அரசியல் பின்புலம் உள்ளவர்களே இலங்கையின் அரச வங்கிகளில் கடன்கோருகின்றனர்!- பதவி விலகும் தலைவர்
இலங்கையின் அரசவங்கிகளில் இருந்து அதிகளவானோர் கடன்களை எதிர்ப்பார்ப்பதாகவும், கடன் கோரி விண்ணப்பிப்பவர்கள் அரசியல் பின்புலம் உள்ளவர்களாக காணப்படுகின்றனர் எனவும் பதவிவிலகும் இலங்கை வங்கியின் தலைவர் காமினி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரச வங்கிகளில் அதிகளவானோர் கடன்களை எதிர்ப்பார்க்கின்றனர். இது வங்கித்துறையில் பாரிய சவாலாக விளங்குகிறது என்று விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கடன்களை கோரும் ஒவ்வொரு விண்ணங்களுக்கு பின்னால் அரசியல் இருப்பதாக காணமுடிவதாகவும், இது கடனை மீளப்பெறும் போது பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது பதவி விலகலுக்கு ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவா? என்று அவரிடம் கேட்டபோது அது பதவி விலகலுக்கு காரணம் அல்ல என்று தெரிவித்தார்.
தாம் கடந்த ஆகஸ்டில் பதவிவிலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கிய போதும இன்னும புதிய ஒருவர் இலங்கை வங்கி தலைவர் பதவிக்கு நியமிக்கப்படவில்லை.
எனினும் அந்தப் பதவிக்கு அரசியல் பின்புலம் உள்ளவர் ஒருவரை நியமிக்கவேண்டாம் என்று தாம் ஜனாதிபதியை கேட்டுக்கொள்வதாக விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.