செய்தி
 Photo
விடுதலைக் கனவுடன் இயங்கிய மூச்சை இன்று நாடு இழந்துவிட்டது
[ வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013, 04:57.03 PM GMT ]
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தாயக விடுதலைக் கனவுடன் விடாமூச்சாக இயங்கிய எமது விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து விட்ட ஒரு விடுதலை விரும்பியை எமது நாடு இன்று இழந்து விட்டது.

 ஒரு அற்புதமான ஆளுமை நிறைந்த இனிய மனிதரை இழந்து உலகத்தமிழரெல்லோரும் சோகக்கடலிலே மூழ்கிக் கிடக்கின்றனர்.

மருத்துவர் என்.எஸ் மூர்த்தி என அனைவராலும் அறியப்படும் மருத்துவர். நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் நாட்டு நலனையே முன்னிறுத்தி வாழ்ந்தவர்.

பார்வைக்கும் பழக்கத்திற்கும் இனிமையானவர். அன்பான பேச்சும் அழகான சிரிப்பும் அவரின் ஆளுமையாக மெருகேறி மிளிர்ந்தன. வீண் பகட்டற்ற எளிமையும் அவருக்கேயுரிய உயர்தனிப் பண்புகளும் அவரை நோக்கி எல்லோரையும் ஈர்த்தன.

அவர் தனது இளமைக்காலத்திலேயே தமிழரசுக் கட்சியில் இணைந்து வாலிப முன்னணியின் பேச்சாளராகத் தனது விடுதலைக்கான குரலை ஒலிக்கத் தொடங்கினார்.

தமிழ் மாணவர் பேரவையின் இணைப்பாளராகிச் சிறிலங்கா அரசுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுச் சிறிலங்காக் காவற்துறையாற் காவலில் வைக்கப்பட்டார்.

மருத்துவக் கல்வியை நிறைவுசெய்த பின்னர் தனது பிறப்பிடமாகிய திருகோணமலையில் மருத்துவராகப் பணியாற்றிய அவர் 1983 யூலை இனக்கலவரத்தின் பின் மட்டக்களப்புச் சிறையில் இருந்து தப்பிய இளைஞர்களுக்கு மருத்துவ உதவி புரிந்ததற்காகக் கைது செய்யப்பட்டு வெலிக்கடையில் ஒரு வருடம் சிறை வைக்கப்பட்டார்.

சிங்கள அரசு தமிழ் மக்களை அவர்களின் தாய்மண்ணில் என்றுமே நிம்மதியாக வாழவிடப் போவதில்லை என்பதையும் தனது பேரினவாதக் கொள்கையைக் கைவிட்டு நீதியான ஒரு தீர்வைத் தமிழ் மக்களுக்கு வழங்கப் போவதில்லை என்பதையும் தனது பட்டறிவுகளால் நன்குணர்ந்த மருத்துவர்.

நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் விடுதலைக்கான வழியில் இறுதிவரை சென்று தமிழீழத் தனியரசை அமைப்பதைத் தவிரத் தமிழர்களுக்கு வேறெந்தத் தெரிவுகளுமில்லை என்று கண்டு கொண்டார்.

எமது விடுதலைக்கான பயணத்திற் தன்னையும் இணைத்துக் கொண்டு தமிழ் நாட்டில் நடாத்தப்பட்ட எமது பயிற்சி முகாம்களுக்கு மருத்துவராகினார். அக்காலத்திற் தமிழ் நாட்டிற் பல்வேறு அரசியற் தலைவர்களோடும் நாம் நல்லுறவினை வளர்க்கவும் அரும்பணியாற்றினார்.

1985ல் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதலாவது பொறுப்பாளராகி அதனை வளர்த்தெடுப்பதில் அயராது உழைத்தார். அதன் பின்னர் பிரித்தானியாவை வந்தடைந்து 1992ல் இருந்து 2001 வரை பிரி;த்தானியத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் இணைந்து பணியாற்றினார்.

அக்காலப் பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஐரோப்பிய மண்ணிற் சிறப்பாகச் செயற்படப் பல வகைகளில் ஆலோசனை வழங்கியும் ஊக்குவித்தும் வந்ததோடு அதன் பேச்சாளராகவும் விளங்கினார்.

2001ல் பிரித்தானியாவில் வெண்புறா அமைப்பை நிறுவிப் பல வேலைத் திட்டங்களை வெற்றிகரமாக நடாத்தினார். தாயகத்தின் பெரும்பகுதி ஆழிப்பேரலையாற் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது வெண்புறா நிறுவனத்தின் மூலம் பிரித்தானிய மக்களிடம் பெரும் நிதிதிரட்டி அனுப்பினார்.

