செய்தி
சவூதியில் மாந்தீரிகம் செய்த இலங்கையருக்கு 100 கசையடி! ஒரு வருட சிறை
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 08:25.25 AM GMT ]

சவூதி அரேபியாவில் தனது நண்பருடன் இணைந்து மாந்திரீக வேலைகளில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம், 100 கசையடிகளையும் ஒருவருட சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சவூதியில் வீட்டு சாரதியாக பணிபுரிந்த பிரேமநாத் பெரேராலாகே துங்கசிறி என்ற இலங்கையருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சவூதியின் உள்நாட்டு சட்டத்தை மீறியதோடு, குறித்த இலங்கைப் பணியாளர் இனந்தெரியாத பெண்ணோடு இணைந்து செயற்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சவூதி வீடொன்றில் இருந்த தனது பெண் உறவினரை சந்தித்து, பிரச்சினையை தீர்ப்பதற்காக சென்றபோது தான் கைது செய்யப்பட்டதாக, பெரேராலாகே துங்கசிறி இலங்கை தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

சிறையில் தடுததுவைக்கப்பட்டுள்ள இலங்கையரான துங்கசிறி, மன்னிப்பு வழங்கப்படுவோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டால் அவர் நாடு கடத்தப்படுவார் எனவும் சவூதி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் பதியத்தலாவ பகுதியைச் சேர்ந்த துங்கசிறிக்கு திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 20-05-2013, 06:01.13 PM ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் அனைத்து நிறைவேற்று அதிகாரங்களும் இருக்கும்போது வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அஞ்சத் தேவையில்லை என மல்வத்து மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
[ Monday, 20-05-2013, 05:48.11 PM ]
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
[ Monday, 20-05-2013, 04:30.23 PM ]

தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது எனவும் அவர்கள் தனித்தனி நாட்டில் வாழ வேண்டும் என எதிர்வு கூறும் கைங்காரியத்தின் வெளிப்பாடே பொதுபல சேனாவின் இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு இதை ஏற்காதோர்க்கு இங்கு இடமில்லை என்ற அறிவிப்பு என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.

[ Monday, 20-05-2013, 04:22.19 PM ]
மட்டக்களப்பு, ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியில், சமையல் எரிவாயு சிலிண்டர் லொறியில் இருந்து விழுந்ததால் பாடசாலை மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார்.
[ Monday, 20-05-2013, 04:04.51 PM ]
இலங்கை சிங்கள பௌத்த நாடு என ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற பொதுபலசேனாவின் கருத்தானது எமது அரசியலமைப்பை மீறும் கருத்தாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உபபொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
[ Monday, 20-05-2013 18:17:36 GMT ]
ஈராக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் குறைவாக உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே சமய நம்பிக்கையில் வேறுபாடு காரணமாக மோதல்கள் நடந்து வருகின்றன.
[ Monday, 20-05-2013 08:18:32 GMT ]
திரிபுரா மாநிலத்தில் உள்ள தினசரி நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் 3 பேரை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 20-05-2013 15:22:03 GMT ]
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கி கைதான ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் அஜித் சண்டிலா பற்றி தினசரி புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
[ Monday, 20-05-2013 07:13:25 GMT ]
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம்.
[ Monday, 20-05-2013 14:10:57 GMT ]
கொலிவுட்டில் நா‌ர்‌த்‌ ஈஸ்‌ட்‌ பி‌லி‌ம்‌ பே‌க்‌டரி‌ மற்‌றும்‌ ரங்‌கீ‌லா‌ எண்‌டர்‌பி‌ரை‌சஸ்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌த்‌துள்‌ள படம்‌ உன்‌ வருகை‌க்‌கா‌க லா‌லி‌.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.