செய்தி
யாழில் செய்தித்தாள் விநியோகிக்கச் சென்றவர்களை பின்தொடர்ந்த மர்ம நபர்கள்
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 08:08.35 AM GMT ]

யாழ்.தினக்குரல் செய்தித்தாள் விநியோகஸ்தர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு சில நாட்களேயாகும் நிலையில், தொடர்ந்தும் பத்திரிகை விநியோகஸ்தர்களை படைப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.

கடந்த 7ம் திகதி பருத்தித்துறை வீதியில் புத்தூர் சந்தியில் வைத்து சி.சிவகுமார் என்ற விநியோகஸ்தர் கடுமையாக தாக்கப்பட்டு தற்போதும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் நேற்றும், இன்றும் அதிகாலையில் செய்தித்தாள் விநியோகத்திற்குச் சென்ற நபர்களை முழுதாக முகத்தை மறைத்துக் கொண்டு பின்தொடர்ந்த நபர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அவர்களிடமிருந்து தப்பியோடிய விநியோகஸ்தர்கள் பொதுமக்களின் வீடுகளில் ஒழிந்திருந்து விட்டு அதிகாலையே செய்தித்தாள்களை விநியோகித்துள்ளனர்.

இதேபோல் அதிகாலையில் பத்திரிகை அலுவலகத்திற்கு முன்பாகவும், முகத்தை முழுதாக மறைத்திருந்த நபர்கள் சிலர் வழக்கத்திற்கு மாறாக நடமாடியுள்ளனர்.

எனவே யாழ்.மாவட்டத்தில் ஊடகத்துறைக்கு எதிரான அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்பது புலனாகின்றது என யாழ் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்..


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 26-05-2013, 03:05.37 AM ]

 இலங்கையில் பொலிசாரின் எதிர்ப்புக்கும் மத்தியில், 1000 குதிரைவலு கொண்ட மோட்டார் சைக்கிள்களை சாதாரண பாதைகளில் செலுத்த அனுமதி வழங்கப்படவுள்ளது.

[ Sunday, 26-05-2013, 03:00.15 AM ]
பொதுநலவாய நாடுகளின் செயலக உறுப்பினர்களை சந்தித்து பேசுவதற்காக லண்டன் சென்றிருந்து இலங்கை வெளிவிவகார அமைச்சின் விசேட குழு நாடு திரும்பியுள்ளது.
[ Sunday, 26-05-2013, 02:56.54 AM ]
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மலேசியா வாக்களித்தமை, சிறிலங்கா கிரிக்கெட்டின் வருமானத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது.
[ Sunday, 26-05-2013, 02:45.04 AM ]

யாழ்ப்பாணத்தில் இராணுவக் குடியிருப்பொன்று அமைக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

[ Sunday, 26-05-2013, 02:28.10 AM ]

நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் அரச சார்பற்ற நிறுவனமொன்று செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

[ Sunday, 26-05-2013 02:00:40 GMT ]
ஜப்பானில் 6 மாதத்துக்கு முன்பு நடந்த தேர்தலில் ஷின்சோ அபே பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்காக அரசு சார்பில் தனி வீடு ஒதுக்கப்பட்டது.
[ Saturday, 25-05-2013 12:10:52 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
[ Sunday, 26-05-2013 02:44:35 GMT ]
ஐபிஎல் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்றாகும்.
[ Saturday, 25-05-2013 07:23:30 GMT ]
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 19:40:13 GMT ]
ஸ்ரீகாந்த், சுனைனா நடிக்கும் நம்பியார் என்ற படத்தில் சந்தானம் இரண்டாவது ஹீரோவாக  நடிக்கின்றார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.