பிரதம நீதியரசர் கௌரவமாக பதவி விலகாவிட்டால் மகிந்த அரசாங்கம் பலவந்தமாக அனுப்பும்: வர்த்தக அமைச்சர்
பிரதம நீதியரசர் ஷிராணியின் பிரச்சினையும் கடந்த காலங்களில் அமுலுக்கு கொண்டுவர, சர்ச்சைகளை எதிர்நோக்கிய பிளாஸ்டிக் கூடை பிரச்சினையும் ஒன்றுதான் என நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் பலே கில்லாடியாக நடித்துக் கொண்டிருப்பதாகவும் கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்து அமைச்சர் கூறியிருந்தார்.
பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விலக ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கௌரவமான முறையில் பிரதம நீதியரசர் பதவி விலகாவிட்டால் அவரை பலவந்தமாக வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கான அதிகாரம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் கூடை சட்டம் தற்போது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்த சட்டத்தை மீறுவோர் தண்டிக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.