செய்தி
முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரத்தை உருவாக்க ஆளும்கட்சி குழுவொன்று முயற்சி: ஹக்கீம்
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 12:28.29 AM GMT ]

நாட்டில் ஆளும் கட்சியைச் சோ்ந்த சிறிய குழுவொன்று முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரத்தை உருவாக்குவதற்கு முயல்கிறது. மீண்டும் ஒரு கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதே அந்தக் குழுவின் அடிப்படை நோக்கமாகும் என்று நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பிரித்தானியாவிருந்து இலங்கை சுதந்திரமடைந்தபோது முஸ்லிம்கள் அன்று பல பிரச்சினைகளை எதிர்நோக்கினர். அதுபோன்றே 30 வருட யுத்தம் நிறைவடைந்த பின்னரான இன்றும் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் எனவும் அவர்  தெரிவித்தார்.

நேற்று மாலை முஸ்லிம் மகளிர் கல்வி சங்கத்தில் இடம்பெற்ற மறைந்த கலாநிதி டி.பி.ஜாயாவின் 123ஆவது நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு பேருரை வழங்குகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்,

1915ம் ஆண்டு வர்த்தகத்தை மையமாகக் கொண்டு கம்பளையில் சிங்கள – முஸ்லிம் கலகம் தூண்டப்பட்டது. அதே போன்று இன்றும் வர்த்தகத்தை மையமாக கொண்டே கலகத்தை ஆரம்பிக்க முயற்சிக்கின்றனர்.

இந்த தீய நோக்கம் ஹலால் சான்றிதழ் மற்றும் சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை போன்ற பல கோணங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது.

சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை சர்ச்சை மற்றும் ஹலால் சான்றிதழ் பிரச்சினைகள் வர்த்தகத்தின் பின்னணியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் என்ற வகையில் சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் எதிர்வரும் ஜனவரி 8ம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளேன்.

இந்த உரைக்கு தேவையான சகல தரவுகளையும் தற்போது சேகரித்துக்கொண்டிக்கின்றேன்.

அதற்காக பயமில்லாமல் இந்த சர்ச்சைகளின் அடிப்படைகளை தெளிவுபடுத்த வேண்டும். இதனை ஒருபோதும் தனியாக மேற்கொள்ளக் கூடாது.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து இதற்கு எதிராக போராடுவதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளோம்.

பெரும்பான்மை சமூகத்தில் சிறுப்பான்மையினருக்கு ஆதரவாக செயற்படுகின்றவர்கள் உள்ளனர். இவர்களுடன் நாம் இணைந்து இவ்வாறான பிரச்சினைகளுக்கு எதிராக போராட வேண்டும்.

பெரும்பான்மை சமூகத்திலுள்ள சிறிய ஒரு குழுவினரே இன்று இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்றனர். இவர்களுக்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் இனவாத முலாம் பூசுகின்றனர். 

 இந்த இனவாத சக்திகளுக்கு எதிராக கலாநிதி டி.பி.ஜாயா காட்டிய வழியில் பெரும்பான்மை சமூகத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயற்படுகின்றவர்களுடன் இணைந்து போராட வேண்டும் என்றார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 20-06-2013, 02:53.42 AM ]

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதத்தினால் சாதிக்க முயற்சித்தத்தை, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயக ரீதியில் அடைந்துக் கொள்ள முயற்சிப்பதாக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

[ Thursday, 20-06-2013, 02:43.36 AM ]

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை தம்மால் எந்த அளவு மீற முடியும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஏற்கனவே இந்தியாவிடம் காட்டிவிட்டதாக உள்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

[ Thursday, 20-06-2013, 02:38.27 AM ]
13ம் திருத்தச் சட்டம் பலவந்தமான முறையில் இலங்கை மீது திணிக்கப்பட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
[ Thursday, 20-06-2013, 02:36.07 AM ]

13ம் திருத்தச்சட்டம் என்பது வெள்ளை யானையை போன்றது என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

[ Thursday, 20-06-2013, 02:35.18 AM ]
காதலனின் வீட்டுக்குச் செல்ல பொலிஸாரின் உதவியை பாடசாலை மாணவியொருவர் நாடியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 18:43:29 GMT ]
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 20:09:19 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளோம் என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 20:27:33 GMT ]
தனுஷ் நடித்துள்ள ராஞ்சனா என்ற இந்திப் படமும், மரியான் படமும் இம்மாதம் 21ம் திகதி வெளியிடலாமென அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:35:13 ]
மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது.