ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் விஜயமாக எதிர்வரும் 12ம்,13ம் திகதிகளில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நிலைமைகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளை ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக ஜனாதிபதி பங்கு பற்றும் நிகழ்வுகள் நடைபெறும் பகுதிகளில் மக்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்கள் அங்காங்கே முகாமிட்டுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதியின் வருiயை முன்னிட்டு விசேட நிகழ்வுகளும் ஏற்பாடாகியுள்ளன.