செய்தி
கிளிநொச்சி, முல்லைத்தீவு தமிழ் பாடசாலைகளில் சிங்கள மொழியை கற்பிக்க தயாராகும் படையினர்!
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 06:44.34 PM GMT ]
யுத்தத்தின் பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்றுவரும் இராணுவ அராஜகத்தின் உச்சமாக மாவட்டங்களின் தமிழ் பாடசாலைகளில் சிங்கள மொழியை கற்பிப்பதற்கு படையினர் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கான அனுமதியினை ஜனாதிபதியின் விசேட செயலணி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய மேற்படி மாவட்டங்களின் கல்வி வலயங்களும் பாடசாலைகளில் இராணுவத்தினர் கற்பிப்பதற்கான அனுமதியினை வழங்கியிருக்கின்றன.

இந்நிலையில் 1ம் தவணைக்காக நேற்றய தினம் பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டபோது சிங்கள மொழி கற்பிக்கப்போவதாக கூறிக்கொண்டு, சீருடைகளுடன் இராணுவச் சிப்பாய்கள் பாடசாலைகளுக்குள் நுழைந்திருக்கின்றனர்.

இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கடுமையான குழப்பமடைந்திருக்கின்றனர். இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் மேற்படி இரண்டு மாவட்டங்களினதும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுடன் ஊடகங்கள் பேச முற்பட்டுள்ளன.

ஆனாலும் ஊடகங்கள் என்றவுடன் கல்வி அதிகாரிகள் தொலைபேசியை வைத்துவிட்டு பதறியடித்து ஓடியுள்ளனர். சில அதிகாரிகள் அப்படியா தமக்கு எதுவும் தெரியாதே, நாங்கள் கூட்டமொன்றுக்கு சென்றுகொண்டிருக்கின்றோம் என கூறிக்கொண்டு தப்பியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன், சம்பவம் மிகவும் நகைப்பிற்கும், ஆத்திரத்திரத்திற்குமுரியது என கூறியுள்ளார்.

அதாவது 6வகுப்பு படித்துவிட்டு இராணுவத்தில் இணைந்த படைச்சிப்பாய்கள் எமது பிள்ளைகளுக்கு கற்பிப்பது எவ்வாறிருக்கும் என கேட்டுள்ள அவர், இந்த இழிநிலையினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-05-2013, 02:11.40 AM ]
யாழ்ப்பாண குடாநாட்டில் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட வெசாக் வலயமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
[ Friday, 24-05-2013, 01:52.57 AM ]
 நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
[ Friday, 24-05-2013, 01:48.25 AM ]
தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
[ Friday, 24-05-2013, 01:47.00 AM ]
இலங்கை பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Friday, 24-05-2013, 12:50.12 AM ]
13 வது திருத்தம் மற்றும் மாகாணசபைகளிடம் இருக்கின்ற நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டு. மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
[ Thursday, 23-05-2013 18:20:27 GMT ]
ஈக்குவடார் நாட்டின் முதல் செயற்கைக் கோளான பெகாசஸ், சென்ற மாதம் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது.
[ Thursday, 23-05-2013 11:12:23 GMT ]
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
[ Thursday, 23-05-2013 17:13:15 GMT ]
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 17:03:09 GMT ]
மகன்களை சினிமாவுக்கு கொண்டு வரும் ஆர்வத்தில் நூற்றில் ஒரு பங்கை மகள்கள் விஷயத்தில் எந்த சினிமா தந்தையும் காட்டுவதில்லை.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.