கலைச் சுழலில் ஏற்பட்ட பதட்டம் காரணமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் விடுதலையினை வலியுறுத்தி இலங்கை தேசிய மாணவர் சங்கம் இந்த துண்டுப்பிரசுர பிரச்சாரத்தை ஏற்பாடு செய்திருந்தது.
அதன்படி இன்று புதன்கிழமை காலை கொழும்பு, பறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இந்த துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெற்றள்ளது.