வெண்புறா நிறுவனத்தின் மூலம் செயற்கைக்காற் திட்டங்களுக்கும் பெருமளவில் உதவினார். வெண்புறா நிகழ்ச்சிகளுக்காகத் தாயகப்பாடற் போட்டி, தாயகப் பாடல்களுக்கான நடனப் போட்டிகளை நடாத்தி இளம் சந்ததியினர் மத்தியிற் தாயக உணர்வையும் அறிவையும் மேம்படுத்தினார்.

புலம்பெயர் வானொலிகளில் 'நாமும் நலவாழ்வும்' என்ற பயன்தரும் மருத்துவ நிகழ்ச்சித் தொடரைப் பல ஆண்டுகளாகச் செய்து வந்ததோடு, சமகால அரசியல் ஆய்வுகளிலும் பங்கு கொண்டார்.

பிரித்தானிய மண்ணில் மாற்று மருத்துவத்தில் அவர் செய்த சேவைக்காக பிரி;த்தானிய அரச விருதான "சுதந்திர மனிதன்" (FREE MAN) விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.

சிறந்த மருத்துவரும் கலாரசிகரும் சிறந்த மேடைப் பேச்சாளரும் பண்பாளருமாகிய மருத்துவர்.நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் மண்ணையும் மக்களையும் தேசியத் தலைவரையும் மாவீரர்களையும் வாஞ்சையுடன் நேசித்தவர் ஆவார்.

சிறீலங்காவின் சிறைகளிற் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்த அவர் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ஏற்பட்ட மனஅழுத்தங்களால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு இன்று எம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.

மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் இனப்பற்றுக்கும் விடுதலைப்பற்றுக்கும் மதிப்பளித்து அவரின் விடுதலைப் பணியைச் சிறப்பிக்குமுகமாக "மாமனிதர்" என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நாம் பெருமையடைகிறோம்.

தாயக விடுதலை எனும் சத்திய இலட்சியத்தை நெஞ்சில் வரித்து இறுதிவரை அதற்காகவே உழைக்கும் சாதனை மனிதர்களைச் சாவு என்றுமே அழித்து விடுவதில்லை. அவர்கள் நாட்டின் வரலாறாகி மக்களின் மனங்களிலே நீடித்து வாழ்வார்கள்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 20-06-2013, 08:45.24 AM ]
இலங்கையில் பிரிட்டன் காலனியின் ஆட்சி விட்ட தவறை ஏற்றுக் கொள்ளுபடி ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு பிரிட்டன் பிரதமர் கமரூனுக்கு அனுப்பிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.
[ Thursday, 20-06-2013, 08:39.04 AM ]
நுகேகொடை பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
[ Thursday, 20-06-2013, 08:18.00 AM ]
பிரித்தானியாவிலிருந்து சென்னை வந்த இலங்கைத் தமிழ் தம்பதிகளை கடந்த மாதம் கடத்திச் சென்ற தலைமை ஆசிரியை உட்பட்ட 8 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
[ Thursday, 20-06-2013, 07:56.55 AM ]
13 வது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரங்களை குறைத்து 19 வது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை அரசுடன் இணைந்துள்ள தமிழர்கள் எவராலும் எதிர்க்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மாத்திரமே இதற்கெதிராக குரலெழுப்ப முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


[ Thursday, 20-06-2013, 07:44.05 AM ]
கடந்த ஆண்டில் 1600 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
[ Thursday, 20-06-2013 07:11:02 GMT ]
ஈராக்கில் நினேவே மாகாணம் அல்-ஹத்ர் என்ற இடத்தில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் அரசியல் கட்சி தலைவர் உள்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.
[ Thursday, 20-06-2013 08:04:40 GMT ]
இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை தம்பதி களான தவராஜா, ஜலஜா ஆகியோர் கடந்த மே 25ம் திகதி சென்னை வந்த போது விமான நிலையத்திலிருந்து மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றது.
[ Thursday, 20-06-2013 09:02:56 GMT ]
ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற ஜமைக்க வீராங்கனை வெரோனிகா கேம்பெல்-பிரவுன், ஊக்கமருந்து பயன்படுத்தியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
[ Thursday, 20-06-2013 08:00:51 GMT ]
பூமியிலுள்ள இலக்குகளைத் தாக்கவரும் ராக்கட்டுக்களை புவி எல்லையிலிருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் கொண்டு சென்று அழிக்கக்கூடிய அதி உயர் சக்திவாய்ந்த லேசர் கதிர் உருவாக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 20-06-2013 07:26:52 GMT ]
நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசி நடித்த கொமடி வசனங்களை இப்போதும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 20-06-2013 01:46:54 ]
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.