தமிழ் நாட்டில் இருந்து வந்து இலங்கை குடியகழ்வு விதிகளுக்கு முரணாக தொழில் செய்து வந்த நிலையிலேயே இவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பெரியபோரதீவில் வேளான்மை இயந்திரத்தில் தொழில் செய்து கொண்டிருக்கும் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.