செய்தி
இந்தியா ஏனைய நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்!- ஜெயலலிதா வலியுறுத்து
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 12:00.17 AM GMT ]
இந்தியா ஏனைய நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்துக்கு பிறகு, முதல்வர் சட்டப் பேரவையில் பதில் உரை அளித்தார்.

அதில் அவர் இலங்கை பற்றி கூறியதாவது,

இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து இங்கே சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்த அரசைப் பொறுத்த வரையில், இடம்பெயர்ந்து இலங்கை முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும். அவர்கள் சிங்களவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.

இந்த நிலை ஏற்படும் வரை இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும்.

இலங்கையில் இனப் படுகொலையை நிகழ்த்தி போர்க் குற்றம் புரிந்தவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த, ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

இது தொடர்பாக, ஏற்கனவே இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை.

இந்தத் தீர்மானத்தின் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மீண்டும் நான் வலியுறுத்துகிறேன்.

சென்ற ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்க ஐக்கிய நாடு ஒரு வலுவான தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக, மத்திய அரசு வாக்களிக்க வேண்டும் என்று நான் பாரதப் பிரதமரை தொடர்ந்து வலியுறுத்தினேன்.

முதலில், அதை ஆதரிப்பது பற்றி எதுவும் தெரிவிக்காத இந்திய அரசாங்கம், பின்னர் எனது தொடர் வலியுறுத்தல் காரணமாக அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. இருப்பினும், அந்தத் தீர்மானத்தின் வலுவை இழக்கச் செய்தவர் பாரதப் பிரதமர்.

இது குறித்து பாரதப் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு எழுதிய கடித்தில், விளக்கியிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நீர்த்துப் போன தீர்மானம் மீதே இலங்கை அரசு இன்னமும் நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில், மீண்டும் ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவில் அமெரிக்க ஐக்கிய நாடு கொண்டு வர உள்ளது என்ற செய்தி வந்துள்ளது.

இது போன்றதொரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில், அமெரிக்க ஐக்கிய நாடு கொண்டு வருவது ஒரு புறம் இருந்தாலும், தமிழர்கள் நலன் கருதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து அதை மற்ற நாடுகளுடன் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் மத்திய அரசை நான் இந்த மாமன்றத்தின் வாயிலாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இதே போன்று, இலங்கைக் கடற்படையினரின் கொடூரச் செயல்களாலும், கொடும் தாக்குதல்களாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதில், மத்திய அரசு தொடர்ந்து அலட்சியப் போக்கினை காட்டி வருகிறது.

இந்திய மீனவர்களின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துமாறும், அவர்களிடம் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறும் இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென்று இந்த மாமன்றத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-05-2013, 12:35.13 PM ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை வீசியதான குற்றச்சாட்டில் இரண்டு தமிழ் இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
[ Thursday, 23-05-2013, 12:03.59 PM ]

ஜனாதிபதியை சந்திக்கும் நோக்கில் பெற்றோரிடம் தெரிவிக்காமல் கொழும்பு நோக்கிப் பயணம் செய்த 2 பாடசாலை மாணவிகள் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

[ Thursday, 23-05-2013, 12:00.26 PM ]
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், முன்னாள் நீதவான் ஒருவரின் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
[ Thursday, 23-05-2013, 11:22.19 AM ]

இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டுக்கு சொகுசு கார்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

[ Thursday, 23-05-2013, 11:05.25 AM ]
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக அமைச்சர் வி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கைபற்றி முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 10:42:36 GMT ]
இஸ்ரேல் நாட்டில் இரண்டாவது அதிபர் இட்ஸ்ஹாக் பென்-சவி, தனது கார் டிரைவரைவிட 40 சதவீதம் குறைவாக சம்பளம் வாங்குகிறார்.
[ Thursday, 23-05-2013 11:12:23 GMT ]
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
[ Thursday, 23-05-2013 11:30:50 GMT ]
நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை இண்டியன்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 13:31:05 GMT ]
கொலிவுட்டில் சிலந்தி படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட இயக்குனர் ஆதிராம், ஷனாகான் நடித்த நடிகையின் டைரி படத்துக்கு நிர்வாகத் தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.