செய்தி
''ராஜபக்சவே, திரும்பிப் போ!'' - கொதித்த தமிழகம்... கண்டுகொள்ளாத மத்திய அரசு
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 02:08.13 AM GMT ]
ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிராகத் தமிழகம் தகிக்கிறது! ராஜபக்சவுக்கு எதிராக முதன்முத​லாக தமிழக எல்லையைத் தாண்டி ம.தி.மு.க. சார்பில் மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி சாஞ்சியில் போராட்டம் நடந்தது.

அப்போது ''தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ச இனி இந்தியா வந்தால், அதைக் கண்டிக்கும் விதமாக பிரதமர் வீட்டை முற்றுகையிடுவோம்'' என்று அறிவித்தார் வைகோ.

இந்த நிலையில் பிப்ரவரி 8-ம் தேதி ராஜபக்ஷே திருப்பதி வந்து சாமி கும்பிடுகிறார் என்றவுடன், பிரதமர் வீடு முற்றுகைப் போராட்ட அறிவிப்பை உறுதி​படுத்தினார் வைகோ.

டெல்லி போராட்டத்துக்காக தமிழகம் முழுக்க இருந்து 500 பேர் ரயில் மூலம் கடந்த 5-ம் தேதி புறப்பட்டுச் சென்றனர். சென்னையில் இருந்துச் சென்ற​வர்களை வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

 ''இலங்கையில் 1,607 இந்துக் கோயில்கள் உடைக்கப்​பட்டுள்ளதை நாடாளுமன்றத்தில் சிங்கள அரசு ஒப்புக்கொண்டுள்ளது. தமிழர்கள் வழிபாட்டுத் தலங்களில் சிங்கள இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. புதிது புதிதாக புத்த விகாரைகள் கட்டப்படுகிறது. இந்துக் கோயில்களை உடைத்து நொறுக்குபவன், திருப்பதிக் கோயிலுக்கு உள்ளே நுழைவதை மட்டும் அனுமதிக்கலாமா?'' என்கிறார் வைகோ ஆவேசமாக.

சென்னையில் கடந்த 4-ம் தேதி கருணாநிதி தலை​மையில் நடந்த டெசோ ஆலோசனைக் கூட்டத்தில், ''இலங்கை அதிபர் இந்தியா வருவதை மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது. அவர் வருகையை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அவரது வருகையைக் கண்டித்து, சென்னையில் 8-ம் தேதி கறுப்புச் சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று போராட்டத்துக்கு தி.மு.க-வும் தேதி குறித்தது. விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் இயக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் ஈழ ஆதரவு அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் என போராட்டங்களைக் கையில் எடுத்தனர்.

சென்னை எழும்பூரில் உள்ள் பாங்க் ஆஃப் சிலோன் கிளைக்குள் 7-ம் தேதி மதியம் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் புகுந்து கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினர்.

திருப்பதி வரும் ராஜபக்ஷேவைக் கண்டித்து தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தின் முன்பு 7-ம் தேதி தமிழர் எழுச்சி இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அந்த இயக்கத்தின் பொதுச்​செயலாளர் வேலுமணி, ''இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றச்சாட்டுகள் காரணமாக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் ராஜபக்ச நுழைய முடியாத நிலை உருவாகி உள்ளது.

அமைதியை நாடும் உலக நாடுகளால் வெறுக்கப்படும் ராஜபக்சவை, மத்திய அரசு வரவேற்கிறது. இலங்கைக்கு அருகில் உள்ள இந்தியாவே உறுதுணையாக இருக்கிறது என்று உலக நாடுகளுக்குத் தெரியப்படுத்தவே, ராஜபக்ச அடிக்கடி இந்தியா வருகிறார்.

தமிழகத்துக்கு அருகில் உள்ள, தமிழர்களால் கட்டப்பட்ட திருப்பதிக்கு ராஜபக்ஷே வரும்போது அவரைப் பாதுகாப்பதற்கு முஸ்தீபு காட்டும் அளவுக்குக்கூட, ஈழத்தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

குஜராத்தில் பூகம்பம், கார்கில் பிரச்னை என்றால் இந்தியன் என்ற உணர்வோடு தமிழர்கள் ஓடோடிச் சென்று நிதி கொடுக்கிறோம். உதவி செய்கிறோம். ஆனால், தமிழர்களுக்குக் குரல் கொடுக்க மற்ற திராவிடர்கள்கூட முன்வரவில்லை.

இந்திய அரசும் உதவ மறுக்கிறது. பிற மாநிலங்​களின் ஆதரவும் இல்லை. இந்த நிலையில் தனித் தமிழ்நாடு கோரிக்கை தானாகவே எழுந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. அதை செய்ய இந்திய அரசே தூண்டுவதுபோல அவர்களின் செயல்பாடும் இருக்கிறது'' என்று வருத்தப்பட்டார்.

அண்டை நாட்டு உறவு என்ற பெயரில், கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கொடுமையை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மத்திய அரசு தொடரப் போகிறதோ..!

ஜூனியர் விகடன்


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 10:13.25 AM ]
போர்க்குற்றவாளிகள் இலங்கையில் சுதந்திரப் பறவைகளாக உலாவுகின்றனர் என்று சர்வதேச மன்னிப்புச்சபை சுமத்தியுள்ள குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் அடியோடு நிராகரித்துள்ளது. அத்துடன் போர்க்குற்றம் இடம்பெற்றதற்குத் தகுந்த ஆதாரங்கள் இருப்பின் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
[ Saturday, 25-05-2013, 10:11.50 AM ]
எந்தவொரு நாடோ இனவாதிகளோ இனியும் இலங்கை நாட்டை அபகரிக்க இடமளிக்க முடியாது என பிரதமர் டி.எம். ஜயரட்ண தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013, 09:41.53 AM ]
சட்டவிரோத திருமணம் ஒன்றுக்கு தயாரான இலங்கையர் ஒருவர் சைப்பிரஸ் நாட்டில் கைது செய்யப்டப்டுள்ளார்.
[ Saturday, 25-05-2013, 09:23.26 AM ]
யுவதியொருவரை தொடர்ச்சியாக மிரட்டி வல்லுறவுக்குட்படுத்தி வந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரொருவரை நாரஹெம்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ Saturday, 25-05-2013, 08:50.24 AM ]
சூரியனை சுற்றியுள்ள கோள்களில் மூன்று கோள்கள் முக்கோண பாதையில் தற்போது சுற்றிவருவதை வானத்தில் பார்க்கலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013 08:17:59 GMT ]
துருக்கியில் மதுபானங்கள் விற்பனைக்கு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதோடு, தொலைக்காட்சிகளிலும் மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 10:19:13 GMT ]
பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டார்.
[ Saturday, 25-05-2013 07:50:44 GMT ]
சூதாட்ட புகாரில் கைதான கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தனது ஜெய்ப்பூர் தோழிக்கு பரிசளித்து இருந்த பிளாக்பெர்ரி இசட்10 செல்போனை அப்பெண்ணிடம் இருந்து ஏற்கனவே பொலிசார் பறிமுதல் செய்தனர்.
[ Saturday, 25-05-2013 07:23:06 GMT ]
தொலைத் தொடர்பாடல் வலையமைப்பின் மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் (3G) பயனாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ அழைப்புக்கள் தற்போது உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
[ Saturday, 25-05-2013 07:54:51 GMT ]
கொலவெறி இசையமைப்பாளர் அனிருத், ரஜினிகாந்த் சினிமா குறித்து கூறிய அறிவுரையால் குழப்பத்தில் காணப்படுகிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 24-05-2013 12:30:12 ]
'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.