செய்தி
மக்கள் தற்காலிக அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும்: கோத்தபாய ராஜபக்ச
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 02:40.23 AM GMT ]

மக்கள் தற்காலிகமான அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நகர அபிவிருத்தி நடவடிக்கைகளின் காரணமாக மக்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படக் கூடும்.

உலகத் தரத்திலான இயற்கை எழில்மிக்க நகரமாக கொழும்பை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேரிப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்காக பத்தாயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும்.

நகரின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக போதைப் பொருள் கடத்தல், வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் நிறுத்தப்படும்.

உலக வங்கியின் உதவியுடன் அரசாங்கம் பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களை கொழும்பில் முன்னெடுத்து வருகின்றது என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபையின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 26-05-2013, 07:28.30 AM ]
திருகோணமலையில் இருந்து சிறிலங்காவுக்கு எதிராக இலத்திரனியல் போரை நடத்தத் திட்டமிடுவதாக சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.
[ Sunday, 26-05-2013, 07:06.18 AM ]
தமிழர்களை அழிப்பதில் இனவாதக்கட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் மும்முரமாக உள்ளதாக மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
[ Sunday, 26-05-2013, 06:45.06 AM ]
பயன்படுத்தப்படாத காணிகள் என்று சொல்லி, 25,000 ஏக்கர் மலையக தோட்டப்புற காணிகளை தோட்ட நிறுவனங்களிடமிருந்து மீளப்பெற்று, அவற்றை தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு, ஆளுக்கு இரண்டு ஏக்கர்களாக பிரித்து வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
[ Sunday, 26-05-2013, 06:17.29 AM ]
கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்லும் போது மரணமடைந்துள்ளார்.
[ Sunday, 26-05-2013, 06:07.03 AM ]
கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையை அண்மித்த பகுதி தடை செய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
[ Sunday, 26-05-2013 05:36:28 GMT ]
மியான்மரில் மேற்கு பகுதியில் வங்காளதேச எல்லையில் அமைந்துள்ள ராக்கின் மாகாணத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வாழ்கின்றனர்.
[ Sunday, 26-05-2013 04:53:49 GMT ]
திருமண விழாவில் மின்சாரம் தடைபட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காதலனுடன் மணப்பெண் ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 26-05-2013 02:44:35 GMT ]
ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் சாம்பியன் கிண்ணம் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்றாகும்.
[ Sunday, 26-05-2013 05:45:57 GMT ]
ஜப்பானை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சோனி ஆனது நீரிலிருந்து பாதுகாப்புடைய அதிநவீன டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது.
[ Sunday, 26-05-2013 06:44:57 GMT ]
தற்போது தமிழ் திரை உலகின் தலையாய பிரச்சினை கதாநாயகி தெரிவு தான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 26-05-2013 04:57:11 ]
1983ம் ஆண்டு யூலை மாதம் தொடக்கம் 2009 மே மாதம் வரையிலான 26 ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் ஐந்து கட்டப் போர்களை எதிர்கொண்டனா்.