இதனையடுத்து உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வேண்டி நாம் தமிழர் கட்சியினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த 4-ந் தேதி நடந்த இந்த வழக்கு விசாரணையில், நாம் தமிழர் கட்சியினரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதனையடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள சீமான் நேற்று இரவு புதுவை வந்தார்.
இன்று காலை அவரது தலைமையில் புதுவை சுதேசிமில் அருகே நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் புதுவை மாநில தலைவர் முகமது ரபீக், பொறுப்பாளர் அருமைதாஸ் மற்றும் நிர்வாகிகள் கௌரி, வத்சலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
