செய்தி
உள்ளூராட்சி சபைகளில் நிலவும் வெற்றிடங்களை பழைய முறைப்படி நிரப்ப முடியும்: சட்ட மா அதிபர்
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 09:49.05 AM GMT ]
உள்ளூராட்சி சபைகளில் நிலவும் வெற்றிடங்களை பழைய முறைப்படி நிரப்ப முடியும் என்று சட்ட மா அதிபர் அறிவித்துயுள்ளார்.

காலி மாநகர சபையின் தலைவர் பதவி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்தை மீள்நிரப்புவது தொடர்பில், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சட்ட மா அதிபரிடம் விளக்கம் கோரியிருந்தது.

தற்போது புதிய உள்ளூராட்சி சட்ட மூலம் நடைமுறையில் உள்ள நிலையில், இந்த பதவியை மீள்நிரப்புவதில் நெருக்கடி நிலவுவதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

திடீர் வெற்றிடங்களை மீள்நிரப்ப புதிய சட்டத்தில் இடமளிக்கப்படாமையே இதற்கான காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராய்ந்த பின்னர், பழைய முறையின் கீழ் குறித்த மாநகரசபைக்கு புதிய தலைவரை நியமிக்க முடியும் என்று சட்ட மா அதிபர் விளக்கமளித்துள்ளார்.

இதன்படி, அடுத்த விருப்பு வாக்கு பட்டியலில் பதவி நீக்கப்பட்ட முன்னாள் தலைவருக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 05:38.36 PM ]
மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் யுத்தகளத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவேந்தும் நாளாகவே உணரப்படுவதாகவும், விடுதலைப்புலிகளை நினைவு கூர்ந்ததாக கூறப்படுவதில் எந்தவொரு உண்மையும் இல்லையெனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
[ Tuesday, 21-05-2013, 04:21.00 PM ]
புனர்வாழ்வு பெற்றுவருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எஞ்சியுள்ள 340 முன்னாள் போராளிகளையும் இந்த வருட இறுதிக்குள் விடுவிக்க எதிர்பார்க்கப்படுவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு குறிப்பிடுகின்றது.
[ Tuesday, 21-05-2013, 04:09.15 PM ]

இலங்கையில் இவ்வருடத்தின் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான காலத்தில் 34 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

[ Tuesday, 21-05-2013, 02:57.53 PM ]

அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டம் கிடையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 02:46.37 PM ]

வவுனியா கனகராயன்குளத்தில் மாற்றுத் திறனாளியான 18 வயது யுவதியொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Tuesday, 21-05-2013 17:34:52 GMT ]
தார்மீக குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தானில் பெருகி வருகின்றது.
[ Tuesday, 21-05-2013 12:20:54 GMT ]
தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 09:30:28 GMT ]
இந்திய அணியுடன் மோதும் போட்டி எப்போதுமே ஸ்பெஷலானது என்கிறார் பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ்.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Tuesday, 21-05-2013 12:10:08 GMT ]
மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.