மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சித்தாண்டி மக்களுக்கு NOW-WOW அமைப்பு உதவி!
இந்நிலையில், மட்டு. மாவட்ட இந்து இளைஞர் பேரவை அமெரிக்காவிலுள்ள போரினால் காயப்பட்டவர்களுக்கும், விதவைகளுக்கும், வறியவர்களுக்குமான அமைப்பின் (NOW-WOW) நிதி உதவி மூலம் சித்தாண்டி -01 கிராமத்தின் 500 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை இன்று வழங்கப்பட்டுள்ளது.
இதில் அரிசி, சீனி, பருப்பு, சோயாமீற், தேங்காய் உட்பட்ட பொருட்கள் அடங்கிய உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இவ் உதவிகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில், பேரவையின் அனர்த்த முகாமைத்துவ குழு நேரடியாக அக்கிரமாத்துக்கு சென்று உதவிப் பொருட்களை வழங்கி வைத்தனர். கிராம அதிகாரி இதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டார்.
இவ்உதவியை புரிந்த அமெரிக்காவிலுள்ள போரினால் காயப்பட்டவர்களுக்கும், விதவைகளுக்கும்,வறியவர்களுக்குமான அமைப்பினருக்கு (NOW-WOW) மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும், மக்களும் நன்றியை தெரிவிக்கின்றனர்.









